Published:Updated:

நெய் இல்லா சிறுதானியம்... வீண்!

நெய் இல்லா சிறுதானியம்... வீண்!

‘நெய்யில்லா உண்டிபாழ்’ னு ஔவைப் பாட்டி ‘நல்வழி’ நூல்ல பாட்டு பாடி வெச்சிருக்காங்க.

நெய்யில்லா உண்டி பாழ்ங்கிற சங்கதி, சிறுதானிய உணவு விஷயத்துக்கு நூத்துக்கு நூறு பொருத்தமா இருக்கு. சிறுதானிய உணவுக்கு நல்ல மவுசு இருக்குனு தெரிஞ்சு, சிறுதானிய உணவுக் கடைகளைத் திறக்கிறவங்க எண்ணிக்கை அதிகமா இருக்கு. அதேசமயம், கொஞ்ச நாள்லயே, கடைக்கு மூடுவிழா நடத்துறவங்க எண்ணிக்கையும் பெருகிக்கிட்டே இருக்கு. இதுக்கு முக்கிய காரணம், சிறுதானிய உணவுகளைப் பதமா சமைக்கத் தெரியாததுதான்.

நெய் இல்லா சிறுதானியம்... வீண்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

சிறுதானிய உணவுங்க சமைக்கும்போது, நெய் சேர்த்து செஞ்சாதான், சுவையும் மணமும் தூக்கலா இருக்கும். வரகு சர்க்கரை பொங்கல், குதிரைவாலி வெண்பொங்கல், தினைப்பாயசம்னு எதை செஞ்சாலும் அதுல, நெய் இருக்கணும். சிறுதானிய உணவுல ஏன் நெய் சேர்க்கணும்?னு கேள்வி வரலாம். இங்கதான் தமிழ் மக்களோட மருத்துவ அறிவு மறைஞ்சிருக்கு. அதாவது, பெரும்பாலான சிறுதானிய உணவு வகைகளுக்கு சூட்டைக் கொடுக்கக் கூடிய தன்மை உண்டு. நெய்க்குக் குளிர்ச்சி கொடுக்கிற தன்மை உண்டு. அதனால, சிறுதானிய உணவுடன் நெய் சேர்க்கும்போது, உடம்புக்கும் தெம்பு கிடைக்கும், சாப்பாட்டுக்கும் ருசியைக் கொடுக்கும். நெய் கலந்து சமைக்காத சிறுதானிய உணவுங்க சுவையில்லாம, சும்மா சப்புனு இருக்கும். இனி ‘சிறுதானிய உணவுன்னா, கொஞ்சம் சுவை குறைவாத்தான் இருக்கும்’னு உங்களுக்கு நீங்களே சமாதானம் செய்துக்க வேணாம்.

சிறுதானிய உணவுங்களோட வயசு நூறு, இரு நூறு கிடையாது. ஆயிரத்துக்கும் மேல, அதனால நம்ம முன்னோருங்க, எந்தவிதத்துல சிறுதானியத்தைச் சமைச்சு ருசிச்சாங்களோ, அதேமாதிரி செய்தாதான் முழுபலனும் கிடைக்கும்.

சாப்பிடற உணவையே, மருந்தா சமைச்சு சாப்பிடற நுட்பம் நமக்கு கை வந்த கலை. இன்னைக்கு உலக வல்லரசுனு சொல்ற அமெரிக்காவே உணவு விஷயத்தில நம்மள காட்டிலும், கீழதான் இருக்கு. அதுக்கு உதாரணம்... ஒரு காலத்துல நம்ம சாப்பாட்டுல கட்டாயம் பயன்படுத்துற பெருங்காயத்தைப் பத்தி கீழ்த்தரமா பேசினாங்க. ‘நாற்றம்பிடித்த பிசின்/பிசாசின் மலம்’

(stinking gum/devil’s dung)னு கண்டபடி திட்டுனாங்க. அதே அமெரிக்காவுல ஸ்பானிஷ் விஷக்காய்ச்சல் (Spanish flu) வந்தப்ப, வாரத்துக்கு பத்தாயிரம் பேரு செத்து மடிஞ்சிருக்காங்க. அப்போ, நம்ம பெருங்காயம்தான் அமெரிக்க மக்களை விஷக்காய்ச்சலேருந்து காப்பாத்தியிருக்கு. இந்த நன்றியை மறக்காம,. அமெரிக்காவோட உணவு மற்றும் மருந்து நிர்வாக அமைப்பு (FDA), ‘ஸ்பானிஷ் ஃபுளு’ நோய்க்கு பெருங்காயம் பயனளிக்கும் மருந்துனு பெருமைப்படுத்தி அங்கீகரிச்சிருக்கு. ‘ஃபெருலா ஃபோட்டிடா’ (Ferula foetida)ங்கிற செடியில இருந்து கிடைக்கிற பால்தான் பெருங்காயம்.

பெருங்காயம், செரிமானத்துக்கு மட்டுமில்லீங்க... உடல்ல நோய், நொடி அண்டாம இருக்கவும் உதவி செய்யுது. மனுஷனுக்கு உதவுற மாதிரி, செடிகளுக்கும் பெருங்காயம் உதவுது. நெடுநெடுனு வளர்ந்த முருங்கை மரம் காய்ப்புக்கு வரலையா, கவலையை விடுங்க. ஒரு கைப்பிடி பெருங்காயத்தை தண்ணியில கலந்து மரத்தைச் சுத்தி ஊத்தினா, அடுத்த பருவத்துல முருங்கை மரம் காய்ச்சுக் குலுங்கும்.

கறியோட சுவைக்கு, அதைச் சமைக்கிற சட்டியும் (பாத்திரமும்) முக்கியமானது.

ஒரு காலத்துல கல்சட்டி மூலம்தான் கொழம்பு வைப்பாங்க. சுமாரா வைக்குற, கொழம்பு கூட சுவையா இருக்கும். ஆனா, இப்ப கல்சட்டியை பார்க்கிறதே அபூர்வமா இருக்கு. ஆனா, நட்சத்திர ஓட்டல்காரங்க, இந்த நுட்பத்தைத் தெரிஞ்சிக்கிட்டு, சூப்பு தொடங்கி, குழிப்பணியாரம் வரையிலும் கல்சட்டியில சமைக்கிறாங்க. சுவையான சமையலுக்கும், ஆரோக்கியத்துக்கும் உதவுற கல்சட்டிங்க இப்பவும் கூட சேலம் மாவட்ட பகுதியில குறைஞ்ச விலைக்கு விற்பனைக்குக் கிடைக்குது.

சேலம் மாவட்டம், நங்கவள்ளி, மாவுக்கல்மேடு பகுதியில இலகுத் தன்மையான பாறைங்க இருக்கு. இந்த பாறையில இருந்துதான், தோசைக்கல், பணியாரக்கல் செய்றாங்க. இதை விறகு அடுப்பு, காஸ் அடுப்புனு, எந்த அடுப்பிலும் வெச்சு சமையல் செய்யலாம். இந்தக் கல்பாத்திரம், அடுப்பு வெப்பத்தை சீரா உள்வாங்கும். இதனால, காரசாரமான மசாலாக்கள் உணவு முழுக்க சீரா பரவி, சுவையைக் கூட்ட உதவுது. இந்தக் கல்பாத்திரத்தில கறிக்குழம்பு வெச்சா, ருசியான ருசியா இருக்கும். இதனால, பல ஓட்டல் கடைக்காரங்க காத்திருந்து கல்பாத்திரத்தை வாங்கிட்டுப் போறாங்களாம். சுமாரான அளவைப் பொருத்து ஒரு கல்பாத்திரம் 100 முதல் 200 ரூபாய் வரையிலான விலையில கிடைக்குதுங்க.

மண்புழு மன்னாரு

ஓவியம்: ஹரன்