Election bannerElection banner
Published:Updated:

"இப்போ அனுமதி இல்லை!" - “அப்படி நாங்க சொல்லலை!” - மரபணு கடுகு பற்றி ஜி.இ.ஏ.சி.யின் குழப்பம் #OpposeGMmustard

"இப்போ அனுமதி இல்லை!" -  “அப்படி நாங்க சொல்லலை!” -  மரபணு கடுகு பற்றி ஜி.இ.ஏ.சி.யின் குழப்பம் #OpposeGMmustard
"இப்போ அனுமதி இல்லை!" - “அப்படி நாங்க சொல்லலை!” - மரபணு கடுகு பற்றி ஜி.இ.ஏ.சி.யின் குழப்பம் #OpposeGMmustard

"இப்போ அனுமதி இல்லை!" - “அப்படி நாங்க சொல்லலை!” - மரபணு கடுகு பற்றி ஜி.இ.ஏ.சி.யின் குழப்பம் #OpposeGMmustard

கடந்த மே மாதம் ஜி.இ.ஏ.சி என அழைக்கப்படும் 'மரபணு மாற்று பயிர்களுக்கான அனுமதியளிக்கும் குழு', மரபணு மாற்று கடுகிற்கு அனுமதி வழங்கலாம் என மத்திய சுற்றுச்சூழல் துறைக்குப் பரிந்துரைத்தது. அதனைத் தொடர்ந்து தமிழகம் மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்திய விவசாய கூட்டமைப்புக்கள், விவசாய ஆர்வலர்கள் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் மே மாதம் ஜி.இ.ஏ.சி (GEAC) என்னும் மரபணு மாற்று அங்கீகாரக் குழுவின் 133வது கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை நேற்று தன்னுடைய இணையதளத்தில் பதிவேற்றியுள்ளது. கூட்டத்தின் மூலம் எடுக்கப்பட்டுள்ள இறுதி முடிவின்படி 'பல்வேறு பங்குதாரர்கள் மற்றும் பிரதிநிதிகளிடமிருந்தும் பெற்ற கருத்துகள், அறிக்கைகளைத் தொடர்ந்து பொது வெளியீட்டுக்கான முடிவின் மீதான ஆய்வு நிலுவையில் உள்ளது ' என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மரபணு மாற்று கடுகுக்குத் தற்போதைக்கு அனுமதி இல்லை என்று தகவல் பரவியது. இதனால், மரபணு மாற்று கடுகு எதிர்ப்பாளர்கள் மகிழ்ச்சியடைந்தனர். ஆனால், அதற்குள் வேறொரு தகவல் பரவ, மரபணு மாற்று கடுகு எதிர்ப்பாளர்கள் அதிருப்தியில் இருக்கின்றனர். 

இதுகுறித்து பாதுகாப்பான உணவுக்கான கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அனந்து பேசியபோது, "இந்தத் தகவலை அறிந்தவுடன்

அப்பாடா... மரபணு மாற்று கடுகுக்கு இப்போதைக்கு அனுமதி இல்லை என்று மகிழ்ச்சியடைந்தோம். ஆனால், இந்தத் தகவல் குறித்து மரபணு மாற்று அங்கீகாரக் குழுவின் கூடுதல் செயலாளர் டாக்டர் அமிதா பிரசாத்திடம் ஒரு பத்திரிகையாளர் கேட்டபோது, 'அப்படியெல்லாம் இல்லை. ஏதோ எழுத்துப்பிழை.. நாங்கள் அப்படி மரபணு கடுகினை நிறுத்தவில்லை. திருத்தங்கள் நாளை வரும்' என்று தெரிவித்துள்ளார். மரபணு மாற்றுக் கடுகு குறித்து ஆய்வு பூர்வமான தகவலை ஜி.இ.ஏ.சி தான் வழங்கும். அதனடிப்படையில் சுற்றுச்சூழல் துறை அனுமதி வழங்கும். தற்போது ஜி.இ.ஏ.சியின் குழப்பமான அறிவிப்பால், தவித்து வருகிறோம். இன்னும் சில நாட்களில் இதுகுறித்துத் தெளிவான ஒரு பதில் கிடைக்கும் என்று நம்புகிறோம்" என்றார். 

இதுகுறித்துப் பேசிய தமிழ்நாடு இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் 'அறச்சலூர்' செல்வம், "மரபணு மாற்றுக்கடுகைப் பற்றிய தகவலைக் கேட்டபோது மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால், அதனைக் கலைக்கும் விதமாக வெளியிட்ட தகவலில்

எழுத்துப்பிழை உள்ளதாக ஜி.இ.ஏ.சி தெரிவித்துள்ளது. ஒரு தகவலை வெளியிடுவதற்கு முன்னர், அதுபற்றி தெரியாமல் எப்படி வெளியிட முடியும் என சிந்தித்துப் பார்க்க வேண்டும். ஜி.இ.ஏ.சி-க்கு ஏதோ ஒருவிதத்தில் அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளதாகவே தோன்றுகிறது. அதனால்தான் தகவல் பிழை எனச் சொல்கிறார்கள். ஜி.இ.ஏ.சி-தான் முதலில் மரபணு மாற்றுக் கடுகிற்கு அனுமதி வழங்கினால், அதன் பின்னர் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் கைக்கு வரும். மரபணுக் கடுகைப் பற்றிய இறுதி முடிவை மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம்தான் வெளியிடும். அதனால் இறுதி முடிவு தெரிய இன்னும் சில நாட்கள் ஆகலாம். ஆனால், வெளிநாடுகளில் இருந்து மக்காச்சோளமும், சமையல் எண்ணெயும் ஜி.இ.ஏ.சி-யின் சோதனைக்குப் பின்னர்தான் இறக்குமதியாகும். ஆனால், அந்தப் பொருட்கள் இதுவரை அந்தச் சோதனையே இல்லாமல் இறக்குமதிக் கொண்டுதான் இருக்கின்றன. எனவே ஜி.இ.ஏ.சி-யை நம்ப முடியாது. மரபணு விதைகள் விஷயத்தில் வெல்லப்போவது கார்பரேட் சக்தியா அல்லது மக்கள் சக்தியா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்" என்றார். 
'மரபணு மாற்றம் செய்யப்பட்ட கடுகு ரகம், இயல்பிலேயே பல சிக்கல்கள், பாதகங்களை தனக்குள் கொண்டுள்ள போதிலும் அவை, திட்டமிட்டே மறைக்கப்பட்டுள்ளன' என்பதே பல சமூக மற்றும் விவசாய ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.
 

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு