Published:Updated:

பிட்ஸ்

பிட்ஸ்

பிட்ஸ்

பிட்ஸ்

Published:Updated:

‘விதைகள் விவசாயிகளின் கையில் இருக்க வேண்டும்’

பிட்ஸ்

பாரம்பர்ய விதைகளே, இனி விவசாயிகளின் ஆயுதம். இதை உணர்ந்து பல இடங்களில் பாரம்பர்ய விதைகள் குறித்த கண்காட்சியும், விழாக்களும் நடந்து வருகின்றன. இதன் ஓர் அங்கமாக கடந்த மே 23-ம் தேதி, சென்னை, தி.நகரில் பாரம்பர்ய விதைத் திருவிழா நடைபெற்றது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அதில் பேசிய பாதுகாப்பு உணவுக்கான கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அனந்து, “விதைகள், விவசாயிகளின் கையில் இருக்க வேண்டும். கார்ப்பரேட் கம்பெனிகளின் கைகளில் ஒருபோதும் இருக்கக் கூடாது. அவர்கள் மரபணு மாற்று விதைகளைத் திணித்து வருகிறார்கள். அதைத் தடுப்பதற்காகத்தான் இந்த பாரம்பர்ய விதைப் பண்ணைகளை அமைத்திருக்கிறோம். மூலிகைகள், நாட்டு விதைகள்... என இருநூறுக்கும் மேற்பட்ட பாரம்பர்ய விதைகள் மற்றும் 80 வகையான பழங்கள், பருப்பு வகைகளின் விதைகள் ஆகியவை இங்கு உள்ளன. இதுதான் இயற்கையின் வெற்றி” என்று பெருமிதத்துடன் சொன்னார்.

“நம் பாட்டன் காலத்து வாழ்க்கை முறைகள், தற்போதைய நம் வாழ்வியலுக்கும் ஏற்றவை. நம் வாழ்வியலும் இதுதான். சென்னையில் பொது இடங்களில் கஞ்சி, கூழ் மட்டும்தான் கிடைக்கிறது. வரகு, சாமை உணவுகள் அரிதுதான். அவற்றை இங்கு பார்க்கும்போது சந்தோஷமாக இருக்கிறது” என்று குஷியோடு சொன்னார்கள், நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சென்னையைச் சேர்ந்த சிவசக்தி-ஜெயந்தி தம்பதி. விழாவில் நடிகர்கள் கிஷோர், பசுபதி ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய நடிகர் கிஷோர், “நல்ல உணவுக்காகவும், உங்கள் குழந்தைகளுக்காகவும் இயற்கை உணவுக்கு மாறுங்கள்” என்றார்.

-துரை.நாகராஜன், படங்கள்: ப.சரவணகுமார்

சுற்றுச்சூழல் தின கொண்டாட்டம்!

பிட்ஸ்

ஜூன் 5-ம் தேதி, உலக சுற்றுச்சூழல் தினத்தன்று ‘பசுமை விகடன்’ சார்பில், சென்னை, எத்திராஜ் மகளிர் கல்லூரி வளாகத்தில், மரம் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதேநாளில், பெரம்பூர் எஸ்-2 மாலில் பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. சரக்கொன்றை, சந்தனம், பூவரசு, கொய்யா உள்ளிட்ட மரக் கன்றுகள் வழங்கப்பட்டன. இந்த மரக்கன்றுகளை ‘மரம்’ கருணாநிதி வழங்கியிருந்தார்.

மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியில் பேசிய எத்திராஜ் கல்லூரி முதல்வர் நிர்மலா, “தனிமனிதன் தன்னுடைய உழைப்பையும், முன்னேற்றத்தையுமே முக்கியமாக பார்க்கிறான். சமுதாயத்துக்கு என்ன வேண்டும் என்பதை யோசிப்பதில்லை. எல்லாவற்றையும் வளர்ச்சி என்ற கோணத்திலேதான் பார்க்கிறோம். கட்டடங்கள், தொழிற்சாலைகள் எல்லாம் வளர்கின்றன. அதனால் ஏற்படும் தீமைகள், விளைவுகள் என்னவென்று யோசிப்பதில்லை. சுற்றுச்சூழலில் இப்போது இருக்கும் நிலை மிகவும் கவலை அளிக்கிறது. எதிர்கால சந்ததி குறித்து பெரும் குழப்பமே நிலவுகிறது. அதனால், சுற்றுச்சூழல் குறித்து எல்லோருக்கும் ஒரு நல்ல புரிதல் வர வேண்டும்” என்றார்.

- த. ஜெயகுமார், படங்கள் ப.சரவணகுமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism