Published:Updated:

விறகு அடுப்பும், ருசியான சமையலும்!

விறகு அடுப்பும், ருசியான சமையலும்!

விறகு அடுப்பும், ருசியான சமையலும்!

விறகு அடுப்பும், ருசியான சமையலும்!

Published:Updated:

ன்னிக்கு ‘உலகத்துலயே நாங்கதான் வல்லரசு’னு சொல்லிக்கிற நாடுங்க எல்லாம், காட்டுல வேட்டையாடி சாப்ட்டுட்டு இருந்த காலத்துலயே, ‘உணவே மருந்து, மருந்தே உணவு’ங்கிற நுட்பத்தைக் கண்டுபுடிச்சு, அறுசுவையோட ருசிச்சு, ரசிச்சு சந்தோஷமா சாப்பிட்ட மனுஷங்க வாழ்ந்த மண் இது. சங்க இலக்கியத்துல கூட ‘மடை நூல்’னு சமையல்கலையைப் பத்தி சொல்ற புத்தகங்களுக்குப் பேரு உண்டு. ‘கடுகு இட்டுக் காய்கறிகளைத் தாளிப்பது’, ‘பசு வெண்ணெயில் பொரிப்பது’, ‘முளிதயிர் பிசைந்து தயிர்க் குழம்பு வைப்பது’னு சமையல்கலை பத்தின நுட்பத்தை விளக்கமா அதுல சொல்லி வெச்சிருக்காங்க.

விறகு அடுப்பும், ருசியான சமையலும்!

சமையல்னா, அத பெண்கள்தான் செய்யணும்ங்கிறது கட்டாயம் கிடையாது. எப்பவாவது அருமையான விருந்து சாப்பிட்டவுடனே, ‘யாருப்பாது ‘நளபாகம்’ மாதிரி சமைச்சு அசத்தியிருக்காரு’னு சொல்றதுண்டு. ஆக, ஆண்களாலயும் சுவையாவும், மணமாவும் சமைக்க முடியும். இன்னைக்கும்கூட, திருமணம், காதுகுத்து, திருவிழா... மாதிரி நேரங்கள்ல நூத்துக்கணக்கான பேருக்கு சமைக்கிறதுனா, பெரும்பாலும் ஆண்கள்தான் சமையல் வேலைகளைச் செய்றாங்க. ஆனா, இந்தக் காலத்துல பெரும்பாலான ஆண்களுக்கு, சமையல் சங்கதி தெரியாது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வீட்டுல சாப்பாடு சத்தாவும், ருசியாவும் இருந்தா, நோய்நொடி எட்டி கூடப்பார்க்காது. நல்லா ருசியா சமைக்கத் தெரிஞ்சவங்களுக்கு ‘முக்கால் மருத்துவர்’னு பட்டமே தரலாம்.

அவசர, அவரசமா சாப்பிடற ஃபாஸ்ட்ஃபுட் கலாசாரம் கிராமத்துப் பக்கமும், பரவிக்கிட்டு இருக்கு. குச்சியில குத்தி சாப்பிடறதும், சில்வர் கரண்டியில, எடுத்துச் சாப்பிடறதும்தான் நாகரிகம்னு நினைக்காதீங்க. ஒவ்வோர் உணவையும், முறைப்படி சாப்பிட்டாத்தான், அதோட முழுபலனும் நமக்குக் கிடைக்கும். இந்த மண்ணுல எப்படி சாப்பிடணும்ங்கிற நுட்பத்தையே 12 வகையா பிரிச்சு வெச்சு வாழ்ந்திருக்காங்க.

1. மிகச்சிறிய அளவே உட்கொள்வது - அருந்துதல்.

2. பசி தீர சாப்பிடுவது - உண்ணல்.

3. நீர் சேர்ந்த பண்டத்தை ஈர்த்து உண்பது - உறிஞ்சுதல்.

4. நீரில் உணவை உறிஞ்சி பசி நீங்க உட்கொள்வது - குடித்தல்.

5. பண்டங்களைக் கடித்து உட்கொள்வது - தின்றல்.

6. ரசித்து மகிழ்வது - துய்த்தல்.

7. நாக்கினால் துழாவி உட்கொள்ளுதல் - நக்கல்.

8. முழுவதையும் ஒரே வாயில் உறிஞ்சினால் - உறிதல்.

9. நீர்ப்பண்டத்தைச் சிறுகக் குடிப்பது - பருகல்.

10. பெருவேட்கையுடன் மடமடவென்று உட்கொண்டால் - மாந்தல்.

11. கடியப்பண்டத்தைக் கடித்து உண்பது - கடித்தல்

12. வாயில் வைத்து அதிகம் அரைக்காமல் உண்பது - விழுங்கல்...

இப்படி மடை நூல்ல விளக்கமா சொல்லியிருக்காங்க.

‘போன மாசம, தஞ்சாவூர் பக்கம் போனப்ப... அந்த மெஸ்ல சாப்பிட்ட கோழிக்குழம்பு பிரமாதம்...’ ‘சிதம்பரம் போகும்போது, புத்தூர் கடையில ஒரு மணி நேரம் காத்திருந்து திருப்தியா சாப்ட்டோம்னு....’ நண்பர்கள் இப்படியெல்லாம் பேசிக்கிறதைக் கேட்டிருப்போம். இப்படி நல்ல பேரு வாங்கின, ஹோட்டல்கள் உள்ளே போய் கொஞ்சம் உன்னிப்பா கவனிச்சுப் பார்த்தீங்கன்னா இவங்கள்லாம் விறகு அடுப்புலதான் சமைக்கிறாங்கங்கிற ரகசியம் உங்களுக்குத் தெரியவரும்.

‘‘சைவமா இருந்தாலும், அசைவமா இருந்தாலும்... விறகு அடுப்புல சமைக்கும்போதுதான் ருசியும், கைமணமும் கூடுது. குறிப்பா, விறகு அடுப்புல கோழிக்கறியை நல்லெண்ணெய் விட்டுவறுக்கும்போதுதான் கொழுப்பு பக்குவமாக மிதந்து வரும். இந்தக் கோழிக்குழம்பு வாசம், ரோட்டுல போற ஆளையும்கூட சுண்டி இழுக்கும். இந்தப் பக்குவம் கேஸ் அடுப்புல சமைக்கும்போது வராது. அதனாலதான், எங்கள் ஓட்டலுக்கு வரவர கூட்டம் பெருகிக்கிட்டே இருக்கு’னு எனக்குத் தெரிஞ்ச ஓட்டல் முதலாளி, விறகு அடுப்பு மகிமையை விளக்கமா சொன்னாரு.

என்னதான், கேஸ் அடுப்பு, மின்சார அடுப்புனு வந்தாலும், இப்பவும்கூட சித்த மருந்து, ஆயுர்வேத மருந்துங்க தயாரிக்க, விறகு அடுப்பைத்தான் பயன்படுத்தறாங்க. ‘எங்கள் தயாரிப்புகள் விறகு அடுப்பு மூலமே தயாரிக்கப்படுகின்றன’னு சித்த மருந்து பாட்டில் மேல எழுதி ஒட்டி வெச்சிருக்காங்க.

 மண்புழு மன்னாரு

 ஓவியம்: ஹரன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism