Published:Updated:

குரங்குகள் கற்றுத் தந்த பாடம்!

குரங்குகள் கற்றுத் தந்த பாடம்!

குரங்குகள் கற்றுத் தந்த பாடம்!

குரங்குகள் கற்றுத் தந்த பாடம்!

Published:Updated:

காட்டுக்குள்ள சுற்றுலாப் பயணம் போன பள்ளிக்கூட பசங்க, அங்க இருந்த குரங்குகள பார்த்து குஷியாகி, அவங்க கொண்டுவந்திருந்த பழம், பிஸ்கெட் எல்லாத்தையும் குரங்குகளுக்குக் கொடுத்தாங்க. இதைப் பார்த்த வனத்துறை அதிகாரி, 'தம்பிகளா, குரங்களுக்கு பழம், பிஸ்கெட் எதுவும் கொடுக்கக்கூடாது’னு சொன்னார்.

'ஏன் கொடுக்க வேணாம்னு சொல்றீங்க... அதெல்லாம் ரொம்பப் பாவம்?’னு பசங்க கேள்வி எழுப்பினாங்க.

'தம்பிகளா, குரங்களுக்குத் தின்பண்டம் கொடுத்துப் பழக்கிட்டா, பிறகு, காட்டுக்குள்ள போய் உணவு தேடுற விஷயமே இந்த குரங்குகளுக்கு கொஞ்சம் கொஞ்சமா மறந்துடும். இதனால, அடுத்தத் தலைமுறையில உருவாகுற குரங்குகள், மரத்துக்கு மரம் தாவி, உணவு தேடுற இயற்கையான அறிவு குறைஞ்சு, உணவுக்காக அடுத்தவங்கள நம்பிக் கிடக்க வேண்டிய சூழல் உருவாகிடும். சில நூறு வருஷத்துல மனுஷன் மாதிரி வரிசையா உட்கார்ந்து பிச்சை எடுக்க ஆரம்பிச்சிடும்’னு வனத்துறை அதிகாரி ரொம்ப அழகா விஷயத்தைப் புரிய வெச்சார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

குரங்குகள் கற்றுத் தந்த பாடம்!

இந்த விஷயம், நமக்கும்கூட பலவித யோசனைகளைத் தூண்டிவிடுதுதானே! சுதந்திரமா புல்வெளியில மேஞ்சி திரிய வேண்டிய ஆடு, மாடு, கோழிகள... பண்ணைங்கிற பேர்ல மருந்துக்குக்கூட சூரிய ஒளி உள்ளே நுழையாத கொட்டகைகள்ல போட்டு பலரும் வளர்க்கிறோமேனு யோசிக்க வைக்கிதுதானே!

ஆடுகள் அளவுக்கு பூச்சிவிரட்டிகள் பத்தி விவரமா தெரிஞ்ச விஞ்ஞானிங்கள எந்த ஆராய்ச்சிக்கூடத்துலயும் பார்க்க முடியாது. ஆமாங்க, ஆடுகள வயல்வெளியில மேய விட்டா, அதுங்க எந்தச் செடியைக் கடிச்சி தின்னாம இருக்கோ, அந்தச் செடிங்கதான், பயிர்ல உருவாகுற பூச்சிகளை விரட்டறதுக்கு சரியான இயற்கை மருந்து நிறைஞ்ச செடிங்க. இதுங்களோட இலைகளை, மாட்டுச் சிறுநீரில் போட்டு ஒரு வாரம் ஊற வெச்சு, பயிருக்குத் தெளிச்சா, 'போறேன், போறேன்’னு பூச்சிங்க உங்க தோட்டத்தை விட்டு ஓடிடும். இப்படிப்பட்ட விவசாய விஞ்ஞானியை, கொட்டகை போட்டு வளர்த்தா... ஒருகட்டத்துல இந்த ஆடுகளுக்கும்கூட நல்ல இலை எது... விஷச் செடி எதுனு அடையாளம் தெரியாம போயிடும்.

நாட்டுக் கோழிகளோட கதையும் இதேதான். புழு, பூச்சிகளைப் புடிச்சு சாப்பிறடதையே மூலதனமா வைச்சிருக்கிற கோழிங்களுக்கு... ஒருகட்டத்துல புழு, பூச்சிகளைப் புடிக்க தெரியாத நிலைகூட வந்துடும். சில பகுதியில, கோரையைக் கட்டுப்படுத்த சண்டைக் கோழிகளைகூட வளர்க்குறாங்க. சண்டைக் கோழிங்க பிறவியிலேயே, ஆக்ரோஷமா இருக்கும். தன்னோட இரைக்கு, வயல்ல இருக்குற களைகளை வேகமா கொத்தித் தின்னும். குறிப்பா, கோரைக்கிழங்கைத் தோண்டி எடுத்துத் தின்னும்.

இப்படி பலவகையிலயும் விவசாயிகளோட நண்பனா, இருக்கிற ஆடு, மாடு, கோழிகள கொட்டகைக்குள்ள அடைச்சு வெச்சு வளர்க்கும்போது, கொஞ்ச காலத்துல அதுகளோட இயற்கைக் குணாதிசயம் மங்கி, உணவு தேடுற அறிவு குறைஞ்சு, மனுஷனை நம்பி மட்டுமே வாழுற நிலைக்கு வந்திடும். வரும்காலத்துல ஆடு, மாடுங்க நமக்கு உதவியா இருக்காது. சுமையா மாறிடும்ங்கிறதை மனசுல வெச்சு செயல்படுங்க.

அகத்திக் கீரை, குறிப்பா அமாவாசை சமயத்துல அதிகமா விற்பனையாகும். இந்தக் கீரை... மனுஷன், மாடு, மண்ணு எல்லாத்துக்கும் நன்மையைச் செய்யுற ஒரு அற்புத மூலிகை. காத்துல இருக்கிற தழைச்சத்தை இழுத்து, மண்ணுக்குக் கொடுக்கும் தன்மை, அகத்திக் கீரைச் செடிக்கு உண்டு. இதனால், யூரியா... மாதிரியான ரசாயன தழைச்சத்து உரத்தை விலைகொடுத்து வாங்குற வேலை மிச்சமாகும்.

மாடுகளுக்கு அகத்திக் கீரையைக் கொடுத்தா, அந்த மாடும் ஆரோக்கியமா இருக்கும். அது கறக்குற பாலிலும் கூட அகத்திக் கீரையோட மருத்துவத் தன்மை கலந்திருக்கும். இதனால்தான், ஆயுர்வேத மருந்துகளுக்கு, அகத்திக் கீரை கொடுத்து வளர்க்கிற மாட்டுப் பாலைப் பயன்படுத்துற பழக்கம் இருக்கு.

சிகரெட் மற்றும் புகையிலை உபயோகிக்கிற புண்ணியவான்களுக்கு நிகோடின் நச்சு தாக்கி, உடம்பு நலிஞ்சுடும். இந்த அகத்திக் கீரைக்கு நிகோடின் நச்சை நீக்குற சக்தி இருக்கு. ஆனாலும், இந்தக் கீரையை மாதத்துக்கு ரெண்டு முறை மட்டும்தான் சாப்பிடணும். அதனால்தான், அகத்திக் கீரையை அமாவாசை.... மாதிரியான விரத சமயத்துல பயன்படுத்துற பழக்கம் இருக்கு. அகத்திக் கீரையை துக்க வீட்டுலயும் கூட சமைப்பாங்க. ஏன்னா, இறப்பு வந்த வருத்தத்துல, சரியா, சாப்பிடாம இருப்பாங்க. அப்போ உருவான சத்துப் பற்றாக்குறையை சரி செய்யுற தன்மை, அகத்திக் கீரைக்கு உண்டு.

சித்தா, அலோபதி, ஹோமியோபதினு எந்த வகையான மருந்து சாப்பிட்டாலும், அந்த சமயத்துல அகத்திக்கீரையை உணவுல சேர்த்துடாதீங்க. ஏன்னா, அந்த மருந்துகளோட வீரியத்தை அகத்திக் கீரை குறைச்சிடும். மருந்து வீரியத்தையே குறைக்கிற தன்மை, இந்தக் கீரைக்கு இருக்குனா, இந்த அகத்திக் கீரை எவ்வளவு பெரிய கில்லாடினு நீங்களே முடிவு செய்துக்குங்க!

 -மண்புழு மன்னாரு

 ஓவியம்: ஹரன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism