Published:Updated:

தண்டோரா

தண்டோரா

‘தண்டோரா’ பகுதியில் இடம்பெறும் நிகழ்ச்சிகளில் கடைசி நேர மாறுதல்கள் ஏற்படலாம். எனவே, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், அமைப்புகள் ஆகியவற்றிடம் நிகழ்ச்சி குறித்த தகவல்களை தொலைபேசி அல்லது செல்போன் வாயிலாக, முன்கூட்டியே உறுதிசெய்த பின், பயண ஏற்பாடுகளைச் செய்யவும். 

- ஆசிரியர்

தண்டோரா

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இலவசப் பயிற்சிகள்

மக்காச்சோளம்..!

காஞ்சிபுரம் மாவட்டம், காட்டுப்பாக்கம் வேளாண் அறிவியல் மையத்தில் ஜூலை 2-ம் தேதி ‘ஒருங்கிணைந்த பண்ணையம்-கருத்தரங்கு மற்றும் கண்காட்சி’ 3-ம் தேதி ‘வீரிய ரக காய்கறி உற்பத்தி’ 9-ம் தேதி ‘ஜப்பானிய காடை வளர்ப்பு’ 10-ம் தேதி ‘மதிப்பூட்டப்பட்ட சிறுதானியப் பொருட்கள் தயாரித்தல்’ 15-ம் தேதி’ இயற்கை உர உற்பத்தி’ 21-ம் தேதி ‘வீரிய ரக மக்காச்சோளம் சாகுபடி தொழில்நுட்பங்கள்’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு செய்து கொள்ளவும்.

தொடர்புக்கு. தொலைபேசி: 044-27452371.

இயற்கைக் காய்கறி!

கடலூர் மாவட்டம், பண்ருட்டி சக்கரபாணி செட்டியார் திருமண மண்டபத்தில் ஜூலை 17-ம் தேதி, ‘இயற்கைக் காய்கறிகள் சாகுபடி’ கருத்தரங்கு நடைபெற உள்ளது. கடலூர், விழுப்புரம், புதுச்சேரி மாவட்ட விவசாயிகளுக்கு மட்டுமே முன்னுரிமை. முன்பதிவு செய்துகொள்ளவும். ஏற்பாடு: பசுமை இயற்கை விவசாய இயக்கம், விழுப்புரம்.

தொடர்புக்கு, செல்போன்: 78118-97510, 97903-27890

பூச்சிவிரட்டி..!

அரியலூர் மாவட்டம், சோழன்மாதேவியில் வேளாண் அறிவியல் மையத்தில் ஜூன் 29-ம் தேதி ‘இயற்கை உரங்கள் மற்றும் மூலிகைப் பூச்சிவிரட்டித் தயாரிப்பு தொழில்நுட்பப் பயிற்சி’ நடைபெற உள்ளது. முன்பதிவு செய்துகொள்ளவும்.
தொடர்புக்கு, தொலைபேசி: 04331-290335.

பாரம்பர்ய விதைத் திருவிழா!

திருச்சி, தில்லைநகர் மக்கள் மன்றத்தில் ஜூலை 11-12 தேதிகளில், ‘பாரம்பர்ய விதை மற்றும் மூலிகைத் திருவிழா’ நடைபெற உள்ளது. இதில், கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி ஆகியவை நடைபெற உள்ளன. ‘ பஞ்சகவ்யா’ நடராஜன், ‘ரீஸ்டோர்’ அனந்து, கால்நடை மருத்துவர் காசிபிச்சை ஆகியோர் கருத்துரை வழங்கவுள்ளனர். அனுமதி இலவசம். முன்பதிவு அவசியம். ஏற்பாடு: பசுமை சிகரம் அறக்கட்டளை

தொடர்புக்கு, செல்போன்: 94428-16863, 99441-00656

மஞ்சள் சாகுபடி...!

நாமக்கல், வேளாண் அறிவியல் நிலையத்தில் ஜூலை 6-ம் தேதி, ‘நிலக்கடலை மற்றும் ஆமணக்கு சாகுபடித் தொழில்நுட்பங்கள்’ 7-ம் தேதி, ‘மஞ்சள் சாகுபடித் தொழில்நுட்பங்கள்’ 20-ம் தேதி, ‘வெள்ளாடுகளில் குட்டிகள் இறப்பைத் தடுத்தல், வெள்ளாடுகளுக்கான கலப்புத் தீவன தயாரிப்புமுறைகள்’ 21-ம் தேதி, ‘காடை வளர்ப்பு மற்றும் பராமரிப்பு முறைகள்’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன.

பயிற்சிக்கு வரும் விவசாயிகள், ஆதார் எண்ணைக் கண்டிப்பாக பதிவு செய்ய வேண்டும். முன்பதிவு செய்து கொள்ளவும்.

தொடர்புக்கு, தொலைபேசி: 04286-266345, 266244.

பசுந்தீவனம்!

சேலம்,கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைகழகப்பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் ஜூன் 30-ம் தேதி,’ கால்நடைகளுக்கான பசுந்தீவன உற்பத்தி மற்றும் பதப்படுத்தும் முறைகள்’ பற்றிய பயிற்சி நடைபெற உள்ளது. முன்பதிவு அவசியம்.
தொடர்புக்கு, தொலைபேசி: 0427-2410408

சிறுதானியம்!

சிவகங்கை மாவட்டம், பிள்ளையார்ப்பட்டியில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியின் உழவர் பயிற்சி மையத்தில் ஜூன் 30-ம் தேதி,’ சிறுதானியப் பயிர்கள் சாகுபடி’ பயிற்சி நடைபெற உள்ளது. முன்பதிவு செய்துகொள்ளவும்.
தொடர்புக்கு, செல்போன்: 99416-47893, 94885-75716

கட்டணப் பயிற்சிகள்

விதை உற்பத்தி!

தூத்துக்குடி மாவட்டம், வாகைகுளம் ஸ்காட் வேளாண்மை அறிவியல் மையத்தில், ஜூன் 27-ம் தேதி ‘விதை உற்பத்தி மற்றும் விற்பனை வாய்ப்புகள்’ பற்றிய பயிற்சி நடைபெற உள்ளது. பயிற்சிக்கு `150 கட்டணம். முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு, செல்போன்: 99429-78526, தொலைபேசி: 0461-2269306

அறிவிப்பு

தண்டோரா பகுதியில் இடம்பெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் விவசாயிகள், நிகழ்ச்சிகள் குறித்த நிறைகுறைகளை உடனுக்குடன் தெரிவிக்க 044-66802927 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள். அங்கே கணினிக் குரல் வழிகாட்டும். அதற்கேற்ப 3 நிமிடங்களுக்குள், உங்கள் கருத்தைப் பதிவுசெய்யுங்கள். எதிர்முனையில் உங்களுடன் உரையாட யாரும் இருக்க மாட்டார்கள். எனவே, அந்த 3 நிமிடங்கள் முழுக்க முழுக்க உங்களுக்கே! அவசியமென்றால், நாங்களே உங்களைத் தொடர்புகொண்டு, மேலும் விவரங்களைப் பெற்றுக்கொள்வோம்.