Published:Updated:

‘காங்கிரஸ், பி.ஜே.பி, கருணாநிதி, ஜெயலலிதா யாரையும் நம்பாதீங்க!’

காவிரிப் போரில் சாட்டை வீசும் அய்யர்போராட்டம்

பிரீமியம் ஸ்டோரி
‘காங்கிரஸ், பி.ஜே.பி, கருணாநிதி, ஜெயலலிதா யாரையும் நம்பாதீங்க!’

'காவிரியின் குறுக்கே புதிய அணைகளைக் கட்டியே தீருவோம்’ என பிடிவாதம் பிடிக்கும் கர்நாடக அரசுக்கு எதிராக எந்நேரமும் போராட்டத் தீ கொளுந்துவிட்டு எரிந்த படியே இருக்கிறது டெல்டா பிரதேசமான தஞ்சை, நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில்! அனைத்து அரசியல் கட்சிகளும் களத்தில் இறங்கி, புதிய அணைக்கு எதிராகப் போராடி வருகின்றன.

ஏற்கெனவே மாவட்டங்கள் தழுவிய அளவில் கடையடைப்பு நடத்தப் பட்டிருக்கும் நிலையில், டிசம்பர் 7 அன்று தே.மு.தி.க தொண்டர்கள் சுமார் ஆயிரம் பேர் தஞ்சாவூரில் ரயில் மறியல் போராட்டம் நடத்தினார்கள். மறுநாள் 8-ம் தேதி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் தலைமையில் சுமார் ஐயாயிரத்துக்கும் அதிகமான தொண்டர்கள் தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். டிசம்பர் 12-ம் தேதி ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் பிரசாரப் பயணம் ஆரம்பமாகியிருக்கிறது. டிசம்பர் 20-ம் தேதியன்று நடிகர் சரத்குமார் தலைமையில், அவருடைய சமத்துவ மக்கள் கட்சியினர் கும்பகோணத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இத்தகையப் போராட்டங்களின் ஒரு கட்டமாக, டெல்டா விவசாயிகள் 200 பேர் டெல்லிக்குச் சென்று டிசம்பர் 15, 16, 17 ஆகிய மூன்று நாட்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி மத்திய அரசின் கவனத்தை ஈர்த்துள்ளனர்.

‘காங்கிரஸ், பி.ஜே.பி, கருணாநிதி, ஜெயலலிதா யாரையும் நம்பாதீங்க!’

தமிழக விவசாயிகள் ஒருங்கிணைப்புக் குழு நிர்வாகிகளான பி.ஆர்.பாண்டியன், 'நெல்’ ஜெயராமன் உள்ளிட்டோர் இதற்கான முயற்சிகளை மேற்கொண்டார்கள். இதில் பங்கேற்ற தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்புச் சங்கத்தின் செயலாளர் சுவாமிமலை சுந்தரவிமலநாதன் அங்கிருந்தபடியே நம்மிடம் பேசியபோது, போராட்டத்தை வாழ்த்திப் பேச வந்திருந்த முன்னாள் மத்திய அமைச்சர் மணிசங்கர் அய்யர், 'காங்கிரஸ் கட்சியை நம்பாதீங்க; பாரதிய ஜனதாவை நம்பாதீங்க; கருணாநிதி, ஜெயலலிதாவையும்கூட நம்பாதீங்க; இவங்க யாராலும் நமக்கு நல்லது நடக்காது. நீதிமன்றத்தை நாடினால்தான் நியாயம் கிடைக்கும்’ என்று வெளிப்படையாகப் பேசி எங்களையெல்லாம் திரும்பிப் பார்க்க வைத்துவிட்டார்'' என்று சொன்னார்.

- கு.ராமகிருஷ்ணன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு