Published:Updated:

தண்டோரா

தண்டோரா

தண்டோரா

தண்டோரா

Published:Updated:

காளான் வளர்ப்பு!

காஞ்சிபுரம் மாவட்டம், காட்டுப்பாக்கம் வேளாண் அறிவியல் மையத்தில் மார்ச் 4-ம் தேதி 'காளான் வளர்ப்பு’; 11 மற்றும் 12-ம் தேதிகளில் 'ஒருங்கிணைந்த கால்நடைப் பண்ணையம்’; 13-ம் தேதி 'ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகள்’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு செய்துகொள்ளவும்.

தொடர்புக்கு, தொலைபேசி: 044-27452371

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வெண்பன்றி!

பெரம்பலூர், கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் பிப்ரவரி 26-ம் தேதி 'வெண்பன்றி வளர்ப்பு’ பயிற்சி நடைபெற உள்ளது. முன்பதிவு செய்துகொள்ளவும்.

தொடர்புக்கு, தொலைபேசி: 04328-224599

கட்டணப் பயிற்சிகள்

இயற்கைக் கீரைகாய்கறி கருத்தரங்கு!

விழுப்புரம், ஸ்ரீஜெயசக்தி திருமண மண்டபத்தில் மார்ச் 15-ம் தேதி இயற்கை முறையில் கீரைகாய்கறிகள் சாகுபடி கருத்தரங்கு நடைபெற உள்ளது. இத்துடன் பாரம்பர்ய காய்கறி விதைகள் கண்காட்சியும் நடைபெற உள்ளது. மதிய உணவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அனுமதிக் கட்டணம் 70 ரூபாய். முன்பதிவு அவசியம்.

ஏற்பாடு: பசுமை இயற்கை விவசாய இயக்கம், விழுப்புரம்.

தொடர்புக்கு,செல்போன்: 7811897510, 9790327890.

அங்கக உரம் தயாரிப்பு!

கன்னியாகுமரி, விவேகானந்தா கேந்திரம், இயற்கை வள அபிவிருத்தித் திட்டத்தின் கீழ், பிப்ரவரி 27-28  தேதிகளில், 'வியாபார நோக்கில் அங்கக உரம் (பயோஉரம்) தயாரித்தல்’ பயிற்சி நடைபெற உள்ளது. இப்பயிற்சியில் கலந்துகொள்பவர்களுக்குத் தனியாக வழிநடத்துதல் பயிற்சியும் அளிக்கப்படும். பதிவுக்கட்டணம் 100 ரூபாய். உணவு, தங்குமிடம் வழங்கப்படும். முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே அனுமதி.

தொடர்புக்கு, தொலைபேசி: 04652-246296.

கடந்த இதழில், 'அங்கக உரம் தயாரிப்பு பயிற்சி பிப்ரவரி 27-28 தேதிகளில் நடைபெறும்’ என்பதற்கு பதிலாக, '28-29 தேதிகளில் நடைபெறும்’ என்று தவறுதலாக வெளியாகிவிட்டது.

தவறுக்கு வருந்துகிறோம்.

-ஆசிரியர்

முன்பதிவு செய்தோர் மட்டும் வருக!

திருவண்ணாமலையில் பிப்ரவரி 28-ம் தேதி பசுமை விகடன், அவள் விகடன், அக்கறை அறக்கட்டளை இணைந்து நடத்தும் 'வீட்டுக்குள் விவசாயம்’ கருத்தரங்கு  நடைபெற உள்ளது.

திருப்பூரில் மார்ச் 1-ம் தேதி, பசுமை விகடன், நாணயம் விகடன் மற்றும் கே.பி இயற்கை வேளாண்மை இணைந்து நடத்தும் 'இனியெல்லாம் இயற்கையே’ கருத்தரங்கு நடைபெற உள்ளது. இந்த இரண்டு நிகழ்ச்சிகளிலும் முன்பதிவு செய்துள்ளவர்கள் மட்டுமே கலந்துகொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

அறிவிப்பு

தண்டோரா பகுதியில் இடம்பெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் விவசாயிகள், நிகழ்ச்சிகள் குறித்த நிறைகுறைகளை உடனுக்குடன் தெரிவிக்க 04466802927 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளுங்கள். அங்கே கணினிக் குரல் வழிகாட்டும். அதற்கேற்ப 3 நிமிடங்களுக்குள், உங்கள் கருத்தைப் பதிவுசெய்யுங்கள். எதிர்முனையில் உங்களுடன் உரையாட யாரும் இருக்க மாட்டார்கள். எனவே, அந்த 3 நிமிடங்கள் முழுக்க முழுக்க உங்களுக்கே! அவசியமென்றால், நாங்களே உங்களைத் தொடர்புகொண்டு, மேலும் விவரங்களைப் பெற்றுக்கொள்வோம்.

-பசுமைக் குழு

படம்: வீ.சிவக்குமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism