Published:Updated:

‘‘சுற்றுச்சூழலோடு பொருந்தும் விவசாயம்!’’

எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம்

‘‘சுற்றுச்சூழலோடு பொருந்தும் விவசாயம்!’’

எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம்

Published:Updated:

றட்சி, வெள்ளம், தண்ணீர் பற்றாக்குறை என்ற செய்திகள் எல்லாம் சாதாரணமாகி விட்டன. இந்தியாவில் தண்ணீர் பற்றாக்குறையால் விவசாயம் செய்ய முடியாமல் பல விவசாயிகள் தற்கொலை செய்து வருகின்றனர். வறட்சிக்குப் பயிர்கள் காய்ந்துவிட்டாலோ, மழைக்குப் பயிர்கள் அழிந்துவிட்டாலோ அதற்கான காரணங்களை அறிந்துகொள்வதில் நாம் ஆர்வம் காட்டுவதில்லை. இந்நிலையில் பருவநிலை மாற்றம் குறித்தான புரிதல் மற்றும் அதை மக்களிடம் கொண்டுசெல்வது பற்றிய ’பத்திரிகையாளர்களுக்கான பயிற்சி வகுப்பு’ நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையில் மே 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம், இந்தப் பயிற்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது.

‘‘சுற்றுச்சூழலோடு பொருந்தும் விவசாயம்!’’

பயிற்சியில் பேசிய ஆராய்ச்சி மையத்தின் முதன்மை விஞ்ஞானி ராமசுப்ரமணியம், “மாறிவரும் பருவநிலை மாற்றத்தால் பூமியின் வெப்பநிலை 0.6 டிகிரி வரை உயர்ந்திருக்கிறது. கடல்மட்டம் 10 செ.மீ லிருந்து 20 செ.மீ. வரை உயர்ந்திருக்கிறது. பனிமலைகள் 10 சதவிகிதம் குறைந்திருக்கின்றன. கடந்த 150 ஆண்டுகளில் பூமியில் கார்பன்-டை-ஆக்ஸைடின் அளவு 750 பிபிஎம் (பார்ட்ஸ் பர் மில்லியன்)லிருந்து 430 பிபிஎம் வரை உயர்ந்திருக்கிறது. மீத்தேனின் அளவு 750 பிபிபி (பார்ட்ஸ் பர் பில்லியன்) லிருந்து 1,750 பிபிபி வரை அதிகரித்திருக்கிறது. நைட்ரஸ்-ஆக்ஸைடு 270 பிபிபியிலிருந்து 310 பிபிபி வரை உயர்ந்திருக்கிறது” என்ற அதிர்ச்சிச் செய்தியைச் சொன்னார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

‘‘சுற்றுச்சூழலோடு பொருந்தும் விவசாயம்!’’

“பருவநிலை மாற்றங்களை முன்வைத்தே கொல்லிமலையில் சிறுதானிய சாகுபடியை ஊக்கப்படுத்தி வருகிறோம். மண்புழு உரம், தொழுவுரங்களைக் கொண்டு சுற்றுச்சூழலோடு பொருந்திப் போகிற விவசாயத்தை முன்னெடுத்து வருகிறோம். பருவநிலையை அறிவதற்கு 7 இடங்களில் காலநிலை அறியும் கருவிகளைப் பொருத்தி இருக்கிறோம். இதில் பதிவாகும் தகவல்களையும், வானிலை அறிக்கைகளையும் விவசாயிகளுக்குத் தெரிவித்து, அதன்மூலம் பயிர் தேர்வு முறைகளைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தி வருகிறோம்.

பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் தண்ணீர் பற்றாக்குறைக்கான தீர்வாக நபார்டு வங்கி உதவியோடு தடுப்பணைகள், குட்டைகளைக் கட்டி தண்ணீரைச் சேமிக்குமாறு விவசாயிகளை ஊக்கப்படுத்தி வருகிறோம்’’ என்றார் ஆராய்ச்சி மையத்தின் முதன்மை விஞ்ஞானி இஸ்ரேல் ஆலிவர் கிங்.

த.ஜெயகுமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism