அனைவருக்கும் பசுமை வணக்கம்!

‘2014-ம் ஆண்டில் 1,109 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்’ என்று நாடாளுமன்றத்தில் தகவல் தந்திருக்கும் பி.ஜே.பி-யைச் சேர்ந்த மத்திய வேளாண்மைத் துறை இணையமைச்சர் மோகன்பாய் குண்டாரியா, ‘‘சாகுபடி பொய்த்துப் போனதால், கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் போனதும், வறட்சி, சமூகப் பொருளாதார பிரச்னைகளும்தான் காரணங்கள்’’ என்றும் குறிப்பிட்டுள்ளார்.

கிட்டத்தட்ட இதேசமயத்தில், சண்டிகர் நகரில் நடைபெற்ற தேசிய இயற்கை வேளாண்மைக் கருத்தரங்கில், ‘‘ரசாயன விவசாயம் செய்கிற விவசாயிகள் மத்தியில்தான் தற்கொலைகள் அதிகம் நடக்கிறது. இயற்கை விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதில்லை. நிலைத்த வேளாண்மை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, நீடித்த பொருளாதாரம் இது மூன்றும் நடைபெற வேண்டுமானால், இயற்கை விவசாயத்தால் மட்டுமே முடியும்’’ என்று அழுத்தம் திருத்தமாகப் பேசியிருக்கிறார் பி.ஜே.பி-யைச் சேர்ந்தவரான அரியானா மாநில முதல்வர் எம்.எல். கட்டார்.

‘‘விவசாயிகளின் தற்கொலைக்குக் காரணமே... இடுபொருள் செலவுகளுக்காக வாங்கும் கடன்கள் கழுத்தை நெறிப்பதுதான். எனவே இயற்கை விவசாயத் திட்டங்களைப் போர்க்கால அடிப்படையில் நிறைவேற்றுங்கள்’’ என்று சில பல ஆண்டுகளாக இயற்கை விவசாயிகளும், இயற்கை விவசாய ஆர்வலர்களும் வலியுறுத்தி வருவதைத்தான், இந்த இரு அமைச்சர்களும் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இதற்குப் பிறகும் ‘அறிவியல்’ முகமூடி சுமந்தபடிதான் வலம்வரப் போகிறாரா பிரதமர் நரேந்திர மோடி? இல்லை, நிதர்சனத்தை உணர்ந்து, இயற்கை அன்னைக்கு ஜே போடப் போகிறாரா?

-ஆசிரியர்