Published:Updated:

வகைவகையா செய்யலாம்... சிறுதானிய சமையல்!

வகைவகையா செய்யலாம்... சிறுதானிய சமையல்!

“கேழ்வரகுக் களியோடு மட்டன் குழம்பு அல்லது மீன் குழம்பைச் சேர்த்து ஒரு உருண்டை உருட்டி அப்டியே வாயில போட்டு விழுங்க வேண்டியதுதான். ஆஹா என்ன ருசி... என்ன ருசி... நினைக்கிறப்பவே நாக்குல எச்சில் ஊறுதுல்ல’’

அப்பத்தாவின் சமையல் ருசியை கண்முன் கொண்டுவரும் பிரபல ‘செஃப்’ தாமுவின் வீட்டுச் சமையலில் தினமும் தவறாமல் இடம்பிடிக்கின்றன சிறுதானியங்கள். சிறுதானியங்களின் பெருமைகளை, தாமுவின் வார்த்தைகளிலேயே கேளுங்கள்.

வகைவகையா செய்யலாம்... சிறுதானிய சமையல்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

‘‘நாங்கெல்லாம் நேச்சுரல் ஃபுட்ஸுக்கு மாறிட்டோம்னு சொல்றதுக்காகவே, இப்பல்லாம் சிறுதானியங்களைப் போட்டிப் போட்டு வாங்க ஆரம்பிச்சிருக்காங்க. உண்மையைச் சொல்லணும்னா நீரிழிவு நோய் உள்ளவங்களுக்கு மட்டுமில்லாம, வீட்ல இருக்கிற சின்னவங்க முதல் பெரியவங்க வரைக்கும் எல்லாருமே இந்த சிறுதானியங்களைச் சாப்பிடலாம். வரகரிசி சாதம் வடிச்சு தயிர் விட்டு கரைச்சு, கூடவே மோர் மிளகாயை ஓரமா கடிச்சு சாப்பிட்டுப் பாருங்க... அந்த சுவைக்கு நீங்க மயங்கி, நாளைக்கும் இதேதான் வேணும்னு அடம் பிடிப்பீங்க.

சிறுதானியம் பத்தின விழிப்பு உணர்வு இன்னைக்கு 25% பேருக்குதான் வந்திருக்கு. இதுக்குக் காரணம், ‘இது சர்க்கரை நோயாளிகளுக்கான உணவு’ங்கிற தவறான புரிதலும், எப்படி சமைக்கணும்னுகிறது தெரியாததும்தான்.

சிறுதானியங்கள் ஜீரணமாகாதுனு ஒரு தப்பான கருத்தும் மக்கள் மத்தியில இருக்கு. உண்மையைச் சொல்லணும்னா சிறுதானியங்கள்ல நார்ச்சத்து இருக்கிறதால சட்டுனு ஜீரணமாகி, மலச்சிக்கல் இல்லாம சுறுசுறுப்பா வேலை பாக்கலாம்.

சாமை, தினை, கம்பு, வரகரிசி, கேழ்வரகு, மக்காச்சோளம் உள்ளிட்ட சிறுதானியங்கள்ல 150 வகைக்கும் அதிகமான உணவு வகைகளைத் தயாரிக்க முடியும். சைவம் அசைவம் எதுவா இருந்தாலும், சமைக்க முடியும்’’ என்றபடி சிறுதானிய உணவுகளை செஃப் தாமு பட்டியல் போடப்போட, நாவில் எச்சில் ஊற ஆரம்பித்துவிட்டது நமக்கு.

உங்களுக்கு?

சிறுதானியங்களை சமைப்பது எப்படி? கவலையே வேண்டாம். ஜூன் 27-ம் தேதி, சென்னை, அடையாறு டாக்டர் எம்.ஜி.ஆர்.ஜானகி கலை அறிவியல் மகளிர் கல்லூரியில் நடக்கும் நல் உணவு ’சிறுதானிய விருந்து’ நிகழ்ச்சிக்குக் குடும்பத்துடன் வாருங்கள்... கலக்கலாக கற்றுக் கொள்ளுங்கள்!

பொன்.விமலா