Published:Updated:

ஜீரோ பட்ஜெட் அனுபவ பகிர்வு..!

ஜீரோ பட்ஜெட் அனுபவ பகிர்வு..!

ஜீரோ பட்ஜெட் அனுபவ பகிர்வு..!

ஜீரோ பட்ஜெட் அனுபவ பகிர்வு..!

Published:Updated:

ற்சார்பு ஒன்று மட்டுமே நீடித்த நிலைத்த விவசாயத்துக்கான அடிப்படை’ என்பதை மனதில் இருத்தி, எளிய தொழில்நுட்பங்களைக் கடைக்கோடி விவசாயிகளும் அறிந்துகொள்ளும் விதமாக... தொடர் பயிற்சிகளை அளித்து வருகிறது, ‘பசுமை விகடன்’. அந்த வகையில், மே 9, 10 ஆகிய தேதிகளில், ராமநாதபுரத்தில்  ‘ஜீரோ பட்ஜெட் விவசாயிகளின் அனுபவ பகிர்வு’ மற்றும் ‘வீட்டிலும் செய்யலாம் விவசாயம்’ என்ற தலைப்புகளில் இரண்டு நாட்கள் பயிற்சி வகுப்பு நடந்தது.

ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் மற்றும் நேஷனல் அகாடமி ஸ்கூல் ஆகியவை பசுமை விகடனுடன் கைகோத்து நடத்திய இந்நிகழ்வில்... தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் விவசாயிகள் ஆர்வமுடன் பங்கேற்றனர். ராமநாதபுரம் நகர அரிமா சங்கம் மற்றும் ஜே.சி.ஐ. அமைப்பினர் இரண்டு நாட்களுக்குமான மதிய உணவு ஏற்பாட்டைச் செய்திருந்தனர்.

ஜீரோ பட்ஜெட் அனுபவ பகிர்வு..!

நிகழ்ச்சியைத் துவக்கி வைத்துப் பேசிய நேஷனல் அகாடமி ஸ்கூலின் தாளாளர், டாக்டர்.சையது அம்மாள், “ராமநாதபுரம், விவசாயத்துக்கு ஏற்ற அருமையான மாவட்டம். ஆனா, இங்க பல பேரு விவசாயத்தை விட்டுட்டு வெளிநாட்டுக்கு வேலைக்குப் போயிடுறாங்க. இந்த நிலை மாறி, ராமநாதபுரமும் விவசாயத்துல முக்கியமான மாவட்டமா மாறணும். அதுக்கான முயற்சிகள் மாவட்டத்துல பரவலா நடந்துக்கிட்டு வருது. மற்ற மாவட்டங்களைவிட ராமநாதபுர மாவட்ட நிர்வாகம் விவசாயத்துக்குத் தேவையான பல்வேறு சலுகைகளைக் கொடுக்கிறதோட, புதுசா விவசாயத்துக்கு வர்றவங்களை ஊக்கப்படுத்திக்கிட்டு இருக்காங்க. இதை முறையா பயன்படுத்திக்கணும்” என்றார்.

நிகழ்ச்சியில் ராமநாதபுரம் நகர அரிமா சங்கத் தலைவர் ராமகிருஷ்ணன், செயலாளர் இருதயராஜ், ஜே.சி.ஐ தலைவர் ராஜ்குமார் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்துகொண்டனர்.

முதல் நாள் நிகழ்ச்சியில், ஜீரோ பட்ஜெட் மானாவாரி நெல் சாகுபடி பற்றி லட்சுமி நாராயணன்; நெற்பயிரில் நோய் மேலாண்மை குறித்து திருவாரூர் உதயகுமார் ஆகியோர் தங்களது அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டனர்.

தொடர்ந்து, மானாவாரி குண்டு மிளகாய் சாகுபடி பற்றி முன்னோடி விவசாயி ‘மும்முடிசாத்தான்’ தங்கவேல்; பூச்சி மேலாண்மை குறித்து வேளாண் அலுவலர் நீ.செல்வம் ஆகியோர் பயிற்சி அளித்தனர். இரண்டாம் நாள், கோயம்புத்தூரைச் சேர்ந்த முன்னோடி வீட்டுத்தோட்ட விவசாயி கனகராஜ், வீட்டுத்தோட்டம் அமைக்கும் முறைகள் குறித்து படக்காட்சிகளுடன் விளக்கினார்.

இதையடுத்து புறக்கடைத் தோட்டம் அமைக்கும் முறைகள் குறித்து, ‘ராமநாதபுரம்’ சிவா; தேனீ வளர்ப்பு குறித்து ‘புதுக்கோட்டை’ தமிழ்ச்செல்வன்; மூலிகை வளர்ப்பு குறித்து சித்தர்.ஜெகநாதன்; இடுபொருட்கள் தயாரிப்பு குறித்து வேளாண் ஆலோசகர் ஏகாம்பரம் ஆகியோர் பயிற்சி அளித்தனர்.

 ஆர்.குமரேசன்

 படம் உ.பாண்டி