Published:Updated:

தண்டோரா

தண்டோரா

தண்டோரா

தண்டோரா

Published:Updated:

‘தண்டோரா’ பகுதியில் இடம்பெறும் நிகழ்ச்சிகளில் கடைசி நேர மாறுதல்கள் ஏற்படலாம். எனவே, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், அமைப்புகள் ஆகியவற்றிடம் நிகழ்ச்சி குறித்த தகவல்களை தொலைபேசி அல்லது செல்போன் வாயிலாக, முன்கூட்டியே உறுதிசெய்த பின், பயண ஏற்பாடுகளைச் செய்யவும். 

- ஆசிரியர்

நாட்டுக்கோழி வளர்ப்பு!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தண்டோரா

சேலம், கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் மே 26-ம் தேதி ‘கறவை மாடு வளர்ப்பும் பசுந்தீவன உற்பத்தியும்’ பயிற்சி நடைபெற உள்ளது. முன்பதிவு செய்துகொள்ளவும்.

தொடர்புக்கு, தொலைபேசி: 0427-2410408

பஞ்சகவ்யா தயாரிப்பு

சிவகங்கை மாவட்டம், பிள்ளையார்ப்பட்டியில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியின் உழவர் பயிற்சி மையத்தில், மே 27-ம் தேதி ‘நவீன முறையில் வாழை சாகுபடி’; 28-ம் தேதி ‘பஞ்சகவ்யா மற்றும் மண்புழு உரம் தயாரித்தல்’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு செய்துகொள்ளவும்.

தொடர்புக்கு, செல்போன்: 99416-47893, 94885-75716

மதிப்புக்கூட்டிய சிறுதானியம்!

சிவகங்கை மாவட்டம், குன்றக்குடி வேளாண் அறிவியல் நிலையத்தில், மே 25-ம் தேதி ‘சிறுதானியங்களில் மதிப்புக்கூட்டிய பண்டங்கள் தயாரிப்பு’; 28-ம் தேதி ‘தென்னையில் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை முறைகள்’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு செய்துகொள்ளவும்.

தொடர்புக்கு, தொலைபேசி: 04577-264288.

கடற்பாசி வளர்ப்பு!

திருவள்ளூர், இந்தியன் வங்கி சுய வேலைவாய்ப்புப் பயிற்சி நிறுவனத்தில் ‘கோழி வளர்ப்பு’ ஜூன் 6-ம் தேதி தொடங்கி 6 நாட்களுக்கும், ‘கடற்பாசி வளர்ப்பு’ ஜூன் 15-ம் தேதி தொடங்கி 6 நாட்களுக்கும் பயிற்சிகள் நடைபெற உள்ளன. மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு, தொலைபேசி: 044-27645060

செல்போன்: 94443-99892.

கட்டணப் பயிற்சிகள்

உயிர்ச்சூழல் மாநாடு!

புதுக்கோட்டை மாவட்டம், ஒடுகம்பட்டி, குடும்பம்-கொழிஞ்சிப் பண்ணையில் ஜூன் 19, 20 தேதிகளில் ‘உயிர்ச்சூழல் பசுமை கிராமம்-மாநில மாநாடு’ நடைபெற உள்ளது. மாநாட்டில்  இயற்கை வேளாண்மை, பாரம்பர்ய உணவு, உயிர்ச்சூழல் குறித்த கருத்தரங்குகள் நடைபெற உள்ளன. சிறுதானிய விதைத் திருவிழா, இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ.நம்மாழ்வார் பெயரில் விருதுகளும் வழங்கப்பட உள்ளன. உணவு மற்றும் தங்குமிட கட்டணம் `300 மட்டும். முன்பதிவு முக்கியம்.

தொடர்புக்கு, செல்போன்: 98424-03493, 98424-33187.

நெல் திருவிழா

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள ஆதிரெங்கம் கிராமத்தில் மே-30, 31 ஆகிய தேதிகளில், ‘நெல் திருவிழா’ நடைபெறுகிறது. இயற்கை விவசாய வல்லுநர்கள், அனுபவ விவசாயிகள் கருத்துரை வழங்க உள்ளனர். உணவு, குறிப்பேடு, பேனா வழங்கப்படும். கட்டணம் `100. முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு, செல்போன்:  98426-07609.

இயற்கை இடுபொருட்கள்!

கரூர் மாவட்டம், நடையனூர் விவசாய உற்பத்தியாளர் கம்பெனியில் ஜூன் 4-ம் தேதி ‘இயற்கை இடுபொருட்கள் தயாரிப்புப் பயிற்சி’ நடைபெற உள்ளது. ‘மண்ணை வளப்படுத்தும் இயற்கை உரங்கள்’, ‘அசோலா வளர்ப்பு’, ‘கால்நடைகளுக்கு ஏற்ற தீவன வகைகள்’ உற்பத்தி ஆகியவைப் பற்றி அசோலா வளர்ப்பு நிபுணர் முனைவர் பி.கமலாசனன் பிள்ளை பயிற்சி அளிக்க உள்ளார். மதிய உணவு, தேநீர் வழங்கப்படும். கட்டணம் ரூ150 மட்டும். முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு, செல்போன்: 82200-22205, 96886-89787.

இயற்கைக் காய்கறி!

திருநெல்வேலியில், திருநெல் வாழ்வியல் மையமும், நல்லமுத்து இயற்கை வேளாண்மை மற்றும் ஆராய்ச்சிப் பண்ணையும் இணைந்து, ஜூன் 7-ம் தேதி ‘மரவள்ளி மற்றும் இயற்கை முறையில் காய்கறிகள் சாகுபடி’ பயிற்சி நடைபெற உள்ளது. மதிய உணவு வழங்கப்படும். கட்டணம் `150. முன்பதிவு செய்துகொள்ளவும்.

தொடர்புக்கு, செல்போன்: 98658-75896, 85084-38922.

முன்பதிவு செய்தோர் மட்டும் வருக!

விழுப்புரத்தில் மே 30-ம் தேதி ‘பசுமை விகடன்’, ‘அவள் விகடன்’ மற்றும் விழுப்புரம் ரோட்டரி சங்கம் இணைந்து வழங்கும் ‘வீட்டிலும் செய்யலாம் விவசாயம்’ பயிற்சிக் கருத்தரங்கு நடைபெற உள்ளது. இதில் முன்பதிவு செய்துள்ளவர்கள் மட்டுமே கலந்துகொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேலும், விவரங்களுக்கு, செல்போன்: 82208-88959.

அறிவிப்பு

தண்டோரா பகுதியில் இடம்பெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் விவசாயிகள், நிகழ்ச்சிகள் குறித்த நிறைகுறைகளை உடனுக்குடன் தெரிவிக்க 044-66802927 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளுங்கள். அங்கே கணினிக் குரல் வழிகாட்டும். அதற்கேற்ப 3 நிமிடங்களுக்குள், உங்கள் கருத்தைப் பதிவுசெய்யுங்கள். எதிர்முனையில் உங்களுடன் உரையாட யாரும் இருக்க மாட்டார்கள். எனவே, அந்த 3 நிமிடங்கள் முழுக்க முழுக்க உங்களுக்கே! அவசியமென்றால், நாங்களே உங்களைத் தொடர்புகொண்டு, மேலும் விவரங்களைப் பெற்றுக்கொள்வோம்.