Published:Updated:

வளமும், பலமும் பெறுவோம்!

வளமும், பலமும் பெறுவோம்!

வளமும், பலமும் பெறுவோம்!

வளமும், பலமும் பெறுவோம்!

Published:Updated:

அனைவருக்கும் பசுமை வணக்கம்!

‘மூர்த்தி சிறிதானாலும், கீர்த்தி பெரிது’ என்ற வாசகம் சிறுதானியங்களுக்கு மிகவும் பொருத்தமானது. ஒரு காலத்தில் கம்பு, சோளம், கேழ்வரகு... போன்ற சிறுதானியங்களே அன்றாட உணவாக இருந்தன. ஆனால், காலப்போக்கில் சிறுதானியங்கள் சாகுபடி குறுகியது. பத்து ஆண்டுகளுக்கு முன்பு வரைக் கூட சிறுதானிய உணவுகளைச் சாப்பிட வேண்டும் என்றால், தேடி அலையவேண்டும். வரகு, சாமை... போன்ற சிறுதானியங்களைப் பார்க்க வேண்டும் என்றால், பல நூறு மைல் பயணம் செய்யவேண்டும். இந்நிலையை மாற்ற ‘பசுமை விகடன்’ முதல் இதழ் தொடங்கி, இப்போது உங்கள் கைகளில் தவழும் இதழ் வரை சிறுதானியங்களின் மகத்துவத்தை விதைத்து வருகிறோம். இப்போது ‘கையேந்தி பவன்’ தொடங்கி, ஐந்து நட்சத்திர ஹோட்டல்கள் வரை விதவிதமான சுவையான சிறுதானிய உணவுகள் பரிமாறப்படுகின்றன.

நாளுக்கு நாள், சிறுதானியங்களைப் பயிர் செய்யும் விவசாயிகளின் எண்ணிக்கையும் கூடிக்கொண்டே உள்ளது. மேலும், சிறுதானியங்களால் நாம் பலன் பெறும் வகையில் ‘பசுமை விகடன்’ மற்றும் ‘அவள் விகடன்’ இணைந்து சென்னையில் உள்ள எம்.ஜி.ஆர். ஜானகி மகளிர் கல்லூரியில், ஜூன் 27-ம் தேதி ‘நல்உணவு சிறுதானிய விருந்து’ என்ற சிறுதானிய உணவுத் திருவிழாவை நடத்த உள்ளோம். இதில் பல்வேறு அமைப்புகளும் எங்களுடன் கைக்கோக்க முன்வந்துள்ளன.

சிறுதானியம் விதைக்கும் விவசாயிகளை வாழவைக்கும் வகையிலும், தாறுமாறான உணவுப் பழக்கங்களால் திசைமாறிப்போய், கண்டதையும் தின்று உடல்நிலையைக் கெடுத்துக் கொண்டிருக்கும் நகர மக்களுக்கு ‘உணவே மருந்து, மருந்தே உணவு’ என்ற  நம் முன்னோர்களின் நோயில்லா வாழ்வியல் முறையை விளக்கவும், இந்தத் திருவிழாவுக்கு ஏற்பாடு செய்திருக்கிறோம். வாருங்கள், வளமும், பலமும் பெறுவோம்!

-ஆசிரியர்