பிரீமியம் ஸ்டோரி
தண்டோரா

'தண்டோரா’ பகுதியில் இடம்பெறும் நிகழ்ச்சிகளில் கடைசி நேர மாறுதல்கள் ஏற்படலாம். எனவே, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், அமைப்புகள் ஆகியவற்றிடம் நிகழ்ச்சி குறித்தத் தகவல்களை தொலைபேசி அல்லது செல்போன் வாயிலாக, முன்கூட்டியே உறுதிசெய்த பின், பயண ஏற்பாடுகளைச் செய்யவும்.  

- ஆசிரியர்

தேனீ வளர்ப்பு!

ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிபாளையம் மைராடா வேளாண் அறிவியல் மையத்தில் டிசம்பர் 24-ம் தேதி ஆடு வளர்ப்பு; 29-ம் தேதி இயற்கை பண்ணையம்; 30-ம் தேதி தேனீ வளர்ப்பு; 31-ம் தேதி பயிர் ரகங்களின் பாதுகாப்பு மற்றும் விவசாயிகள் உரிமைச் சட்டம் பற்றிய விழிப்பு உணர்வுப் பயிற்சி ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு செய்துகொள்ளவும்.

தொடர்புக்கு, தொலைபேசி: 04285-241626

தண்டோரா

நாட்டுக்கோழி!

சிவகங்கை மாவட்டம், குன்றக்குடி வேளாண் அறிவியல் மையத்தில் டிசம்பர் 18-ம் தேதி நாட்டுக்கோழி வளர்ப்பு; 19ம் தேதி சிறுதானியங்களில் மதிப்புக்கூட்டிய பண்டங்கள் தயாரித்தல்; 23-ம் தேதி மானாவாரி பருத்தியில் பூச்சி மற்றும் நோய் கட்டுப்படுத்தும் முறைகள் ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு செய்துகொள்ளவும்.

தொடர்புக்கு, தொலைபேசி: 04577-264288

 மிளகாய்!

தூத்துக்குடி மாவட்டம், வாகைகுளம், ஸ்காட் வேளாண் அறிவியல் மையத்தில் டிசம்பர் 12-ம் தேதி மிளகாய் சாகுபடியில் அதிக மகசூல் பெற மெத்திலோ பாக்டீரியத்தின் பங்கு; 16-ம் தேதி வெள்ளாடு வளர்ப்பு; 19-ம் தேதி தரம் உயர்த்தப்பட்ட புறக்கடைக் கோழி வளர்ப்பு; 20-ம் தேதி அதிக வருவாய் பெற விதை உற்பத்தித் தொழில்நுட்பங்கள் ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு செய்துகொள்ளவும்.

தொடர்புக்கு, தொலைபேசி: 04612-269306, செல்போன்: 9942978526

காளான்!

தண்டோரா

சிவகங்கை மாவட்டம், பிள்ளையார்ப்பட்டி பஞ் சாப் நேஷனல் வங்கி உழவர் பயிற்சி நிலையத்தில் டிசம்பர் 23-ம் தேதி நவீன முறையில் காளான் வளர்ப்பு; 26-ம் தேதி வணிக ரீதியில் காடை வளர்ப்பு; 29-ம் தேதி வியாபார ரீதியில் அப்பளம் தயாரிப்பு ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு செய்துகொள்ளவும்.

தொடர்புக்கு, செல்போன்: 9941647893, 9488575716

கருத்தரங்கு!

காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் வட்டம், அரியனூர் கிராமத்தில் உள்ள முன்னோடி இயற்கை விவசாயி அரியனூர் ஜெயச்சந்திரன் தோட்டத்தில் டிசம்பர் 20-ம் தேதி கரிம விவசாயக் கருத்தரங்கு நடைபெற உள்ளது. முன்னோடி விவசாயி சத்தியமங்கலம் சுந்தரராமன், மூத்த வேளாண் விஞ்ஞானி அரு.சோலையப்பன் உள்ளிட்டோர் கருத்துரை வழங்க இருக்கிறார்கள்.

ஏற்பாடு: கரிம விவசாயக் கட்டமைப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு

தொடர்புக்கு, செல்போன்: 9444894181, 9443331393

அங்கக உரத் தயாரிப்பு!

கன்னியாகுமரி, விவேகானந்த கேந்திராவில் 2015, ஜனவரி 2 மற்றும் 3-ம் தேதிகளில் வியாபார நோக்கில் அங்கக உரம் (பயோ  உரம்) தயாரித்தல் பயிற்சி நடைபெற உள்ளது. இப்பயிற்சியில் கலந்து கொள்பவர்களுக்கு தனியாக வழிநடத்துதல் பயிற்சியும் அளிக்கப்படும்.

பதிவுக் கட்டணம் 100 ரூபாய். உணவு, தங்கு மிடம் இலவசம். முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே அனுமதி.

தொடர்புக்கு, தொலைபேசி: 04652-246296, செல்போன்: 8220022205

இ.மெயில்: azollapillai@gmail.com

அறிவிப்பு

தண்டோரா பகுதியில் இடம்பெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் விவசாயிகள், நிகழ்ச்சிகள் குறித்த நிறைகுறைகளை உடனுக்குடன் தெரிவிக்க 044-66802927 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளுங்கள். அங்கே கணினிக் குரல் வழிகாட்டும். அதற்கேற்ப 3 நிமிடங்களுக்குள், உங்கள் கருத்தைப் பதிவுசெய்யுங்கள். எதிர் முனையில் உங்களுடன் உரையாட யாரும் இருக்க மாட்டார்கள். எனவே, அந்த 3 நிமிடங்கள் முழுக்க முழுக்க உங்களுக்கே! அவசியமென்றால், நாங்களே உங்களைத் தொடர்பு கொண்டு, மேலும் விவரங்களைப் பெற்றுக்கொள்வோம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு