Published:Updated:

இந்த ஆண்டும் குறுவை சாகுபடி இல்லை... வேதனையில் விவசாயிகள்!

இந்த ஆண்டும் குறுவை சாகுபடி இல்லை... வேதனையில் விவசாயிகள்!

இந்த ஆண்டும் குறுவை சாகுபடி இல்லை... வேதனையில் விவசாயிகள்!

இந்த ஆண்டும் குறுவை சாகுபடி இல்லை... வேதனையில் விவசாயிகள்!

Published:Updated:

மேட்டூர் அணையில் குறைவான அளவே தண்ணீர் இருப்பதால், குறுவை சாகுபடிக்கு ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணையைத் திறக்க இயலாது. பம்ப் செட் மூலமாக குறுவை சாகுபடி மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு சிறப்புத் தொகுப்புத் திட்டம் வழங்கப்படும்” என தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

“இந்த அறிவிப்பு அதிர்ச்சியைக் கொடுத்தாலும், இது நாங்கள் எதிர்பார்த்ததுதான்” என்கிறார்கள், டெல்டா விவசாயிகள்.

இந்த ஆண்டும் குறுவை சாகுபடி இல்லை... வேதனையில் விவசாயிகள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இதுகுறித்து நம்மிடம் பேசிய தமிழக உழவர் முன்னணியின் தலைவர் ஆறுமுகம், “சுமார் நான்கு லட்சம் ஏக்கர் பரப்பில் குறுவை சாகுபடி நடைபெறுவது வழக்கம். ஆனால், கடந்த மூன்று ஆண்டுகளாக குறுவை சாகுபடியைக் கை விட வேண்டிய நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளார்கள். இந்த ஆண்டும் அதே நிலை.

கர்நாடகாவிடமிருந்து காவிரி நீரைப் பெற தமிழக அரசு எந்த ஒரு முயற்சியையுமே மேற்கொள்ளவில்லை. கர்நாடகாவில் தென்மேற்குப் பருவமழை பொழியத் தொடங்கி விட்டது. ஏற்கெனவே, அங்குள்ள அணைகளில் தண்ணீர் இருக்கிறது. ஆனாலும், தமிழக முதல்வர் ஜெயலலிதா, கர்நாடகாவிடம் தண்ணீர் கேட்க ஏனோ தயங்குகிறார். நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின்படி, கடந்த ஆண்டு டிசம்பர் முதல் இந்த ஆண்டு மே மாதம் வரை சுமார் 45 டி.எம்.சி தண்ணீரை தமிழகத்துக்கு கர்நாடகா தர வேண்டும். இதனைப் பெற்றுத் தருவதற்கு எந்த ஒரு முயற்சியையுமே மேற்கொள்ளாமல், பிரச்னையை மடை மாற்றும் விதமாக, குறுவை சிறப்புத் தொகுப்புத் திட்டத்தை அறிவித்திருக்கிறார், தமிழக முதல்வர்” என்றவர் தொடர்ந்தார்.

இந்த ஆண்டும் குறுவை சாகுபடி இல்லை... வேதனையில் விவசாயிகள்!

“காவிரி தண்ணீர், காலம் கடந்து வருவதால், சம்பா நெல் சாகுபடியும் மழை வெள்ளத்தில் சிக்கி பாதிப்புகளுக்கு உள்ளாகிறது. விவசாயிகள் கடன் சுமைகளில் இருந்து மீண்டு வர, 2012, 2013 மற்றும் 2014 ஆகிய ஆண்டுகளுக்கான விவசாயக் கடன்களை அரசு தள்ளுபடி செய்ய வேண்டும். பயிர் காப்பீடை அரசே நேரடியாக செயல்படுத்த வேண்டும். இவைதான் உண்மையில் விவசாயிகளுக்குப் பயனளிக்கும்” என்றார், ஆறுமுகம்.

தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்புச் சங்கத்தின் துணைச் செயலாளர் சுகுமாறன், “கடந்த ஆண்டும் குறுவை சாகுபடி கைவிடப்பட்டது. அப்போதும் இதேபோல் சிறப்புத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. அதனால் விவசாயிகளுக்கு எந்தப் பலனுமில்லை. அதிகாரிகளும் ஆளும் கட்சி பிரமுகர்களும்தான் பலன் அடைந்தார்கள்.

இந்த ஆண்டும் குறுவை சாகுபடி இல்லை... வேதனையில் விவசாயிகள்!

இந்த ஆண்டு சிறப்புத் தொகுப்புத் திட்டத்தில் ‘இலவசமாக ஜிப்சம், சலுகை விலையில் உயிர் உரங்கள் வழங்கப்படும்’ என அறிவிக்கப்பட்டுள்ளது. அரசியல் குறுக்கீடுகளை எல்லாம் தாண்டி அதிர்ஷடவசமாக இவை விவசாயிகளுக்குக் கிடைத்தாலுமே கூட பலன் அளிக்காது. காரணம் பம்ப் செட் விவசாயிகள், குறுவை சாகுபடிக்கான நடவுப் பணிகளைத் தொடங்கி விட்டார்கள். இப்போதே அடியுரம் போட்டாக வேண்டும். ஆனால், சிறப்புத் தொகுப்புத் திட்டத்தில் ஜிப்சம், உயிர் உரங்கள் விவசாயிகளின் கைகளுக்கு வந்து சேர ஓரிரு மாதங்கள் கூட ஆகும்.

சிறப்புத் தொகுப்புத் திட்டத்தில் 12 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். கடந்த ஆண்டுகளிலும் இதேபோல் அறிவிப்புகள் வெளியாயின. ஆனால், அறிவிக்கப்படாத பல மணி நேர மின்வெட்டால் விவசாயிகள் திணறிப்போனார்கள். அதே நிலை இந்த ஆண்டும் ஏற்பட்டுவிடக்கூடாது” என்று கடந்த ஆண்டு அனுபவங்களை எடுத்து வைத்தார்.

என்ன நடக்கிறது என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!

கு.ராமகிருஷ்ணன்

படங்கள்: சு.குமரேசன், கே.குணசீலன், க.தனசேகரன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism