Published:Updated:

செந்நெல்...

‘தமிழகத்தில் இல்லை... ஒடிசாவில் இருக்கிறது!’திருவிழாகு.முத்துராஜா, படங்கள்: கு.பாலச்சந்தர்

பிரீமியம் ஸ்டோரி

ர்வதேச தாவர உணவாளர்கள் சங்கமத்தின் 42-வது உலக இயற்கை உணவுத் திருவிழா, சென்னை, அண்ணா பல்கலைக்கழகத்தில் நவம்பர் 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்ட இந்நிகழ்ச்சியில் தாவர உணவுகளின் பயன்களைப் பற்றி உள்நாட்டு, வெளிநாட்டு அறிஞர்கள் பலர் உரையாற்றினார்கள்.

செந்நெல்...

விழாவில், வாரமிருமுறை வெளியாகும் 'ஜூனியர் விகடன்’ இதழில் தொடராக வெளிவந்த 'உணவு யுத்தம்’, விகடன் பிரசுரம் சார்பில் நூலாக வெளியிடப்பட்டது. இந்த நூலின் ஆசிரியரும், எழுத்தாளருமான எஸ்.ராமகிருஷ்ணன் நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசினார். அப்போது, ''நம்முடைய மண் சார்ந்த பாரம்பரிய உணவுகளை, இன்று நம் ஊரில் சாப்பிட முடியாது. ஆனால், வெளிநாடுகளில் சாப்பிடலாம். சாலையோரங்களில் வெளிநாட்டு, வெளிமாநில உணவுக் கடைகளைத் தாராளமாகத் திறந்து வைத்துள்ளனர். ஆனால், நம் உணவுகளை இந்த மாதிரியான விழாக்களில் மட்டும்தான் காணமுடிகிறது. சர்க்கரை, புளி என்று ஒவ்வொரு உணவுப் பொருளுக்குப் பின்னும் ஒரு மாபெரும் அரசியல், பன்னாட்டு நிறுவனங்களின் சதி நடைபெற்றுக் கொண்டேயிருக்கிறது.

ஒவ்வொரு நான்கு மணி நேரத்துக்கும் உணவு முறைகள் மாறிக்கொண்டே வருகின்றன. பீட்சா, பர்கர், நூடுல்ஸ் போன்ற வற்றை சாப்பிடச் சொல்லி விளம்பரங்கள் வருகின்றன. நம் உணவு வகைகளை மறைத்தே இதையெல்லாம் செய்கின்றனர். போகப்போக ரெடிமேட் உணவுப் பொருட்கள்தான் அதிக புழக்கத்துக்கு வரப்போகிறது.

சங்க இலக்கியத்தில் சொல்லப்பட்ட 'செந்நெல்’ இன்று தமிழ் மண்ணில் இல்லை. ஆனால், ஒடிசாவில் கோரக்பூர் மலைவாழ் மக்கள் இன்றும் செந்நெல் பயிர் செய்கின்றனர். பூரி, ஜெகநாதர் கோயிலில் தினமும் ஒரு பாரம்பரிய அரிசி வீதம், 365 நாட்களுக்கும் பொங்கல் செய்து உணவு படைக்கின்றனர்'' என்றெல்லாம் சொன்னவர்,''ஒடிசாவை ஒப்பிடும்போது, தமிழகத்தில் பாரம்பரிய நெல் வகைகளின் எண்ணிக்கை குறைவுதான்'' என்று தன் ஆதங்கத்தையும் வெளிப்படுத்தினார்.

நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக 'சர்வதேச தமிழ் தாவர உணவாளர்கள் சங்கமம்’ என்ற அமைப்பு தொடங்கப்பட்டது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு