Published:Updated:

சர்க்கரை ஆலைக்குச் சான்றிதழ்!

சர்க்கரை ஆலைக்குச் சான்றிதழ்!

சர்க்கரை ஆலைக்குச் சான்றிதழ்!

சர்க்கரை ஆலைக்குச் சான்றிதழ்!

Published:Updated:

ரூர் மாவட்டம், புகளுரில் உள்ள ஈ.ஐ.டி பாரி சர்க்கரை ஆலை, நீடித்த நிலையான செயல்முறை மற்றும் தரமான வழிமுறைகளைக் கையாண்டு சர்க்கரை உற்பத்தியைப் பெருக்கியதற்காக ‘பான்சுக்லா’ சான்றிதழைப் பெற்றுள்ளது. கரும்பு விவசாயிகளுடன் இணைந்து செயல்படும் ஒரு நிறுவனத்துக்கு இத்தகையச் சான்றிதழ்  வழங்கப்படுவது ஆசியாவிலேயே இதுதான் முதல்முறை.

சான்றிதழைப் பெற்றுக் கொண்டு, ஈ.ஐ.டி பாரி மற்றும் முருகப்பா குழுமத்தின் தலைவர் ஏ.வெள்ளையன் பேசும்போது,

 ‘‘புகளுர் சர்க்கரை ஆலைப் பகுதி தமிழகத்தில் தண்ணீர்ப் பற்றாக்குறையாக உள்ள பகுதி. குறைந்தசெலவில் அதிக விளைச்சலை எடுப்பது என்பதுதான் ‘பான்சுக்லா’வின் நடைமுறை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆலை விவசாயிகளுக்கு இயற்கை இடுபொருட்களைப் அளித்து, அதிகமான விளைச்சலை எடுக்க வைக்கிறோம். கரும்பு பயிருக்கு ரசாயனப் பூச்சிக் கொல்லியே தெளிக்காமல், இயற்கை முறையில் பூச்சிகளைக் கட்டுப்படுத்துகிறார்கள். மேலும், ரசாயன உரங்களின் அளவைக் குறைத்துக்கொண்டு, இயற்கை உரங்களையே அதிகம் பயன்படுத்துகிறார்கள்.

கரும்புகளை மின்னணு முறையில் எடை போடுதல், விவசாயிகளுக்கான நிலுவைத் தொகையை குறித்த காலத்துக்குள் வங்கிக் கணக்கில் செலுத்துதல், மண் பரிசோதனை உள்ளிட்ட ஆலையின் பணிகளுக்காகவும் இந்த அங்கீகாரம் கிடைத்துள்ளது’’ என்றார்.

-பசுமைக் குழு