Published:Updated:

ஆழ்வாரும், அண்ணனும்!

நினைவுகள்கு.ராமகிருஷ்ணன், படங்கள்: கே.குணசீலன்

''எங்க அண்ணன் பாலகிருஷ்ணன் சொல்லுவாரு...'  நம்மாழ்வார், தான் கலந்து கொள்ளும் கூட்டங்களில் பெரும்பாலும் இப்படிக் குறிப்பிடுவதுண்டு.

ஆழ்வாரும், அண்ணனும்!

 நம்மாழ்வாரின் இதயத்தில் இடம்பெற்று இருந்தவர்களில் மிக முக்கியமானவர், அண்ணன் பாலகிருஷ்ணன். தற்போது, 88 வயதாகும் இவரை, தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள பூர்வீக கிராமமான இளங்காட்டில் சந்தித்தோம்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
ஆழ்வாரும், அண்ணனும்!

மிகவும் சன்னமான குரலில் பேசியவர், 'நானும், தம்பி ஆழ்வாரும் நண்பர்கள் போலதான் இருப்போம். ஆனாலும் எங்களுக்குள்ள மாறுபட்ட கருத்துக்களோடு விவாதங்கள் அனல் பறக்கும். பெரும்பாலும் ஆழ்வார்கிட்ட இருந்துதான் எதிர்க்கேள்விகள் கிளம்பும். பள்ளி மாணவராக இருக்கும் போதிருந்தே ஆழ்வாரோட சிந்தனை தனித்துவமாதான் இருக்கும். 'கோழி எரு ரொம்ப நல்ல இயற்கை எரு’னு நான் சொல்லுவேன். 'அதெப்படி எல்லா கோழிகளோட எருவுமே இயற்கை எருவா இருக்க முடியும். ரசாயன உரங்கள் போட்டு வளர்ந்த தீவனத்தைச் சாப்பிட்ட கோழிகளோட கழிவுகளை எல்லாம், ரசாயன உரம்னுதான் சொல்லணும்’னு ஆழ்வார் சொல்லுவாரு.

என்கிட்ட இலக்கியப் பாடல்களை எல்லாம் பாடச்சொல்லி கேட்பார். புராணங்கள், இதிகாசங்கள் பத்தியெல்லாம் எடக்கு மடக்கா கேள்வி கேட்டு திணறடிப்பார். கோவில்பட்டியில அரசு வேலையில ஆழ்வார் இருந்தப்ப, நான் உத்திரப்பிரதேச மாநிலம் கான்பூர்ல கிராம்டன் கம்பெனியில இன்ஜினியரா இருந்தேன். அடிக்கடி கடிதம் எழுதிக்கிட்டே இருப்போம்.

'பயிர்களுக்கு நீலப்பச்சைப் பாசி போட்டால், நல்லா விளைச்சல் கொடுக்கும்’னு சுப்ரமணிய அய்யங்கார்ங்றவரு, ஆங்கில நாளேட்டுல கட்டுரை ஒண்ணு எழுதி இருந்தார். அப்ப அது புது விஷயமா பரபரப்பா பேசப்பட்டுச்சு. நான் ஆழ்வாருக்கு அதைப் பத்தி ஆர்வத்தோடு கடிதம் எழுதினேன். ஆச்சரியம்! அவரும் அதே விஷயத்தைப் பத்தி அப்பவே எனக்கு கடிதம் எழுதியிருந்தார். 82-ம் வருஷம், பணி ஓய்வுக்கு பிறகு, நேமம்ங்கற ஊர்ல 3 ஏக்கர் நிலம் வாங்கி, முழுமையா மரங்களை சாகுபடி செஞ்சேன். 'இது திருட்டு போகாது. நாம தினமும் போயி பராமரிக்க வேண்டியதும் இல்லை’னு சொன்னேன். பல கூட்டங்கள்ல ஆழ்வார் இதை நினைவு கூர்ந்திருக்கார்' என மென்மையாகப் புன்னகைத்தார் பாலகிருஷ்ணன்.