Published:Updated:

‘பசுமை என் உயிர்!’

கருத்தரங்குசெ.தினேஷ்குமார், பா.குமரேசன், மு.ரமேஷ், படங்கள்: அ. நவின்ராஜ்

பிரீமியம் ஸ்டோரி

'னியெல்லாம் இயற்கையே... நாமும் நம்மாழ்வாரும்’ என்ற தலைப்பில் 'பசுமை விகடன்’ மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் விழிப்பு உணர்வு இயக்கம் ஆகியவை இணைந்து, திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டையில் கடந்த 21-ம் தேதி, ஒரு நாள் கருத்தரங்கை நடத்தின. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து கிட்டத்தட்ட 450 விவசாயிகள் பங்கேற்றனர்.

‘பசுமை என் உயிர்!’

நிகழ்ச்சியின் தொடக்கத்தில் இயற்கை விவசாயத்தின் அவசியத்தை உணர்ந்து இயற்கையைப் பரப்பி, இயற்கையோடு ஒன்றி பல விவசாயிகளுக்கு வழிகாட்டியாக அன்றும் இன்றும் என்றும் வாழும் 'இயற்கை வேளாண் விஞ்ஞானி’ நம்மாழ்வார் நினைவாக வேப்பங்கன்று நடுதல், நம்மாழ்வாரின் புகைப்படத்துக்கு வேப்பிலை மாலை அணிவித்தல் மற்றும் ஆனந்த விகடன் குழுமங்களின் சேர்மன் எஸ்.பாலசுப்ரமணியன் மறைவுக்கு அஞ்சலி ஆகிய நிகழ்வுகளுடன் கருத்தரங்கு ஆரம்பமானது!

‘பசுமை என் உயிர்!’

விவசாயிகள் விழிப்பு உணர்வு இயக்கத்தின் மாநிலத் தலைவர் வேலாயுதம் முன்னிலை வகிக்க, துணைத்தலைவர் டாக்டர். பாலசுப்பிரமணியன் தலைமையுரை வழங்கினார். மாநிலச்செயலாளர் தளி மோகனசுந்தரம் மற்றும் துணைச்செயலாளர் நாராயணசாமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

இதையடுத்து... 'பணம் கொழிக் கும் பந்தல் காய்கறிகள்’கேத்தனூர் பழனிச்சாமி; 'லாபம் தரும் சம்பங்கி’ 'தவசிமடை’ மருதமுத்துவாசுகி; 'நடமாடும் உரத்தொழிற்சாலைகள் நாட்டு மாடுகள்’கரூர் கணேசன்; 'இனிப்பான வருமானம் தரும் தேனீ வளர்ப்பு’ தண்டாயுத பாணி; 'சிறப்புமிகு சிறுதானியங்கள்’ 'பாமர தீபம்’ பார்த்திபன் என்று ஒவ்வொருவரும் தங்களுக்கான தலைப்பில் அனுபவங்களைப் பகிர்ந்தார்கள்!

‘பசுமை என் உயிர்!’

நிறைவாக, சென்னையிலிருந்து கருத்தரங்கில் பங்கேற்க வந்திருந்த வாசகி தபஸ்மணி பாஸ்கரன், ''எனக்கு ஒண்ணரை ஏக்கர் நிலமிருக்கு. ஆனா, இதுவரைக்கும் விவசாயம் செய்யவே இல்ல. தொடர்ந்து பசுமை விகடன் படிச்சுக்கிட்டிருப்பேன். நான் ஊருக்குப் போனாலும் பசுமை விகடனைத் தேடிப்பிடிச்சு வாங்கி வந்து என் வீட்டுல வெச்சுடுவாங்க. இந்தப் பயிற்சியில கலந்துகிட்ட பிறகு, உடனடியா ஒண்ணரை ஏக்கர் நிலத்துல விவசாயத்தை ஆரம்பிக்கப் போறேன். நம்மாழ்வாரை பசுமை விகடன் மூலமாதான் எனக்குத் தெரியும். பசுமை விகடன் என்னோட உயிர்'' என்று சொன்னவர், கண் கலங்கினார்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு