Published:Updated:

தென்மேற்குப் பருவமழை எப்படி இருக்கும்? ஆலோசனை சொல்லும் ஆராய்ச்சி மையம்!

தென்மேற்குப் பருவமழை எப்படி இருக்கும்? ஆலோசனை சொல்லும் ஆராய்ச்சி மையம்!

தென்மேற்குப் பருவமழை எப்படி இருக்கும்? ஆலோசனை சொல்லும் ஆராய்ச்சி மையம்!

தென்மேற்குப் பருவமழை எப்படி இருக்கும்? ஆலோசனை சொல்லும் ஆராய்ச்சி மையம்!

Published:Updated:

ழக்கமாக ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை நமக்குக் கிடைக்ககூடிய தென்மேற்குப் பருவமழை இந்த ஆண்டு எப்படி இருக்கும் என்பது பற்றிய முன்னறிவிப்பை வெளியிட்டுள்ளது, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் இயங்கி வரும் வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையம்.

‘‘மார்ச் மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை, பசிபிக் பெருங்கடலில் பூமத்திய ரேகையை ஒட்டியுள்ள கடற்பகுதியின் மேற்பரப்பு நீரின் வெப்பநிலை, தென் மண்டல காற்றழுத்தக் குறியீடு ஆகியவற்றையும், ஆஸ்திரேலிய நாட்டிலிருந்து பெறப்பட்ட ‘மழை மனிதன்’ என்னும் கணினி கட்டமைப்பையும் பயன்படுத்தி, இந்த ஆண்டு தென்மேற்குப் பருவமழை எவ்வாறு இருக்கும் என கணித்துள்ளோம். இந்தக் கணிப்பு 60 சதவிகிதம் வெற்றியடைய வாய்ப்புகள் உள்ளன.

தென்மேற்குப் பருவமழை எப்படி இருக்கும்? ஆலோசனை சொல்லும் ஆராய்ச்சி மையம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சராசரி மழை மாவட்டங்கள்!

அரியலூர், சென்னை, கடலூர், தர்மபுரி, திண்டுக்கல், காஞ்சிபுரம், கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், நீலகிரி, பெரம்பலூர், புதுக்கோட்டை, சேலம், தஞ்சாவூர், திருவள்ளூர், திருச்சி, திருவண்ணாமலை, வேலூர் மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில், தென்மேற்குப் பருவமழை சராசரியாக கிடைக்கும் என எதிர்பார்க்கலாம்.

கோயம்புத்தூர், ஈரோடு, கரூர், மதுரை, தேனி மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்களிலும் சராசரி அளவை ஒட்டிய மழையளவு கிடைக்கும் என  எதிர்பார்க்கலாம். 

குறைவான மழை மாவட்டங்கள்!

நாகப்பட்டினம், ராமநாதபுரம், சிவகங்கை, திருநெல்வேலி, திருவாரூர், தூத்துக்குடி மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் சராசரி அளவை விட குறைவாகவே மழை கிடைக்கும் எனத் தெரிய வருகிறது.  

சராசரி மழையளவு என்பது... நீண்ட கால சராசரி மழையளவிலிருந்து 10 சதவிகிதம் கூடுதலாகவோ குறைவாகவோ இருக்கலாம். சராசரியை ஒட்டிய மழையளவு என்பது, நீண்ட கால சராசரி மழையளவிலிருந்து 11 சதவிகிதம் முதல் 20 சதவிகிதம் வரை குறைவாக இருக்கும். சராசரிக்குக் குறைவான மழையளவு என்பது, நீண்ட கால சராசரி மழையளவிலிருந்து 20 சதவிகிதம் வரை குறைவாக இருக்கும்’’ என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குழு விவசாயம்தான் வெற்றி பெறும்!

வேலூர் மாவட்டம், ஆற்காடு அடுத்துள்ள தக்காங்குளம் கிராமத்தில் மே 10-ம் தேதி ‘பருவத்துக்கேற்ற பயிர் சாகுபடி’ என்ற தலைப்பில் கருத்தரங்கு நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு ‘பசுமை விகடன்’ ஊடக ஆதரவு வழங்கியிருந்தது. நூற்றுக்கும் மேற்பட்டோர் கருத்தரங்கில் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் சிறப்புரை ஆற்றிய முன்னோடி இயற்கை விவசாயி ‘சத்திய மங்கலம்’ சுந்தரராமன், “விவசாயத்தில் தனி ஆள் வெற்றி பெறுவது கடினம். விவசாயிகள் தங்களுக்குள் தகவலைப் பகிர்ந்து கொண்டு செயல்படக்கூடிய, குழு விவசாயம்தான் வெற்றி பெறும். சமூக மற்றும் அரசியல் சேவைகளில் கிடைக்காத நிம்மதி விவசாயத்தில் கிடைக்கிறது. அதிலும் நாம், ‘இயற்கை விவசாயி’ என்பதில் பெருமை கொள்ளலாம். மக்களுக்கு ஆரோக்கியமான உணவு வழங்கும் கடமை, விவசாயிகளுக்கு இருக்கிறது. அது இயற்கை விவசாயிகளால் மட்டுமே முடியும். பத்து விவசாயிகள் ஒன்றாக இணைந்து திட்டமிட்டால், நிச்சயம் வெற்றி பெறலாம். நான் பயிற்சி வகுப்புகளில் கற்றதைச் செய்துபார்த்து இந்தளவுக்கு வளர்ந்துள்ளேன். இதைப் போல் நீங்களும் வெற்றிபெற வேண்டும்” என்றார்.

-சு.ராஜா

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism