Published:Updated:

வாழ்த்துவோம்... வரவேற்போம்!

வாழ்த்துவோம்... வரவேற்போம்!

வாழ்த்துவோம்... வரவேற்போம்!

வாழ்த்துவோம்... வரவேற்போம்!

Published:Updated:

னைவருக்கும் பசுமை வணக்கம்!

''ஏரிகளை சுத்தம் செய்ய மக்கள் முன்வரவேண்டும்!'' என்று அழைப்பு விடுத்திருக்கிறார்... திரைப்பட நடிகர் கமல்ஹாசன்.

தான் உருவாக்கியிருக்கும் 'தூய்மை இந்தியா’ திட்டத்தில் இணைந்துகொள்ள கமல்ஹாசன் உள்ளிட்ட பிரபலங்கள் பலருக்கும் அழைப்பு விடுத்திருந்தார், பிரதமர் நரேந்திர மோடி. இதை ஏற்றுகொண்டுவிட்ட கமல்ஹாசன், மற்றவர்களைப் போல தெரு கூட்டுவதற்காக கையில் துடைப்பத்தைத் தூக்காமல், தன்னுடைய 60ம் பிறந்த நாளன்று, சென்னை அருகேயுள்ள மாடம்பாக்கத்தில் இருக்கும் ஏரியை சுத்தம் செய்ய ஆரம்பித்துவிட்டார் தன் ரசிகர்களுடன்! 'ஏரி என்பது மக்களின் சொத்து. பொதுமக்களும் இந்தப் பணியில் இணைய வேண்டும்’ என்றும் சொல்லியிருக்கிறார் கமல்ஹாசன்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கட்-அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்வது, படம் வெளியாகும் அன்று திரையரங்குகளை அதகளப்படுத்துவது... போன்றவைதான் பெரும்பாலான ரசிகர் மன்றங்களின் வழக்கம். ஆனால், இதுபோன்ற வேலைகளில் தன்னுடைய ரசிகர்களை அனுமதிக்காமல், நற்பணிகளில் மட்டுமே ஈடுபடுத்தும் நடிகர்களில் ஒருவரான கமல்ஹாசன், நாட்டின் உயிராதாரங்களில் ஒன்றான ஏரிகளைச் சுத்தம் செய்யப் புறப்பட்டிருப்பது... ஒட்டுமொத்த விவசாயிகளின் வாழ்த்துக்களுக்கும் உரித்தான ஒன்று. அதேசமயம், இந்த வாழ்த்துக்களுக்கு நன்றிக் கடனாக, 'ஒரு நாள் கூத்துக்கு மீசை வைத்த கதை’ என்பது போல இருந்துவிடாமல், தொடர்ந்து இதுபோன்ற பணிகளை அவர் முன்னெடுக்க வேண்டும்.

கணக்கிட முடியாத கோடிகளைக் கொட்டி நதிகளை இணைப்பதைவிட, ஊர் மக்களின் உழைப்புடன் ஏரி, குளங்களை தூர் வாரி, மழை நீரைச் சேமிக்கும் முயற்சியே.... வளம்குன்றாத சுற்றுச்சூழலை உருவாக்கும் என்பதை உணர்ந்து, பிற நடிகர்களும், பல்வேறு துறைகளில் புகழ்பெற்றிருக்கும் பிரபலங்களும்கூட களத்தில் இறங்க வேண்டும். அப்போதுதான் எஞ்சியிருக்கும் ஏரி, குளங்களையாவது காப்பாற்ற முடியும்!

ஆசிரியர்

வாழ்த்துவோம்... வரவேற்போம்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism