Published:Updated:

எது அறிவியல்?

எது அறிவியல்?

எது அறிவியல்?

எது அறிவியல்?

Published:Updated:

அனைவருக்கும் பசுமை வணக்கம்!

எது அறிவியல்?

''மகசூலை அதிகரிக்க மரபுசார்ந்த சாகுபடி முறைகளைக் கைவிட்டு, அறிவியல் முறைகளை விவசாயிகள் பின்பற்ற வேண்டும்''

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ராஜஸ்தான் மாநிலத்தில், மண்வள அட்டை வழங்கும் திட்டத்தைத் தொடங்கி வைத்தபோது, இப்படிப் பேசியிருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி.

'இந்திய பாரம்பர்யத்தைக் கட்டிக்காக்க வேண்டும், நாட்டு இனமாடுகளைக் காப்பாற்ற வேண்டும்’ என்று மண்ணின் மரபுகளுக்காக ஓங்கிக் குரல் கொடுத்து வருகின்றன சங் பரிவார் அமைப்புகள். இவற்றின் அரசியல் வார்ப்பான பி.ஜே.பியின் பிரதமரோ... 'மரபு’க்கு எதிராக முழங்குகிறார்.

இது ஒன்றும் மோடியின் புதிய கண்டுபிடிப்பு இல்லை. யாரோ ஆட்டுவிக்க, ஆடும் ஆட்டம்தான். ஆம், நேற்றுவரை இதே பிரதமர் நாற்காலியில் உட்கார்ந்துகொண்டு, மன்மோகன் சிங் அடிக்கடி பேசி புளித்துப் போன சங்கதிதான்.  

அறிவியல் என்று சொல்லிக்கொண்டே, ரசாயனத்தை அள்ளித்தெளிக்க வைத்து, இன்றைக்கு மண் வளமிழந்து கிடக்கிறது. இந்த ரசாயன ஆறு, இந்தியாவில் பெருக்கெடுத்து ஓடுவதற்கு காரணமான பசுமைப் புரட்சியின் தந்தைகளில் ஒருவரும், வேளாண் விஞ்ஞானியுமான எம்.எஸ். சுவாமிநாதனே... இதை ஆமோதித்திருக்கிறார். பாரம்பர்ய தொழில்நுட்பங்களைப் பின்பற்றுங்கள் என்றும் பேச ஆரம்பித்திருக்கிறார்.

பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நம் நாட்டில், மண்ணின் நிறத்தை வைத்தே, அதன் தன்மையை அறிந்து, தக்கப்படி பயிர்செய்யும் பாரம்பர்ய விவசாய முறை இருந்து வருகிறது. சூழலைக் கெடுக்காமல், இயற்கையோடு இணைந்து வாழும் வகையில், சுய அறிவைச் சரியாகப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டிருக்கும் இந்த பாரம்பர்ய தொழில்நுட்பங்கள் அறிவியல் பூர்வமானவையா...

இல்லை, கடன் வாங்கிய அறிவின் மூலமாக ஆய்வகங்களில் உருவாக்கப்பட்டு, மூட்டை மூட்டையாக... பாட்டில் பாட்டில்களாக வயல்களில் கொட்டப்பட்டு, மனிதகுலத்தின் எதிர்காலத்துக்கே வேட்டு வைத்துக்கொண்டிருக்கும் ரசாயனங்கள் அறிவியல் பூர்வமானவையா?

-ஆசிரியர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism