Published:Updated:

போனது, 50...வந்தது, 19! கூட்டுறவு வங்கியில் கூட்டுக்கொள்ளை!

போனது, 50...வந்தது, 19! கூட்டுறவு வங்கியில் கூட்டுக்கொள்ளை!

போனது, 50...வந்தது, 19! கூட்டுறவு வங்கியில் கூட்டுக்கொள்ளை!

போனது, 50...வந்தது, 19! கூட்டுறவு வங்கியில் கூட்டுக்கொள்ளை!

Published:Updated:

தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகளில் பணியாற்றும் அலுவலர்களும், அவற்றில் பதவி வகிக்கும் அரசியல்வாதிகளும் முறைகேடுகளில் ஈடுபட்டு பணத்தைத் திருடுவது தொடர்கதையாக இருக்கிறது. ஒருசோறு பதமாக, தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் தாலூகாவில் உள்ள ஆரலூர் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி முறைகேடுகள், தற்போது ஆதாரப்பூர்வமாக வெளிச்சத்துக்கு வந்துள்ளன.

போனது, 50...வந்தது, 19! கூட்டுறவு வங்கியில் கூட்டுக்கொள்ளை!

இதுகுறித்துப் பேசிய முன்னோடி விவசாயி ராஜேந்திரன், ‘‘இந்த வங்கியில, தகுதியுள்ள விவசாயிகளுக்குப் பயிர்க்கடன் கொடுக்காம இழுத்தடிச்சிக்கிட்டே இருந்தாங்க. ஆனா, வங்கியின் தலைவர், செயலாளர், நிர்வாகக்குழு உறுப்பினர்கள், இவங்களோட சொந்தக்காரங்களுக்கு எல்லாம் லட்சம் லட்சமா கடன் கிடைச்சிக்கிட்டே இருந்துச்சு. தீவிரமா விசாரிக்கத் தொடங்கினப்பதான் இங்க நடந்துக்கிட்டு இருந்த முறைகேடுகள் தெரிய ஆரம்பிச்சுது. போலியான ஆவணங்கள் தயார் செஞ்சு, ஒரே சர்வே எண் உள்ள நிலத்துக்கு, வேண்டியவங்களுக்கு எல்லாம் பல பெயர்கள்ல கடன் கொடுத்திருக்காங்க. எங்க பகுதியில நெல் சாகுபடிதான் அதிகம். ஆனா, அதிகளவுல கரும்புக்குக் கடன் கொடுத்திருக்காங்க. தலைஞாயிறு கூட்டுறவு சர்க்கரை ஆலையின் ஆவணங்களை முறைகேடாகப் பயன்படுத்தியிருக்காங்க.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

எங்களோட வற்புறுத்தலால, கூட்டுறவுத்துறை சார்பதிவாளர் தலைமையில் விசாரணைக்குழு அமைச்சாங்க. 2011 முதல் 2014 வரை முறைகேடு நடந்திருக்கு. வங்கிச் செயலாளர், களமேலாளர், கிராம நிர்வாக அலுவலர், வங்கித் தலைவர், நிர்வாகக்குழு உறுப்பினர்கள் இந்த முறைகேடுகள்ல ஈடுபட்டிருக்காங்கனு விசாரணைக் குழு அறிக்கையில சொல்லியிருக்காங்க. சுமார்19 லட்சம் ரூபாய் மீட்கப்பட்டிருக்கு. இதுக்கான வட்டி வசூலிக்கப்படலை. யாரும் கைது செய்யப்படவும் இல்ல” என ஆதங்கப்பட்டார்.

போனது, 50...வந்தது, 19! கூட்டுறவு வங்கியில் கூட்டுக்கொள்ளை!

தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கச் செயலாளர் ‘சுவாமிமலை’ சுந்தரவிமலநாதன், “50 லட்சம் ரூபாய்க்கு மேல ஊழல் நடந்திருக்கு. முறைகேடு முழுமையா வெளிச்சத்துக்கு வரணும், குற்றவாளிகளும் தண்டிக்கப்படணும். தணிக்கை செய்யும் அதிகாரிகளையும் விசாரணை செய்யணும்” என்றார்.

மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் சுப்ரமணியனிடம் கேட்டபோது, “விவசாயிகளின் கோரிக்கைகளுக்குக் கண்டிப்பாக மதிப்பளிக்கப்படும். வணிகக் குற்றப்புலனாய்வுப் பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, நியாயமான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று சொன்னார்.

இறுதி நடவடிக்கையும் நேர்மையாக இருக்கும் என்று நம்புவோம்.

கு.ராமகிருஷ்ணன்

படங்கள்: க.சதீஷ்குமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism