பிரீமியம் ஸ்டோரி
தண்டோரா

'தண்டோரா’ பகுதியில் இடம்பெறும் நிகழ்ச்சிகளில் கடைசி நேர மாறுதல்கள் ஏற்படலாம். எனவே, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், அமைப்புகள் ஆகியவற்றிடம் நிகழ்ச்சி குறித்தத் தகவல்களை தொலைபேசி அல்லது செல்போன் வாயிலாக, முன்கூட்டியே உறுதிசெய்த பின், பயண ஏற்பாடுகளைச் செய்யவும். அரசு வேலை நாட்களில், காலை 10 முதல், மாலை 5 மணி வரை மட்டுமே தொடர்புகொள்ளவும்.  

 - ஆசிரியர்

நாட்டுக்கோழி!

சேலம் கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் டிசம்பர் 30-ம் தேதி நாட்டுக்கோழி வளர்ப்பு; ஜனவரி 5-ம் தேதி கறவைமாடு வளர்ப்பு ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு செய்துகொள்ளவும்.

தொடர்புக்கு, தொலைபேசி: 04272410408

வெண்பன்றி!

நாமக்கல், வேளாண் அறிவியல் மையத்தில் ஜனவரி 20-ம் தேதி மண்புழு உரம் மற்றும் வெர்மி வாஸ் (செறிவூட்டப்பட்ட நீர்) உற்பத்தி செய்யும் முறைகள்; 22-ம் தேதி வீரிய ஒட்டு ரக தர்பூசணி சாகுபடித் தொழில்நுட்பங்கள்; 27-ம் தேதி வெள்ளாடு வளர்ப்பில் குட்டிகள் இறப்பைத் தடுத்தல் மற்றும் நோய் வராமல் பாதுகாத்தல்; 29-ம் தேதி வெண்பன்றி வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு செய்துகொள்ளவும்.

தொடர்புக்கு, தொலைபேசி: 04286266345

அங்கக உர தயாரிப்பு!

கன்னியாகுமரி, விவேகானந்த கேந்திராவில் 2015, ஜனவரி 2 மற்றும் 3 தேதிகளில், வியாபார நோக்கில் அங்கக உரம் (பயோ உரம்) தயாரித்தல் பயிற்சி நடைபெற உள்ளது. கட்டணம் 100 ரூபாய். உணவு, தங்குமிடம் வழங்கப்படும். முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே அனுமதி.

தொடர்புக்கு, தொலைபேசி: 04652246296

செல்போன்: 8220022205

இ.மெயில்: azollapillai@gmail.com

நம்மாழ்வார் நினைவேந்தல்!

விழுப்புரம்!

விழுப்புரம் ஜெய்சக்தி திருமண மண்டபத்தில், பசுமை இயற்கை விவசாய இயக்கம் சார்பில், டிசம்பர் 30-ம் தேதி பிற்பகல் 3 மணிக்கு இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் நினைவேந்தல் கூட்டம் நடைபெற உள்ளது. 100 விவசாயிகளுக்கு இலவசமாகப் பாரம்பரிய காய்கறி விதைகள் வழங்கப்படும்.

கடவூர்!

கரூர், கடவூரை அடுத்த வானகம் பண்ணை யில் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்ச்சிகள் டிசம்பர் 30-ம் தேதி நடைபெற உள்ளது. மண்ணையும், மக்களையும் நேசிக்கும் அன்பர்களால் இந்த அஞ்சலி கூட்டம் நடத்தப்பட உள்ளது.

அறிவிப்பு

தண்டோரா பகுதியில் இடம்பெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் விவசாயிகள், நிகழ்ச்சிகள் குறித்த நிறைகுறைகளை உடனுக்குடன் தெரிவிக்க 044-66802927 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளுங்கள். அங்கே கணினிக் குரல் வழிகாட்டும். அதற்கேற்ப 3 நிமிடங்களுக்குள், உங்கள் கருத்தைப் பதிவுசெய்யுங்கள். எதிர்முனையில் உங்களுடன் உரையாட யாரும் இருக்க மாட்டார்கள். எனவே, அந்த 3 நிமிடங்கள் முழுக்க முழுக்க உங்களுக்கே! அவசியமென்றால், நாங்களே உங்களைத் தொடர்பு கொண்டு, மேலும் விவரங்களைப் பெற்றுக்கொள்வோம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு