அனைவருக்கும் பசுமை வணக்கம்..!

ஜூன் 21, சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, உலகின் 193 நாடுகளில் யோகா பயிற்சி பிரதானமாக நடத்தப்பட்டு, இந்தியாவின் பாரம்பர்ய யோகாவை உலகமே பெருமையோடு திரும்பிப் பார்த்திருக்கிறது. இதற்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடி எடுத்துக்கொண்ட அக்கறை, அளப்பரியது. மோடியின் கோரிக்கையை ஏற்றுத்தான் இந்தத் தேதியை, “சர்வதேச யோகா தினம்” என்று ஐ.நா. சபையே அறிவித்தது.

பாரம்பர்யத்தின் மீது மோடி காட்டும் அக்கறைக்காக, இந்தியர்கள் மட்டுமல்ல, உலக அளவில் இருக்கும் பாரம்பர்ய ஆதரவாளர்கள் நிச்சயமாக அவருக்கு நன்றி சொல்லியே ஆக வேண்டும்.

அதேசமயம், ‘சுவர் இருந்தால்தான் சித்திரம் எழுத முடியும்’ என்பதைப் போல, இன்னொரு விஷயத்தையும் இந்தத் தருணத்தில் மோடி உணர வேண்டும். என்னதான் தலைகீழாக நின்று மணிக்கணக்கில் சிரசாசனம் செய்தாலும், சாப்பிடும் உணவு நஞ்சாக இருந்தால்... எந்த யோகாவாலும் போகும் உயிரைப் பிடித்து நிறுத்த முடியாது.

ஆம், இன்றைக்கு ரசாயன விவசாயம் மற்றும் மரபணு மாற்று விதைகளின் பெயரால், நம்முடைய விவசாயமே நஞ்சாக மாறிக் கிடக்கிறது. இந்திய மண்ணில் பாரம்பர்யமாக நம் முன்னோர்கள் செய்து வந்த மகத்தான, நுட்பமான இயற்கை வேளாண்மை ஒன்றின் மூலமே, இந்த நஞ்சிலிருந்து நாட்டு மக்களை, ஏன் உலக மக்களையே காப்பாற்ற முடியும். இதை மீட்டெடுத்தால், யோகாவைவிட நூறு மடங்கு சக்தி இந்தியாவுக்குக் கிடைத்துவிடும்.

இதை மட்டும் மோடி சாதித்தால், இம்மண்ணில் மண்புழுக்கள் உள்ள காலம் வரை அவரின் பேர் நிலைத்து நிற்கும்.

செய்வாரா மோடி?

-ஆசிரியர்