Published:Updated:

வீட்டுக்கழிவுகளில் காய்கறி..!

வீட்டுக்கழிவுகளில் காய்கறி..!

சுமை விகடன், அவள் விகடன் மற்றும் அக்கறை அறக்கட்டளை ஆகியவை இணைந்து... திருவண்ணாமலையில் பிப்ரவரி 28-ம் தேதி 'வீட்டிலேயே செய்யலாம் விவசாயம்’ என்ற தலைப்பில் கருத்தரங்கை நடத்தின. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஐநூறுக்கும் மேற்பட்ட விவசாயிகளும் பொதுமக்களும் கலந்துகொண்டனர்.

வீட்டுக்கழிவுகளில் காய்கறி..!

வாழ்த்துரை ஆற்றிய அக்கறை அறக்கட்டளைத் தலைவர் சி.துரை, 'அதிகமான ரசாயன உரங்களையும், பூச்சிக்கொல்லிகளையும் கொட்டி விளைவிக்கப்படும் காய்கறிகளைச் சாப்பிடும்போது, பலவிதமான வியாதிகள் வருகின்றன. இதுபோன்ற பிரச்னைகளில் இருந்து தப்பிக்க, நஞ்சு இல்லாத சிறந்த உணவுகளையும், காய்கறிகளையும் மக்கள் உண்ண வேண்டும். இதை வலியுறுத்தும் நோக்கத்தில்தான் இந்த நிகழ்ச்சியை பசுமை விகடனோடு இணைந்து ஏற்பாடு செய்துள்ளோம்' என்று கோடிட்டுச் சொன்னார்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
வீட்டுக்கழிவுகளில் காய்கறி..!

கழிவுகளில் கவனம்!

'வீட்டுத்தோட்ட அனுபவங்களும், தொழில்நுட்பங்களும்’ என்ற தலைப்பில் பேசிய அனிதா கிறிஸ்டினா, 'வீடுகளில் பயன்படுத்தும், காய்கறிகள், தேங்காய் மூடிகள் மாதிரியான மறுசுழற்சிக்குப் பயன்படும் பல பொருட்களைக் குப்பையாக வெளியேற்றுகிறோம். கழிவுநீர்ச் சாக்கடை மூலமாக வெளியேற்றுகிறோம். இப்படி வெளியேற்றப்படும் குப்பைகள் ஒவ்வொன்றிலும் வீட்டுத்தோட்டத்தில் வளர்க்கும் செடிகளுக்குத் தேவையான சத்துக்கள் நிறைந்துள்ளன. கழிவுநீரைச் சுத்தப்படுத்தி செடிகளுக்குப் பயன்படுத்தலாம். கழிவுநீரைச் சுத்தம் செய்யும் ஆற்றல் கல்வாழை, சேப்பங்கிழங்கு, வாழை போன்ற கிழங்கு இருக்கும் அனைத்துத் தாவரங்களிலும் உள்ளது. வீட்டுக்கழிவில் இருந்து கேஸ், மின்சாரம் போன்றவற்றையும் தயாரிக்கலாம்' எனப் பொறுமையாக விளக்கினார்.

வீட்டுக்கழிவுகளில் காய்கறி..!

வீடுகளிலும் வளர்க்கலாம் காளான்!

பால்காளான் வளர்ப்பு பற்றி பேசிய சேகரன், 'காளானில் பல வகைகள் உள்ளன. அதில் பால்காளான் தனிமதிப்புக் கொண்டது. காளான் நம் ஆரோக்கியத்துக்கு முக்கியமான உணவு. காளான் வளர்ப்பை முறையாகச் செய்ய வேண்டும். ஒரு கிலோ விதையைப் பயன்படுத்தி 3 படுக்கைகள் தயாரிக்கலாம். சரியான முறையில் உற்பத்தி செய்தால், நல்ல முறையில் வளரும்.  நல்ல லாபமும் பெறலாம். இதனை பிளாஸ்டிக் கவர்களில் பயிரிட முடியும் என்பதால், வீடுகளில் வளர்ப்பது மிக எளிது' என்றவர், காளான் வளர்க்கும் முறைகளை விளக்கமாகக் கூறியதுடன், படுக்கை அமைப்பதையும் செய்து காட்டினார்.

'மாடித்தோட்டத்தில் காய்கறி வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் மற்றும் இடுபொருள் தயாரிப்பு’ என்ற தலைப்பில் ஹோம் எக்ஸ்னோரா அமைப்பின் தலைவர் 'பம்மல்’ இந்திரகுமார், ''மொட்டை மாடிக்கு பச்சைத் தொப்பி போட்டால், வீட்டுக்குத் தேவையான காய்கறிகளும் கிடைக்கும். புவி வெப்பமாவதும் குறையும். என் வீட்டில் இயற்கையான ஏ.சி அமைப்பை உருவாக்கியுள்ளேன். எல்.இ.டி. பல்புகளைத்தான் பயன்படுத்துகிறேன். இதனால், மின்சாரக் கட்டணம் நூறு ரூபாயைக் கூட தாண்டுவதில்லை'' என்றார்.

வீட்டுக்கழிவுகளில் காய்கறி..!

'அசோலா வளர்ப்புத் தொழில்நுட்பங்கள்’ என்ற தலைப்பில் தொழில்நுட்பம் சார்ந்த தகவல்களைத் தெளிவாக எடுத்துச் சொன்னார் சதீஷ்.

நிகழ்ச்சிக்கான உணவு உபசரிப்பை 'நெட்டஃபிம் இரிகேசன் பிரைவேட் லிமிடெட்’ நிறுவனத்தினர் செய்திருந்தனர்.

காசி.வேம்பையன், ரா.கீர்த்திகா

படங்கள்: கா.முரளி

பலன் கிடைத்ததா?!

திருவண்ணாமலை மாவட்ட மரம் வளர்ப்போர் சங்கத்தின் துணைத் தலைவர் அமரேசன்: 'வீட்டில் காய்கறி வளர்ப்பு, கழிவுகளை மறுசுழற்சிப் பயன்பாடு என்று பல புதிய தகவல்களைத் தெரிந்துகொண்டேன். இந்தத் தகவல்கள் அனைத்தும் இன்றைய காலக்கட்டத்துக்குத் தேவையானவை. பசுமை விகடன் மக்கள் தேவைகளை அறிந்து செயல்படுகிறது.'

வீட்டுக்கழிவுகளில் காய்கறி..!

விஸ்வநாதபுரம் விவசாயி பிரபாகரன்: ''இந்தக் கருத்தரங்கில், வீட்டுத்தோட்டத்துடன், விவசாயத்தைப் பற்றியும் நிறைய கற்றுக்கொண்டேன். திருவண்ணாமலை உள்ளிட்ட வடமாவட்டங்களில் பசுமை விகடன், இதுபோன்ற பயனுள்ள நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து நடத்தவேண்டும். அதன் மூலம் மேற்கு மாவட்டங்களைப் போல, இங்கும் விவசாயத்தில் சாதனை புரிபவர்களின் எண்ணிக்கை கூடும். அந்தப் பெருமை பசுமை விகடனைச் சேரும்.''