Published:Updated:

காவிரி...

கைகோக்கும் கட்சிகள்... மாறும் காட்சிகள்!போராட்டம்கு.ராமகிருஷ்ணன், படங்கள்: கே.குணசீலன்

பிரீமியம் ஸ்டோரி

ட்சி பேதமின்றி, அனைத்து அரசியல் கட்சிகளையுமே காவிரி டெல்டா மாவட்டங்களில் உள்ள விவசாயிகள் மனதாரப் பாராட்டுகிறார்கள்; நெஞ்சார நன்றி தெரிவிக்கிறார்கள். காரணம், இதுகாலம் வரை பிரிந்து பிரிந்து நின்றிருந்த அனைத்து அரசியல் கட்சிகளும்... காவிரி விஷயத்தில் ஒன்றாகக் கைகோத்து, விவசாயத்துக்காக குரல் கொடுக்க ஆரம்பித்திருப்பதுதான்!

காவிரி...

காவிரியின் குறுக்கே மேக்கேதாத் என்ற இடத்தில், இரண்டு புதிய தடுப்பணைகள் கட்டுவதற்கான ஆயத்த வேலைகளில் கர்நாடக அரசு இறங்கியுள்ள நிலையில் தஞ்சை, நாகை, திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் தொடர் போராட்டங்கள் அனல் பறக்கின்றன. முதற்கட்டமாக கடந்த நவம்பர் 22-ம் தேதி ஒரு போராட்டம் நடைபெற்றது. இதில் பெரும்பாலான கட்சிகள் பங்கேற்றன. அடுத்து டிசம்பர் 4-அன்று நடைபெற்ற போராட்டத்தில் கம்யூனிஸ்டுகள், தி.மு.க, திராவிடர் கழகம், விடுதலைச் சிறுத்தைகள், தமிழ் மாநில காங்கிரஸ், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கைகோக்க... 500-க்கும் மேற்பட்ட இடங்களில் சாலை மறியல் மற்றும் ரயில் மறியல் போராட்டங்கள் நடந்தன. முக்கிய நிர்வாகிகள், சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் மத்திய, மாநில அமைச்சர்கள் பலரும் பங்கேற்றது, ஒற்றுமையைப் புலப்படுத்துவதாக இருந்தது.

காவிரி...

கடும் வறட்சி காரணமாக விவசாயிகளின் தற்கொலை மற்றும் அதிர்ச்சி மரணங்கள் நிகழ்ந்த போதிலும்கூட, பிரதான அரசியல் கட்சிகள், கர்நாடகாவுக்கு எதிராக பெரிய அளவிலான போராட்டங்களை முன்னெடுக்கவில்லை. ஆனால், 'கர்நாடகாவில் புதிதாக அணைகள் கட்டப்பட்டால், இனி காவிரியின் வெள்ளநீரும் கூட தமிழகத்துக்கு வந்து சேராது’ என்கிற பதற்றத்தில் டெல்டா விவசாயிகள் பரிதவித்துக் கொண்டிருக்கிறார்கள். 'இனியும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தால், தமிழக விவசாயிகளும் பொதுமக்களும் நம்மை புறக்கணிக்கக்கூடும்’ என்கிற அச்சமே,’ அனைவரையும் தற்போது ஒன்றிணைத்திருக்கிறது!

தொடரட்டும் இந்த ஒற்றுமை!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு