Published:Updated:

மெத்தனத்தில் நெடுஞ்சாலைத்துறை... அச்சத்தில் விவசாயிகள்!

மெத்தனத்தில் நெடுஞ்சாலைத்துறை... அச்சத்தில் விவசாயிகள்!

மெத்தனத்தில் நெடுஞ்சாலைத்துறை... அச்சத்தில் விவசாயிகள்!

மெத்தனத்தில் நெடுஞ்சாலைத்துறை... அச்சத்தில் விவசாயிகள்!

Published:Updated:

ஜூன் 12-ம் தேதி தண்ணீர் திறப்பு இல்லை என்கிறது தமிழக அரசு. இதற்குப் பிறகு திறந்தாலும் எங்கள் பகுதிக்கு இப்போதைக்கு தண்ணீர் வர வாய்ப்பே இல்லாமல் செய்துவிட்டது நெடுஞ்சாலைத்துறை’’ என குற்றம்சாட்டுகிறார்கள், தஞ்சாவூர் மாவட்டம், கல்யாண ஓடை ஆற்றுப்பாசன விவசாயிகள்.

இதுபற்றி நம்மிடம் பேசிய வெண்டாறுக்கோட்டை படுகைப் பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் வீரசேனன், “ஜனவரி மாத இறுதியில் மேட்டூர் அணை மூடப்படுவது வழக்கம். ஆறுகளின் குறுக்கே பாலம் கட்டுவதாக இருந்தால் பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்தில் பணியைத் தொடங்கி, ஜூன் முதல் வாரத்துக்கு முன்பாகவே நிறைவு செய்துவிட வேண்டும். இதுகுறித்து பிப்ரவரி மாதம் நடைபெற்ற விவசாயிகள் குறை தீர்ப்புக் கூட்டத்தில் கூடச் சொல்லியிருந்தோம். ஆனாலும், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அலட்சியமாகவே செயல்படுகிறார்கள்.

மெத்தனத்தில் நெடுஞ்சாலைத்துறை... அச்சத்தில் விவசாயிகள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தஞ்சாவூர் அருகே சூரக்கோட்டையில் கல்யாண ஓடை ஆற்றின் குறுக்கே பாலம் கட்டுவதற்கு மே மாத இறுதியில்தான் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் அனுமதியே கேட்டிருக்கிறார்கள். இப்போதுதான் வேலை தொடங்கப்பட்டிருக்கிறது. இது முடிவதற்கு இன்னும் பல வாரங்கள் ஆகும். அதனால், இந்தப் பகுதிகளில் பாசனத்துக்கு மடை திறப்பதைத் தாமதப்படுத்துவார்கள். சுமார் 65 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் இந்த கல்யாண ஓடை ஆற்றுப் பாசனத்தை நம்பியிருக்கின்றன. 5.12.2012-ம் தேதியிட்ட பொதுப்பணித்துறை செயலாளர் உத்தரவின்படி, ஆறுகளின் குறுக்கே பாலம் கட்டுவதற்கு நெடுஞ்சாலைத்துறை, அரசிடம்தான் அனுமதி பெறவேண்டும். ஆனால் பொதுப்பணித்துறையில் பணியாற்றும் கீழ்நிலை அதிகாரிகளிடமே நெடுஞ்சாலைத்துறையினர் அனுமதி வாங்கி விடுகிறார்கள்” என்றார்.

மெத்தனத்தில் நெடுஞ்சாலைத்துறை... அச்சத்தில் விவசாயிகள்!

இப்பிரச்னை தொடர்பாக தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் சுப்பையனிடம் கேட்டபோது, “பாலம் கட்டும் பணி வேகமாக நடைபெறுகிறது. இன்னும் சில நாட்களில் முடிவடைந்துவிடும். அதற்குள் மேட்டூர் அணை திறக்கப்பட்டாலும் கூட, இந்த ஆற்றில் கொஞ்சமும் தாமதம் இல்லாமல் தண்ணீர் திறக்கப்படும். இதற்கான மாற்று வழி குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன’’என்றார்.

ஆனால், ‘‘இந்த ஆற்றின் கொள்ளளவு வினாடிக்கு 1,100 கனஅடி. மாற்றுக்குழாய்களின் வழியாக அதிகபட்சம் 300 கன அடிதான் தண்ணீர் திறக்க முடியும். இதுபோல் குறைவான அளவு தண்ணீர் திறந்தால், வாய்க்கால்களுக்கு வந்து சேரவே சேராது” என்று குமுறுகிறார் இந்தப் பகுதி விவசாயி ராமதாஸ்.

கு.ராமகிருஷ்ணன்

படங்கள்: கே.குணசீலன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism