Published:Updated:

'புதிய அணை கூடவே கூடாது!’

'புதிய அணை கூடவே கூடாது!’

'புதிய அணை கூடவே கூடாது!’

'புதிய அணை கூடவே கூடாது!’

Published:Updated:

'புதிய அணை கூடவே கூடாது!’

தஞ்சாவூரில் பிப்ரவரி 18-ம் தேதி, காவிரிப் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் மத்திய அரசு அலுவலகங்களை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது. மருத்துவக் கல்லூரிச் சாலையில் உள்ள கலால் வரி அலுவலகத்தை நோக்கி பேரணியாகச் சென்ற ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, ''காவிரியின் குறுக்கே கர்நாடகா சட்ட விரோதமாக அணை கட்ட முயற்சிக்கிறது. இதற்கு பிரதமர் நரேந்திர மோடி துணைபோகக் கூடாது. இந்த நிலை தொடர்ந்தால், எங்களுடைய அறவழிப் போராட்டங்கள் இன்னும் தீவிரமடையும்'' என்றார்.

'புதிய அணை கூடவே கூடாது!’

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கும்பகோணம், பட்டுக்கோட்டை, திருவாரூர், மன்னார்குடி உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற போராட்டங்களில் பல்லாயிரக்கணக்கான விவசாயிகளும் அரசியல் கட்சியினரும் கலந்து கொண்டனர். மத்திய அரசு, மீத்தேன் திட்டத்தைக் கைவிடக்கோரியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.  

சிலுவைப் போர்!

'சென்னைக்கு குடிநீர் கொண்டு செல்வதால் தங்களது விவசாயமும், பலவீனமான கரைகளால் உயிருக்கு உத்தரவாதமும் இல்லாத நிலை நீடிக்கிறது’ என்று தொடர் போராட்டங்கள் நடத்தினர் வீராணம் பகுதி விவசாயிகள். அடுத்த கட்டமாக, பிப்ரவரி 16-ம் தேதி, தங்களை சிலுவையில் கட்டிக் கொண்டு  போராட்டத்தை நடத்தியிருக்கிறார்கள் இந்த விவசாயிகள்.

'புதிய அணை கூடவே கூடாது!’

இது தொடர்பாக நம்மிடம் பேசிய வீராணம் ஏரிப்பாசன விவசாய சங்கத் தலைவர் இளங்கீரன், ''சோழ மன்னன் இந்த ஏரியை வெட்டிய காலத்திலிருந்து இன்று வரை தூர்வாரப்படாமல் கிடக்கிறது. 2013-ம் ஆண்டு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 110 விதியின் கீழ், 'வீராணம் ஏரியைத் தூர்வாருவதற்காக 44 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்’ என்று அறிவித்தார். ஆனால், அது வெற்று அறிக்கையாகிவிட்டது.

இங்கிருந்து சென்னைக்கு தண்ணீரை எடுத்துச் செல்வதை நாங்கள் தவறு எனச் சொல்லவில்லை. இந்தத் தண்ணீரை சென்னைக்குக் கொண்டு சென்று பணத்துக்குத்தான் விற்பனை செய்கிறது. இப்படி வியாபாரம் செய்யும் அரசு, 'அந்தப் பணத்தைப் பயன்படுத்தி ஏரியைத் தூர்வார வேண்டும்’ என்பதுதான் எங்கள் கோரிக்கை'' என்று செவிட்டில் அறைவது போலச் சொன்னார்.

மேக்கேதாத் முற்றுகைப் போர்!

'புதிய அணை கூடவே கூடாது!’

எதிரியை, அதன் கோட்டையிலேயே சந்திப்பது போல்... காவிரியின் குறுக்கே புதிதாக அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடகாவை, அவர்கள் அணை கட்டத் துடிக்கும் மேக்கேதாத் என்ற இடத்துக்கே சென்று முற்றுகையிடத் தயாராகி வருகிறார்கள், காவிரி உரிமை மீட்புக்குழுவினர். இதற்கான பரப்புரைப் பயணம் காவிரி டெல்டா கிராமங்களில் நடை பெற்று வருகிறது. 'மார்ச் 7ம் தேதி காலை 10 மணிக்கு கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையில் இருந்து பல்லாயிரக் கணக்கானோர் பேரணியாகக் கிளம்பி மேகேதாத் சென்று முற்றுகையிடுவோம்’ என்கிற அறிவிப்பும் வெளிடப் பட்டிருக்கிறது.

'நிலம் கையகப்படுத்தும் அவசரச் சட்டம் மீத்தேனுக்கான சூழ்ச்சி!’

'புதிய அணை கூடவே கூடாது!’

சமூகசேவகர் மேதா பட்கர், பிப்ரவரி 8-ம் தேதி, மீத்தேன் திட்டத்தால் பாதிக்கப் படவுள்ள கிராமங்களையும், பெட்ரோலியம் வாயு எடுப்பதால் பாதிக்கப்பட்டுள்ள கிராமங்களையும் பார்வையிடுவதற்காக தமிழ்நாடு வந்திருந்தார். பல்வேறு கிராமங்களுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிறகு, தஞ்சாவூர் முள்ளிவாய்க்கால் முற்றத்தில் நடைபெற்ற மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது, ''மீத்தேன் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் 25 லட்சம் ஏக்கர் விளைநிலங்கள் அழிந்து டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாக மாறும். இத்திட்டத்துக்கு எதிர்ப்புக் கிளம்பியிருப்பதால்தான், நரேந்திர மோடியின் அரசு, அவசர அவசரமாக நிலம் கையப்படுத்தும் அவசர சட்டத்தில் இஷ்டம்போல திருத்தம் கொண்டு வந்திருக்கிறது. மீத்தேன் திட்டத்தை தமிழக அரசு உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும்'' என்று கோரிக்கை வைத்தார் மேதா பட்கர்.

வளர்ச்சியில்... மீன் வளர்ப்பு!

'புதிய அணை கூடவே கூடாது!’

தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகத்தின் முதலாவது பட்டமளிப்பு விழா சென்னை, ஆளுநர் மாளிகையில் பிப்ரவரி 19-ம் தேதி நடைபெற்றது. இதில், தமிழக ஆளுநர் கே.ரோசய்யா கலந்துகொண்டு, பட்டப்படிப்பு மற்றும் ஆராய்ச்சிப் படிப்பு முடித்த 99 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களையும், பதக்கங்களையும் வழங்கினார். சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பேசிய கர்நாடக மாநிலம், சிமோகா வேளாண் மற்றும் தோட்டக்கலை அறிவியல் பல்கலைக்கழகத் துணைவேந்தர் டாக்டர் வாசுதேவப்பா,'இந்திய உணவு உற்பத்தி மற்றும் ஊட்டச்சத்துப் பாதுகாப்பில் மீன்வளம் முக்கிய பங்கு வகித்து வருகிறது. 2013-14-ம் ஆண்டில் 10 மில்லியன் மெட்ரிக் டன் அளவில் மீன்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. இதில் விவசாயப் பண்ணைகளில்  மீன் உற்பத்தி 6.14 மில்லியன் மெட்ரிக் டன் ஆகும். கடல் சார்ந்த மீன் உற்பத்தி 4 மில்லியன் மெட்ரிக் டன். கடந்த சில ஆண்டுகளாக பண்ணைகளின் மீன் வளர்ப்பு அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டில் தற்போது 2.23 லட்சம் பேர் மீன் வளர்ப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். இது, தஞ்சாவூர் மாவட்டத்தில்தான் அதிகம்' என்றார் .

 கு.ராமகிருஷ்ணன், மு.திலீபன், த.ஜெயகுமார்

படங்கள்: கே.குணசீலன், ர.ரஞ்சிதா, ச.சந்திரமௌலி

பச்சைத் தமிழகம்..!

'புதிய அணை கூடவே கூடாது!’

தமிழகத்தின் வாழ்வாதாரப் பிரச்னைகளில் கவனம் செலுத்துவதற்காக அனைத்து சுற்றுச்சூழல் ஆர்வலர்களையும் ஒருங்கிணைக்கும் வகையில், பிப்ரவரி 15ம் தேதி திருச்சியில் ஒரு கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய கூடங்குளம் அணுஉலைக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சுப.உதயகுமார், ''தமிழகத்தை அச்சுறுத்தி வரும் அணுஉலைகள், நியூட்ரினோ, கெயில், மீத்தேன் போன்ற வாழ்வாதார அழிப்புத் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு சுற்றுச்சூழல் பிரச்னைகளில் செயல்பட்டு வரும் செயல்பாட்டாளர்களைக் கடந்த ஓராண்டு காலமாக சந்தித்து வந்தோம். முடிவில் இதுபோன்ற பிரச்னைகளில் சாதி, மதம், கட்சிகள் கடந்து தமிழக அளவில் ஓரணியில் கைகோக்கத் தீர்மானித்துள்ளோம். இதன் தொடர்ச்சியாக 'பச்சைத் தமிழகம்’ என்ற புதிய இயக்கம் உருவாக்கப்படுகிறது. இது, மக்கள் மத்தியில், குறிப்பாக இளைஞர்கள் மத்தியில், சமூக பொருளாதாரஅரசியல் விழிப்பு உணர்வை ஏற்படுத்தும். சுற்றுச்சூழல் பாதுகாப்பு, இயற்கை வேளாண்மை, மாற்று எரிசக்திக் கொள்கை, மாற்றுத் தொழில்நுட்பங்கள் என்று பலவற்றையும் கையில் எடுத்துப் போராடுகிற ஆர்வமுள்ள யாரும் பங்கேற்கலாம்'' என்று அழைப்பு வைத்தார்.

சி.ஆனந்தகுமார்

படம்: என்.ஜி.மணிகண்டன்

'இயற்கையை நோக்கி, இளைய தலைமுறை..!’

'புதிய அணை கூடவே கூடாது!’

'இயற்கையைப் பாதுகாக்க நான் உதவுவேன்; நானும் இயற்கையின் படைப்புதான்; என்னுள் பசுமை இருக்கிறது' என்ற கொள்கை வாசகங்கள் மூலமாக மாணவர்களிடம் இயற்கை குறித்த விழிப்பு உணர்வை ஏற்படுத்தும் முயற்சியாக, 1,22,582 மாணவர்களை இந்த வாசகங்களை எழுதச் சொல்லியதோடு அதை உறுதிமொழியாகவும் ஏற்கச் செய்துள்ளது 'கிரீன் மைண்ட்ஸ்’ என்ற அமைப்பு. இந்தப் பணியை கின்னஸ் சாதனையாகப் பதிவு செய்துள்ளது கின்னஸ் அமைப்பு. சென்னை மயிலாப்பூரில் 'வாழ்வியலில் பசுமை எண்ணங்கள்’ என்ற தலைப்பிலான ஒரு நாள் கருத்தரங்கு மற்றும் பயிற்சிப் பட்டறையை இந்த அமைப்பு அண்மையில் நடத்தியது. நூற்றுக்கணக்கான மாணவர்கள் கலந்துகொண்ட இந்நிகழ்வில் கழிவு மேலாண்மை உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட்டன.

இதுபற்றிப் பேசிய 'கிரீன் மைண்ட்ஸ்’ அமைப்பின் நிறுவனர் ஜெயலட்சுமி சக்திவேலன், ''இளைய சமுதாயத்திடம் இயற்கை பற்றிய விழிப்பு உணர்வை ஏற்படுத்தும் இந்த முயற்சிக்கு அனைத்து மாணவர்களும், பொதுமக்களும் முழுமையான ஒத்துழைப்பு கொடுத்தனர். மாணவர்களிடத்தில் இயற்கை குறித்த விழிப்பு உணர்வை ஏற்படுத்தவும், இயற்கை குறித்தான எண்ண ஆற்றலை மேம்படுத்தும் நோக்கிலும் இந்த வாசகங்களைப் பரப்பி வருகிறோம்'' என்றார்.

கு.முத்துராஜா

படம்: டி.ஆரோன் பிரின்ஸ் காட்ஸன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism