இயற்கையை நேசிப்பவர்கள், தங்கள் இல்ல விழாக்களில் ‘பசுமை விகடன்’ இதழை அன்பளிப்பாகக் கொடுப்பது, சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. அந்த வகையில், சென்னையைச் சேர்ந்த வீட்டுத்தோட்ட ஆர்வலரும், ஹோம் எக்ஸ்னோரா அமைப்பின் தலைவருமான ‘பம்மல்’ இந்திரகுமார், சமீபத்தில் நடந்த தன் மகன் தங்கவேலின் திருமண விழாவில் ஆயிரம் பசுமை விகடன் இதழ்களை விழாவுக்கு வந்தவர்களுக்கு அன்பளிப்பாக அளித்துள்ளார்.

இதுகுறித்துப் பேசிய இந்திரகுமார், “பசுமை விகடன்தான் என் இதயம். இதில் விவசாயம் தொடர்பான பல்வேறு தகவல்கள் பொதிந்து கிடக்கின்றன. நகர்புறப் பகுதி மக்களிடமும் இயற்கை விவசாயம், மாடித்தோட்டம் குறித்த ஆர்வத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே இதனை வழங்கினேன். எங்கள் வீட்டில் மரக்கன்றுகள் கொடுக்கச் சொன்னார்கள். நான், ‘பசுமை விகடன் தரலாம்’ என்று சொல்லிவிட்டேன். ‘பசித்தவனுக்கு மீனைக் கொடுக்காதே... மீன் பிடிக்கக் கற்றுக்கொடு’ என்று சொல்வார்கள். அதைத்தான் நான் செய்தேன். இயற்கை விவசாயம் பற்றிய விழிப்பு உணர்வு ஏற்பட, ஏதோ என்னால் ஆன எளிமையான முயற்சி” என்றார்.

இதேபோல தஞ்சாவூர் மாவட்டத்தில் நடந்த காதணி விழாவிலும் பசுமை விகடன் வழங்கப்பட்டுள்ளது. பட்டுக்கோட்டை அருகே உள்ள உஞ்சியவிடுதியைச் சேர்ந்த தம்பதி, கோவிந்தராஜன், சித்ராதேவி ஆகியோர். இவர்கள், மே மாதம் 24-ம் தேதியன்று தங்களின் குழந்தைகள் பிரேம்குமார், ரித்திகா ஆகியோரின் காதணி விழாவில் பசுமை விகடன் இதழை வழங்கி அந்தப்பகுதி மக்களிடையே பெரும் விழிப்பு உணர்வை ஏற்படுத்தியுள்ளனர்.

இது குறித்து மகிழ்ச்சியோடு பேசிய கோவிந்தராஜன், ‘‘சிங்கப்பூர்ல இருக்கும் உறவினர்களான சரவணன், சுவாமிநாதன், தமிழ்நாட்டுல இருக்கிற ராஜ்குமார், சுரேஷ், சக்கரவர்த்தி, சசிக்குமார் இவங்கதான் விழாவுல பசுமை விகடனைக் கொடுக்க ஏற்பாடு செஞ்சாங்க. ஜாலியா இருக்க வேண்டிய வயசுல, இயற்கை விவசாயத்தையும் பசுமை விகடனையும் எல்லார்கிட்டயும் கொண்டு போக, முயற்சிகளை எடுத்துக்கிட்டு வர்றாங்க. இந்தக் காதணி விழாவுக்கு வந்திருந்தவங்கள்ல பல பேர், பசுமை விகடனைப் பார்த்து இன்ப அதிர்ச்சி அடைஞ்சாங்க. இது எனக்கு ரொம்ப மனநிறைவைக் கொடுத்திருக்கு’’ என்றார்.

சிங்கப்பூரில் இருக்கும் சரவணனிடம் பேசினோம். ‘‘எனக்கு சொந்த ஊர் பட்டுக்கோட்டை பக்கத்துல இருக்கிற கிருஷ்ணாபுரம். சிங்கப்பூர்ல டிரைவரா வேலை பார்த்துக்கிட்டு இருக்கேன். தமிழ்நாட்டுல, ‘பசுமை விகடன்’ வெளி வரும் நாள்லேருந்து ஓரிரு நாட்கள்லயே சிங்கப்பூர் கடைகள்லயும் கிடைச்சிடும். இங்கவுள்ள பலரையும் தீவிர வாசகரா மாத்திக்கிட்டிருக்கேன். இன்னும் இரண்டு ஆண்டுகள்ல இயற்கை விவசாயம் செய்யலாம்னு இருக்கேன்’’ என உற்சாகத்தோடு பேசினார்.

கு.ராமகிருஷ்ணன், துரை.நாகராஜன்