Published:Updated:

புலிக் கொலை...பழி ஓரிடம்... பாவம் ஓரிடம்?

புலிக் கொலை...பழி ஓரிடம்... பாவம் ஓரிடம்?

புலிக் கொலை...பழி ஓரிடம்... பாவம் ஓரிடம்?

புலிக் கொலை...பழி ஓரிடம்... பாவம் ஓரிடம்?

Published:Updated:

ரு புலி கொல்லப்பட்ட விஷயம், பற்பல கேள்விகளை எழுப்பிவிட்டிருக்கிறது. இதை வைத்து வனத்துறைக்கு எதிராக அம்புகள் பாய்ந்து கொண்டிருக்கின்றன!

கடந்த பிப்ரவரி மாதம் 18-ம் தேதி,  நீலகிரி மாவட்டம், கூடலூர் பகுதியில் இருக்கும் பிதர்காடு வனப்பகுதியின் தேயிலைத் தோட்டத்தில், 8 வயதுடைய ஆண் புலியை வனத்துறையினர் சுட்டுக் கொன்று, இறந்த புலியுடன் வழக்கம்போல போட்டோவுக்கு போஸ் கொடுத்தனர். பிப்ரவரி 14-ம் தேதி தேயிலைத் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த ஒரு பெண்ணை புலி தாக்கிக் கொன்றது. இதையடுத்து, சடலத்தை வைத்து சாலை மறியல் செய்தனர் கிராமத்தினர். 'புலிகளின் அட்டகாசம் தொடர்கிறது’ என்று மக்கள் எழுப்பிய மரண கோஷம், வனத்துறையினரின் நிம்மதிக்கு உலை வைக்க, அதிவிரைவுப் படையினருடன் கைகோத்து புலிவேட்டைக்குப் புறப்பட்டனர் மொத்தம் 120 பேர். இவர்களின் தீவிரத் தேடலில் சிக்கி பலியானது புலி.

புலிக் கொலை...பழி ஓரிடம்... பாவம் ஓரிடம்?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

'வனத்துறையினரின் மாபெரும் சாதனை... மக்கள் பாராட்டு’ என்று ஒருபக்கம் செய்திகள் படபடக்கிறது. மறுபக்கமோ... 'புலிகளைக் காப்பாற்றுவதற்காக கோடிக்கணக்கில் செலவழிக்கும் அரசாங்கமே, இப்படி புலிகளை கொல்வது நியாயமா?’மனிதர்களுக்கு தீங்கு செய்யும் விலங்குகளைக் கொல்வதற்கென்று இருக்கும் வனத்துறை விதிகள் காற்றில் பறக்கவிடப்பட்டுவிட்டன!’ என்று சூழல் ஆர்வலர்களின் கொந்தளிப்புக் குரலும் எழுந்து நிற்கிறது.

இதைப் பற்றி பேசும் சுற்றுச்சூழல் ஆர்வலர் மற்றும் எழுத்தாளர் அ.முத்துகிருஷ்ணன், 'மக்களோ, வனத்துறையோ புலிகளை வேட்டையாடுவது இங்கே வாடிக்கையாகிவிட்டது.  ஒரு காட்டில் புலியோ, மற்ற வனவிலங்குகளோ வாழ்கிறது என்றால் அந்த வனம் இயற்கையின் துல்லியமான உயிர்ச்சங்கிலியில் கட்டுக்குலையாமல் இருக்கிறது என்று அர்த்தம். அதுவும் ஊட்டி போன்ற சுற்றுலாப் பகுதிகளில் வனத்தின் பெரும்பகுதிகள் அழிக்கப்பட்டுவிட்டன. வனத்தின் மையப்பகுதிகளில் ரிசார்ட்கள் கட்டப்பட்டுள்ளன. விவசாயப் பணிகளுக்காகவும் அடர்வனங்கள் அழிக்கப்பட்டு வருகின்றன. தொடர்ந்து வனவிலங்குகளின் எல்லைக்குள் மனிதர்கள் நுழைந்துகொண்டே இருக்கிறார்கள்.

'கிராமத்துக்குள் புலி வந்துடுச்சு, வீட்டுக்குள் சிறுத்தை நுழைஞ்சுடுச்சு’ என்று சொல்கிறவர்களில் பெரும்பாலானவர்கள், புதிய கிராமங்கள், காலனிகள், குடியிருப்பு பகுதிகளைச் சேர்ந்தவர்கள்தான். இந்தக் காடுகளை அழித்துதான் குடியிருப்புகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன என்பதைப் புரிந்து கொள்ளாமல் இருக்கிறார்கள். இந்தச் சம்பவத்தை பொறுத்தவரை, வனப்பகுதியில் யாருடைய எல்லையில் யார் இருக்கிறார்கள் என்பது துல்லியமாக நிர்ணயிக்கப்படவில்லை. அது தெரிந்தால்தான் புலி செய்தது சரியா... தவறா? என்பது தெரியவரும்.

யானைகள், புலிகளின் வழித்தடங்கள், நீர் அருந்த போகும் பாதைகள் எல்லாம் தண்டவாளங்களாகவும், நெடுஞ்சாலைகளாகவும் மாறிவிட்டன. வெளிநாடுகளில் சாலைகள், இருப்புப்பாதைகள் அமைக்கப்பட்டிருந்தாலும் வனவிலங்குகளுக்கென்று தனிப்பாதைகள், பாலங்கள் இருக்கின்றன. இதுபற்றி என்றைக்காவது வனத்துறையினர் யோசித்ததுண்டா? மனிதர்களின் எல்லைக்குள் புலியின் தலையீட்டை கொந்தளித்துப் பேசும் நாம், புலியின் எல்லைக்குள் நாம் இருக்கிறோம் என்பதை உணர வேன்டும். தொந்தரவு செய்யும் புலியைப் பிடித்து அடர் வனத்திலோ அல்லது மிருகக்காட்சி சாலையிலோ கொண்டுபோய் விட்டிருக்கலாம். அதை விடுத்து கொலை செய்வது ஏற்றுக்கொள்ள முடியாத செயல்' என்றார் கடுமையான குரலில்!

புலிக் கொலை...பழி ஓரிடம்... பாவம் ஓரிடம்?

நீலகிரி மாவட்ட வன அலுவலர் பத்ரசாமியிடம் இதுபற்றிப் பேசினோம். 'வன உயிரின மேலாண்மையில் புலிகள் பாதுகாப்பு என்பது ஒரு பகுதி. இதில் புலிகளுக்கான வாழிடம், அதன் இனப்பெருக்கத்துக்கான சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதுதான் முக்கியமானது. வழக்கமாக யானை, காட்டுமாடுகள் பயிர்களை சேதப்படுத்தும். அவற்றை காட்டுக்குள் விரட்டிவிடுவோம். ஆனால், இது உயிர்ச் சேதம், திருப்பிக் கொடுக்க முடியாதல்லவா? அதனால்தான் இந்த நடவடிக்கை. யானைகூட மனிதர்களை கொல்கிறது. ஆனால், அது தற்காப்புக்காகவோ அல்லது அதன் வழித்தடத்தில் மனிதர்கள் எதிர்படுவதாலோ நிகழக்கூடியது. இன்னொன்று யாரையும் தேடிவந்து யானை கொல்லாது. ஆட்கொல்லிப் புலி அந்தமாதிரி கிடையாது. உணவுக்காக மனிதர்களைத் தேடிவந்து கொல்லும்.

மயக்க ஊசி போட்டு பிடிப்பது; கூண்டு வைத்துப் பிடிப்பது; சுட்டுப் பிடிப்பது என, புலியைப் பிடிக்க மூன்று வழிகள்தான் எங்களுக்கு இருக்கின்றன. இதில் முதல் இரண்டுக்கும் காத்திருக்க நேரமோ, அவகாசமோ இல்லை. பொதுமக்களும் நெருக்கடி கொடுத்தார்கள். அதனால், வன உயிரின பாதுகாப்புச் சட்டம்1972 பிரிவு 11-ன் கீழ் ஆட்கொல்லிப் புலியைக் கொல்ல நடவடிக்கை எடுத்தோம். ஆனால், ஒரு புலியைக் கொல்வது வேதனையான விஷயம்''என்று சொன்ன பத்ரசாமி, நிறைவாகச் சொன்னது.

''இந்தச் சம்பவத்தை பொறுத்தவரை வனவிலங்குகளின் வாழ்விடத்தில்தான் மக்கள் வசித்து வருகிறார்கள். அவர்களை வெளியேறச் சொல்லி நீதிமன்றம் உத்தரவு போட்டுவிட்டது... அரசும் ஆமோதித்து விட்டது!'

-த. ஜெயகுமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism