Published:Updated:

இனியாவது திருந்துமா அரசாங்கங்கள்?!

இனியாவது திருந்துமா அரசாங்கங்கள்?!

இனியாவது திருந்துமா அரசாங்கங்கள்?!

இனியாவது திருந்துமா அரசாங்கங்கள்?!

Published:Updated:

அனைவருக்கும் பசுமை வணக்கம்!

அண்மையில் இரண்டு முக்கிய நிகழ்வுகள் நடந்துள்ளன.

திருவாரூரில் நடைபெற்ற பாரம்பர்ய நெல் திருவிழாவில், தமிழக அரசின் திட்டக்குழுத் துணைத்தலைவர் சாந்தஷீலா நாயர், ‘நமது பாரம்பர்ய நெல்லைப் பாதுகாத்து வருவதுதான், இரண்டாவது பசுமைப் புரட்சி. பாரம்பர்ய நெல் ரகங்களைப் பாதுகாப்பது போல், சிறுதானியங்களையும் பாதுகாக்க வேண்டும். இதற்கு திட்டக்குழு உதவி செய்யும்’ என்று நம்பிக்கை அளித்துள்ளார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அடுத்து, மதுரை, திண்டுக்கல், விருதுநகர் போன்ற காய்கறிகள் விளையும் பகுதிகளைப் பார்வையிட்ட கேரள மாநில அரசின் உணவுப் பாதுகாப்புத்துறை ஆணையர் அனுபமா, ‘தமிழகத்தில் விளைவிக்கப்படும் காய்கறிகளில் அதிக விஷத்தன்மை உள்ளன. வழக்கத்தைவிட 10 மடங்கு கூடுதலாக ரசாயன உரத்தைப் பயன்படுத்துகிறார்கள். இது தொடர்ந்தால், தமிழகத்திலிருந்து காய்கறிகள் கொள்முதல் செய்வதைக் குறைக்க வேண்டிய நிலை ஏற்படும் என்று கடிதம் மூலமாக எச்சரித்திருக்கிறார்.

இந்த இரண்டு நிகழ்வுகளையும் கவனித்துப் பார்த்தால், ஓர் உண்மையை நாம் நன்றாகவே விளங்கிக் கொள்ள முடியும்.

பாரம்பர்ய விதைகளை மீட்டெடுத்ததும், சிறுதானியங்களின் சாகுபடிக்கு மறுவாழ்வு கொடுத்ததும் அரசாங்கம் அல்ல. இயற்கை வேளாண்மைக்காக குரல் கொடுத்துக் கொண்டிருக்கும் ஏராளமான முன்னோடி விவசாயிகளும், ‘பசுமை விகடன்’ போன்ற ஊடகங்களும்தான். ‘மக்களே ஒரு விஷயத்தை கையில் எடுக்கும்போது, அது பல மடங்கு வளர்ச்சி பெற்று சாதனையாக மாறும்’ என்பதற்கு கொடுக்கப்பட்ட சான்றிதழ்தான்... திட்டக்குழு துணைத்தலைவரின் அந்தப் பேச்சு.

அதேசமயம், அரசாங்கம் அதிதீவிரமாக முன்னெடுத்துச் சென்ற ‘பசுமைப் புரட்சி’ எனும் திட்டத்தின் வேதனையான எதிர்விளைவுக்கு சாட்சிதான்... ‘காய்கறிகளில் அதிக விஷம்’ என்கிற கேரளாவின் இந்தக் குற்றச்சாட்டு!

இனியாவது திருந்துமா அரசாங்கங்கள்?!

-ஆசிரியர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism