கடந்த பிப்ரவரி 28-ம் தேதி அன்று 2015-16-ம் நிதியாண்டுக்கான நிதி நிலை அறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்திருக்கிறார், மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி. இதில் விவசாயத்துக்காகவும் சில திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த அறிக்கை விவசாயிகளுக்கு சாதகமா... பாதகமா? என்பதை அலசுகிறார்கள், துறைசார்ந்த வல்லுநர்கள்.

பொன்னம்பலம், `கிரியேட்’ நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பின் மேலாண்மை இயக்குநர்:

“67% சதவிகிதம் விவசாயிகளைக் கொண்டுள்ள நாட்டில், விவசாயிகளுக்கு ஆதரவான அம்சங்கள் பெரியளவில் பட்ஜெட்டில் இடம் பெறவில்லை. விவசாயிகளுக்குப் பெரும் பிரச்னையாக மாறி வரும் இடுபொருட்களின் விலையைக் கட்டுப்படுத்துவது பற்றிய அறிவிப்புகள் இல்லை.

விவசாயிகளுக்கு வருமானத்தை உறுதிப்படுத்துவதற்கான அறிவிப்புகள் இல்லை. விவசாயிகள் மீது அக்கறை இருப்பது போல... 8.5 லட்சம் கோடி ரூபாய் கடனாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், விவசாயிகள் கடனாளியாகத்தான் மாறுவார்களே தவிர, அவர்களின் வாழ்க்கைத்தரம் உயரப்போவதில்லை. நதி நீர் இணைப்பு பற்றி அறிவிப்பு இல்லாததது ஏமாற்றத்தைக் கொடுக்கின்றது. ‘மண்வளத்தைப் பாதுகாக்க நிதி ஒதுக்கப்படும்’ எனச் சொல்லி இருப்பது மட்டும் ஆறுதல் அளிக்கிறது.

இந்தியா முழுவதிலும் இருக்கும் 7,500 ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களையும், உள்ளூர் சந்தைகளையும் மேம்படுத்துவதற்கு எந்த விதமான அறிவிப்புகளையும் வெளியிடாமல்... ‘விற்பனை வாய்ப்புகளை மேம்படுத்த தேசிய அளவில் சந்தைகள் உருவாக்கப்படும்’ எனச் சொல்லப்பட்டிருக்கிறது. இது, பஞ்சாப் அரிசியையும், ஹரியானா அரிசியையும் தமிழ்நாட்டில் விற்பதற்கான வேலை. தவிர, கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு வழியையும் ஏற்படுத்திக் கொடுக்கும்.”

கி.வெங்கட்ராமன், வேளாண் பொருளியல் வல்லுநர்:

“விவசாயக் கடன் அறிவித்திருப்பது பொறுப்பில்லாதத்தனம். மத்திய அரசு, கடன் கொடுக்கச் சொல்லி அரசுடமை வங்கிகளுக்கு ஆணை பிறப்பிக்காமல், கடன் கொடுக்கச் சொல்லிக் கேட்டிருக்கிறது. தற்சமயம் வங்கிகள், வேளாண்மைக்குக் கடன் கொடுக்க மறுத்து வருகின்றன. இந்த நிலையில், கடன் அறிவிப்பு என்பது, வெற்று அறிவிப்புதான். விளைபொருட்களுக்கு லாபகரமான விலை கிடைக்க எந்தவிதமான ஏற்பாடுகளும் பட்ஜெட்டில் இல்லை.

பயிர் காப்பீடு விஷயத்தில் தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்படும் எனச் சொல்லி இருப்பது விவசாயிகளுக்கு எதிரானது. தனியார் கம்பெனிகள் அதிகமான பீரிமியம் தொகையை வசூல் செய்வார்கள். சேதம் நேரும்போது இழப்பீடு தொகையை ஒழுங்காகக் கொடுக்க மாட்டார்கள்.

தேசிய அளவில் சந்தைகள் அமைப்பதாகச் சொல்லப்பட்டிருக்கிறது. அதை விடுத்து ஒவ்வொரு மாநிலத்தையும் ஒரு விளைபொருள் மண்டலமாக அறிவித்திருந்தால், விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்க வாய்ப்பு கிடைத்திருக்கும். சந்தைகளை வீழ்ச்சி அடைய வைப்பதன் மூலம், கடன் பிரச்னையை உண்டு பண்ணி விவசாயிகளை நிலத்தில் இருந்து வெளியேற்றுவதுதான் மத்திய அரசின் எண்ணமாக இருக்கிறது.’’

‘ஆறுபாதி’ கல்யாணம், டெல்டா மாவட்ட விவசாய சங்கங்களின் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர்:

“இந்த நிதிநிலையில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள மொத்தத் தொகையான 17 லட்சத்து 77ஆயிரத்து 477 கோடி ரூபாயில், ஒரு சதவிகித தொகைதான் விவசாயத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 18 சதவிகித பங்களிப்பு இருக்கும் விவசாயத்துக்கு இந்த ஒதுக்கீடு, மிகவும் குறைவு. குறைந்தபட்சம் 20% ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். 10% உணவு உற்பத்தியைப் பெருக்கவும், 10% விவசாயிகளின் நலனைப் பாதுகாக்கவும் இருக்க வேண்டும்.

1950-ம் ஆண்டு 31 கோடி மக்கள் இருந்தபோது, 50 மில்லியன் டன்னாக இருந்த உணவு உற்பத்தி, இன்றைக்கு 125 கோடியாக மக்கள் தொகைக்கு, 264 மில்லியன் டன்னாக அதிகரித்துள்ளது.

நிலங்களின் அளவு குறைந்தாலும் உணவு உற்பத்தியை முழு முயற்சியுடன் பெருக்கும் விவசாயிகளின் நலனுக்கு பட்ஜெட்டில் எந்தவிதமான அறிவிப்புகளும் இல்லை. பயிர் கடன்களுக்கு 3 லட்சம் ரூபாய் வரை மட்டுமே 7 சதவிகித வட்டியில் கடன் வழங்கப்படுகிறது. கடனை சரியான காலத்தில் செலுத்தினால் 3 சதவிகிதம் வட்டியைக் குறைப்பார்கள். திருப்பிச் செலுத்த சிறிது காலதாமதம் ஏற்பட்டாலும், 12% முதல் 13% வட்டியை வசூலிப்பார்கள். கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சலுகைகளை அள்ளி வழங்கும் மத்திய அரசு, விவசாயிகளுக்கு கிள்ளிக்கூட கொடுக்க மறுக்கின்றது.”

மத்திய பட்ஜெட்டில் விவசாயத்துக்கான அறிவிப்புகள்!

விவசாய மேம்பாட்டுத் திட்டங்களுக்கு 3,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

ஊரக மேம்பாட்டுக்கு மொத்த கடனுதவியாக நபார்டு வங்கிகளுக்கு 25,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

2015-16 நிதியாண்டில் விவசாயிகளுக்கு 8.5 லட்சம் கோடி ரூபாய் கடனுதவி வழங்க இலக்கு.

விளைபொருட்களுக்கு நியாயமான விலை கிடைக்கும் வகையில், ஒருங்கிணைந்த தேசிய வேளாண் சந்தை உருவாக்கப்படும்.

நீண்டகால ஊரக கடன் நிதிக்கு 15,000 கோடி ரூபாய்; குறுகிய கால கூட்டுறவு கடன்களுக்கு 45,000 கோடி ரூபாய்; மண்டல கிராம வங்கி மறுகடனுக்கு 15,000 கோடி ரூபாய் என ஒதுக்கீடு. .

மண்வளத்தைப் பாதுகாக்க வேளாண்மை துறையில் இயற்கை வேளாண்மைத் திட்டமான பாரம்பர்ய கிருஷி விகாஸ் திட்டத்துக்கு நிதி உதவி.

பாசன வசதிகள் ஏற்படுத்தப்படுத்த திட்டம். குறைவான தண்ணீரில் அதிகமான விளைச்சலைப் பெற நடவடிக்கை எடுக்கப்படும்.

சிறு பாசனத் திட்டத்துக்காக 5,300 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு.

காசி. வேம்பையன்

ஆர்கானிக் சந்தை!

சென்னை, தாம்பரத்தில் பரபரப்பான ஜி.எஸ்.டி. சாலையில் இருக்கிறது, வள்ளுவர் குருகுலம் மேல்நிலைப்பள்ளி. இங்கே கடந்த ஜனவரி மாதத்திலிருந்து ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 10 மணியிலிருந்து மாலை 5 மணி வரை ‘ஆர்கானிக் சந்தை’ நடக்கிறது. ‘குட் ஃபுட் ஆர்கானிக் இயக்கம்’ என்ற அமைப்பின் ஏற்பாட்டில் நடக்கும் இச்சந்தையில் தமிழகம், கர்நாடகா, குஜராத், மகராஷ்டிரா என்று பல பாகத்திலிருந்தும் இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட காய்கறி, பழங்கள் மற்றும் உணவு தானியங்கள் வரவழைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. அடுத்த கட்டமாக இத்தகையச் சந்தைகளை சென்னை முழுக்க கொண்டுவர தீர்மானித்திருக்கும் இந்த அமைப்பினர், தமிழகம் முழுக்கவே எல்லா பகுதிகளிலும் பெண்களே நடத்தக்கூடிய ஆர்கானிக் சந்தையை அமைக்கவும் திட்டமிட்டுள்ளனர்.

இதைப்பற்றி பேசிய இயக்கத்தின் உறுப்பினர் உமாபதி ‘‘இயற்கை விவசாயம் மற்றும் இயற்கை உணவு முறைகள் மீதிருக்கும் ஈடுபாடு காரணமாக, பல துறைகளில் இயங்கக்கூடிய நண்பர்கள் இணைந்து, எந்தவித லாபநோக்கமும் இன்றி இந்தச் சந்தையை நடத்தி வருகிறோம். இயற்கை உணவுகள் குறித்தான விழிப்பு உணர்வு அதிகரித்து வரும் நிலையில், மக்களுக்கு அனைத்துவிதமான பொருட்களும் எளிதாக ஒரே இடத்தில் கிடைக்கச் செய்து வருகிறோம். இடைத்தரகர்கள் இன்றி, நேரடியாக கொள்முதல் செய்வதால், விவசாயிகளுக்கும் உரிய லாபம் போய்் சேர்கிறது’’ என்றார் .

-கு.முத்துராஜா

படம்: கு.பாலச்சந்தர்