உடை, உணவு, அறிவியல், மருத்துவம்... என எங்கும் நவீனம், எதிலும் நவீனம்! இதற்கிடையிலும், உலகம் பழமையை நோக்கி மெள்ள சுழல்கிறது. இயற்கை வேளாண்மை, சுகாதாரமான சுற்றுச்சூழல், பாரம்பர்ய உணவுகள், பழமையான மருத்துவம்... எனத் தேடல் துவங்கியுள்ளது.

பழமையான மருத்துவம் எனும்போது, இதில் சித்த மருத்துவத்துக்கும் முக்கிய இடமுண்டு! இதை வளர்த்தெடுப்பதற்கு தோள் கொடுத்து வருகிறது... 2000-ம் ஆண்டில் சென்னையில் தொடங்கப்பட்ட ‘பாரம்பர்ய மருத்துவ ஆய்வு மையம்’ (Centre for Traditional Medicines and Research). இதன் தலைவர், இந்தியாவின் மிகச்சிறந்த சித்த, ஆயுர்வேத மருத்துவ மற்றும் தாவரவியல் வல்லுநரான டாக்டர். உஸ்மான் அலி. இவர், மத்திய சித்த, ஆயுர்வேத ஆராய்ச்சி மையத்தின் துணை இயக்குநர்.

சென்னை அறிஞர் அண்ணா சித்த மருத்துவமனையில் பணிபுரிந்து விருப்ப ஓய்வுபெற்ற மூத்த சித்த மருத்துவர் திருநாராயணன் உள்பட சித்த மருத்துவர்கள் மற்றும் இயற்கை ஆர்வலர்கள், உஸ்மான் அலியுடன் இணைந்து இம்மையத்தை நிறுவியுள்ளனர். இந்த மையத்தின் மூலமாக சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையிலும், சேலம் கணவாய்புதூரிலும் மருத்துவமனைகள் இயங்கி வருகின்றன.

அமைப்பின் செயல்பாடுகள் பற்றிப் பேசிய திருநாராயணன், ‘‘கடந்த 20 ஆண்டுகளாக, பாரம்பர்ய வைத்தியத்தைப் பற்றிய விழிப்பு உணர்வையும், வனத்துறையினருக்கு மூலிகைப் பயிர்கள் வளர்ப்பது தொடர்பான ஆலோசனைகளையும் வழங்கி வருகிறோம். மருத்துவ அறிவு சார்ந்த இயக்கமாக எங்கள் சேவையைக் கொண்டு செல்வதற்காகத்தான் 2000-ம் ஆண்டு இந்த மையத்தைத் தொடங்கினோம். பாரம்பர்ய மருத்துவம் தொடர்பான விழிப்பு உணர்வை மக்களிடையே ஏற்படுத்துதல் உள்ளிட்ட பணிகளைத் தொடர்ந்து வருகிறோம்” என்றார்.

அவரைத் தொடர்ந்த சித்த மருத்துவர் பத்மப்ரியா, ‘தொடர்ந்து மூலிகைத் தோட்டப் பணிகளைச் செய்து வருகிறோம். மூலிகைக் கண்காட்சிகளையும் நடத்துகிறோம். வீடுகள், கல்லூரிகள், பள்ளிகளில் மூலிகைத் தோட்டம் அமைத்துத் தருகிறோம். இதற்கான செடிகள், நாற்றுகளை இலவசமாகவே வழங்குகிறோம். மூலிகைத் தோட்டம் அமைக்க விரும்புவர்கள் எங்களை அணுகலாம்’’ என்று அழைப்பு வைத்தார்.

தொடர்புக்கு,
திருநாராயணன்,
செல்போன்: 94440-18158

பிரேமா நாராயணன்