Published:Updated:

தண்டோரா

தண்டோரா

தண்டோரா

தண்டோரா

Published:Updated:

‘தண்டோரா’ பகுதியில் இடம்பெறும் நிகழ்ச்சிகளில் கடைசி நேர மாறுதல்கள் ஏற்படலாம். எனவே, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், அமைப்புகள் ஆகியவற்றிடம் நிகழ்ச்சி குறித்த தகவல்களை தொலைபேசி அல்லது செல்போன் வாயிலாக, முன்கூட்டியே உறுதிசெய்த பின், பயண ஏற்பாடுகளைச் செய்யவும். 

- ஆசிரியர்

இலவசப் பயிற்சிகள்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

செல்லப் பிராணிகள்!

சேலம், கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில், ஜூன் 18-ம் தேதி ‘செல்லப் பிராணிகள் வளர்ப்பு’, 23-ம் தேதி, ‘வெள்ளாடு வளர்ப்பு’, 30-ம் தேதி, ‘கால்நடைகளுக்கான பசுந்தீவன உற்பத்தி மற்றும் பதப்படுத்தும் முறைகள்’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு செய்துகொள்ளவும்.

தொடர்புக்கு, தொலைபேசி: 0427-2410408.

நாட்டுக் கோழி!

சிவகங்கை மாவட்டம், பிள்ளையார்ப்பட்டியில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியின் உழவர் பயிற்சி மையத்தில், ஜூன் 18 -ம் தேதி ‘நாட்டுக் கோழி வளர்ப்பு’, 23-ம் தேதி, ‘தென்னையில் ஊடுபயிர் சாகுபடி’, 24-ம் தேதி, ‘வருமானம் தரும் மரம் வளர்ப்பு’, 30-ம் தேதி, ‘சிறுதானியப் பயிர்கள் சாகுபடி’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு செய்துகொள்ளவும்.

தொடர்புக்கு, செல்போன்: 99416-47893, 94885-75716.

நவீன முறை ஆடு!

திண்டுக்கல், கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் ஜூன் 22-ம் தேதி, ‘பாரம்பர்ய முறையில் நாட்டுக் கோழி வளர்ப்பு’, 23-ம் தேதி, ‘நவீன முறையில் ஆடு வளர்ப்பு’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு செய்துகொள்ளவும்.

தொடர்புக்கு, தொலைபேசி: 0451-2460141

தண்டோரா

காளான் வளர்ப்பு!

ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிப்பாளையம் மைராடா வேளாண் அறிவியல் மையத்தில், ஜூன் 16-ம் தேதி, ‘தேனீ வளர்ப்பு’, 17-ம் தேதி, ‘ஒருங்கிணைந்த பண்ணையம்’, 24-ம் தேதி, ‘காளான் வளர்ப்பு’, 25-ம் தேதி, ‘வெள்ளாடு வளர்ப்பு’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு செய்துகொள்ளவும்.

தொடர்புக்கு, தொலைபேசி: 04285-241626.

கட்டணப் பயிற்சிகள்

உயிர்ச்சூழல் மாநாடு!

புதுக்கோட்டை மாவட்டம், ஒடுகம்பட்டி, குடும்பம்-கொழிஞ்சிப் பண்ணையில் ஜூன் 19, 20 தேதிகளில் ‘உயிர்ச்சூழல் பசுமை கிராமம்-மாநில மாநாடு’ நடைபெற உள்ளது. மாநாட்டில், ‘இயற்கை வேளாண்மை, பாரம்பர்ய உணவு’, ‘உயிர்ச்சூழல்’ குறித்த கருத்தரங்குகள் நடைபெற உள்ளன. முன்னோடி இயற்கை விவசாயிகள் ‘அறச்சலூர்’ ரா.செல்வம், ‘தஞ்சாவூர்’ கோ.சித்தர், ‘நெல்’ ஜெயராமன்.... போன்றவர்கள் கருத்துரை வழங்கவுள்ளனர். சிறுதானிய விதைத் திருவிழா, ‘இயற்கை வேளாண் விஞ்ஞானி’ கோ.நம்மாழ்வார் பெயரில் விருதுகளும் வழங்கப்பட உள்ளன. உணவு மற்றும் தங்குமிட கட்டணம் `300 மட்டும். முன்பதிவு முக்கியம்.

தொடர்புக்கு, செல்போன்: 98424-03493, 98424-33187.

விதை உற்பத்தி!

தூத்துக்குடி மாவட்டம், வாகைகுளம் ஸ்காட் வேளாண்மை அறிவியல் மையத்தில், ஜூன்- 17ம் தேதி, ‘வணீகரீதியில் வெள்ளாடு வளர்ப்பு’, 25-ம் தேதி, ‘வணிக ரீதியிலான காய்கறி சாகுபடி’, 26-ம் தேதி ‘வீட்டுத்தோட்டம் அமைத்தல்’ 27-ம் தேதி ‘விதை உற்பத்தி மற்றும் விற்பனை வாய்ப்புகள் ‘ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. ஒவ்வொரு பயிற்சிக்கும் ரூ.150 கட்டணம். முன்பதிவு செய்துகொள்ளவும்.

தொடர்புக்கு, செல்போன்: 99429-78526, தொலைபேசி: 0461-2269306.

இயற்கை இடுபொருட்கள்!

‘இயற்கை இடுபொருட்கள் தயாரிப்புப் பயிற்சி’ கரூர் மாவட்டம், தென்னிலை கிராமத்தில் உள்ள வினோபா சேவா சங்கத்தில் ஜூன் 22-ம் தேதியும், நாமக்கல் மாவட்டம், மோகனூர் வடிவேல் தோட்டத்தில் ஜூன் 24-ம் தேதியும், கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை அக்‌ஷயா அக்ரோ சர்வீஸில் சென்டரில் ஜூன் 30-ம் தேதியும் நடைபெற உள்ளன. மண்ணை வளப்படுத்தும் இயற்கை உரங்கள், அசோலா வளர்ப்பு, கால்நடைகளுக்கு ஏற்ற தீவன வகைகள் உற்பத்திப் பற்றி அசோலா வளர்ப்பு நிபுணர் முனைவர் பி.கமலாசனன் பயிற்சி அளிக்கவுள்ளார். மதிய உணவு, தேநீர் வழங்கப்படும். கட்டணம் `150 மட்டும். முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு, செல்போன்: 82200-22205

அறிவிப்பு

தண்டோரா பகுதியில் இடம்பெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் விவசாயிகள், நிகழ்ச்சிகள் குறித்த நிறைகுறைகளை உடனுக்குடன் தெரிவிக்க 044-66802927 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள். அங்கே கணினிக் குரல் வழிகாட்டும். அதற்கேற்ப 3 நிமிடங்களுக்குள், உங்கள் கருத்தைப் பதிவுசெய்யுங்கள். எதிர்முனையில் உங்களுடன் உரையாட யாரும் இருக்க மாட்டார்கள். எனவே, அந்த 3 நிமிடங்கள் முழுக்க முழுக்க உங்களுக்கே! அவசியமென்றால், நாங்களே உங்களைத் தொடர்புகொண்டு, மேலும் விவரங்களைப் பெற்றுக்கொள்வோம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism