Published:Updated:

விவசாயப் போராளிகளுக்கு வீரவணக்கம்!

விவசாயப் போராளிகளுக்கு வீரவணக்கம்!

விவசாயப் போராளிகளுக்கு வீரவணக்கம்!

விவசாயப் போராளிகளுக்கு வீரவணக்கம்!

Published:Updated:

டந்த 35 ஆண்டுகளுக்கு முன் பல்வேறு போராட்டங்களில் கலந்துகொண்டு, போலீஸ் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் உயிர்நீத்த விவசாயிகளை நினைவு கூறும் விதமாக... ஆண்டு தோறும் ஜுலை 5-ம் தேதி அன்று விவசாய அமைப்புகளின் சார்பில் உழவர் தின விழா அனுசரிக்கப்படுகிறது. அந்த வகையில், இந்த ஆண்டும் பேரணி, பொதுக்கூட்டங்கள் என தனிதனியாக உழவர் தினவிழாவை அனுசரித்தன, பல்வேறு விவசாய அமைப்புகள்.

திருப்பூர் மாவட்டம் காரணம்பேட்டை: உழவர் உழைப்பாளர் கட்சியினர், பல்லடம் அடுத்துள்ள கே.அய்யம்பாளையம் கிராமத்தில் தியாகி முத்துக்குமாரசாமியின் நினைவு ஸ்தூபிக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள். தொடர்ந்து உழவாலயம் திடலில் கொடியேற்று விழாவும் நடைபெற்றது.

விவசாயப் போராளிகளுக்கு வீரவணக்கம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விழாவில் பேசிய பாரதிய கிஸான் யூனியன் தலைவர் யுத்வீர் சிங், ‘‘விவசாயிகளுக்கு அடையாளம் பச்சைத்துண்டு, அகில இந்திய அளவில் அதற்கு ஓர் அங்கீகாரத்தை ஏற்படுத்திக் கொடுத்தவர், மறைந்த விவசாயிகள் சங்கத் தலைவர் நாராயணசாமி நாயுடுதான். 40 ஆண்டுகளுக்கு முன்பு அவர் உருவாக்கிய பச்சைக்கொடி, இன்று உலக அளவிலான விவசாய அமைப்புக்களின் குறியீடாக விளங்கி நிற்கிறது” என்று பெருமையுடன் குறிப்பிட்டார்.

உழவர் உழைப்பாளர் கட்சியின் மாநிலத் தலைவர் செல்லமுத்து பேசும்போது, “நிலம் கையகப்படுத்தும் திட்டம் என்கிற பெயரில் பெற்ற தாய்க்கு நிகரான மண்ணை விவசாயிகளிடம் இருந்து பிடுங்கி, பன்னாட்டு கம்பெனிகளுக்கு தாரை வார்க்கும் மோடி அரசு, விவசாயிகளுக்கு விரோதமானது” என்று சாடினார்.

விவசாயப் போராளிகளுக்கு வீரவணக்கம்!

தொடர்ந்து பேசிய தி.மு.க மாநில விவசாயிகள் பிரிவு செயலாளர் டாக்டர் கே.பி.ராமலிங்கம், “பிரிந்து கிடக்கும் விவசாயச் சங்கங்கள் ஒன்று சேர வேண்டும். ஒரு குடையின் கீழ் இயங்கும் பொழுது விவசாயிகள் சங்கம் பலம் பெறும். கேட்டது கிடைக்கும். அரசியல் கட்சிகள் விவசாயிகளைத் தேடி வருவார்கள். அதற்கான முயற்சியில் நான் முழுமூச்சாக இறங்கப் போகிறேன்” என்றார்.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு: என்.எஸ்.பழனிச்சாமி தலைமையிலான விவசாயிகள் சங்கம் சார்பில் நடைபெற்ற உழவர் தின விழாவில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பேசிய மேதா பட்கர், “மக்களைச் சந்திக்காத முதல்வராக இருக்கிறார், தமிழக முதல்வர் ஜெயலலிதா. ஏதோ அரசியல் நிர்பந்தம் காரணமாகவே, நிலம் கையகப்படுத்தும் மசோதாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்துள்ளார். அம்பானிகளுக்கும் அதானிகளுக்கும் தரகர் வேலை பார்க்கிறார், நரேந்திர மோடி.

விவசாயப் போராளிகளுக்கு வீரவணக்கம்!

1894-ம் வருடம் ஆங்கிலேயர் கொண்டு வந்த நில மசோதா சட்டத்தில் கூட விவசாயிகளுக்குச் சாதகமான சில அம்சங்கள் இருந்தன. ஆனால், மோடி அரசின் இந்தச் சட்டம் நிறைவேறினால் விவசாயிகள் தங்கள் நிலத்தை இழப்பதைத் தவிர, வேறு வழியே இல்லை. அந்த அளவுக்கு ஒரு சர்வாதிகார சட்டமாக உள்ளது” என்று சீறினார்.

கோயம்புத்தூர், துடியலூர்: வழுக்குப்பாறை பாலு தலைமையிலான விவசாயிகள் சங்கம் சார்பில் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், ‘சொட்டுநீர்ப் பாசனப் பயிர்களுக்கு குழாய் வழி கொடுக்கப்படும் எளிதில் கரையும் திரவ உரங்களுக்கு மானியம் வழங்கப்படவேண்டும்’; தென்னை விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்படும் கொப்பரையிலிருந்து எண்ணெய் பிழிந்து ரேஷன் கடைகளுக்கு விநியோகம் செய்யவேண்டும்’, ‘கடந்த 6 ஆண்டுகளில் 31 லட்சத்து 11 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகை கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அதே போல் விவசாயக்கடன்களையும் தள்ளுபடி செய்யவேண்டும்’; ‘60 வயதைக் கடந்த சிறு, குறு விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களுக்கு மாதம் 5 ஆயிரம் ரூபாய் ஓய்வூதியம் வழங்கவேண்டும்’; ‘தமிழகத்தில் மீத்தேன் வாயு எடுக்கும் திட்டத்தை கைவிட வேண்டும்’ என்பது உள்ளிட்ட 21 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

விவசாயப் போராளிகளுக்கு வீரவணக்கம்!

கிருஷ்ணகிரி: பேராசிரியர் சின்னசாமி தலைமையில் நடைபெற்ற உழவர் தின அஞ்சலியில், பல்வேறு விவசாயப் போராட்டங்களில் கலந்து கொண்டு போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் பலியான 12 தியாகிகளின் குடும்பத்துக்கு தலா 25 ஆயிரம் ரூபாய் பணமுடிப்பு வழங்கப்பட்டது.

விவசாயப் போராளிகளுக்கு வீரவணக்கம்!

வேலூர்: டாக்டர்.சிவசாமி தலைமையில் உழவர் தின பேரணி நடைபெற்றது. பேரணி முடிவில் நடைபெற்ற கூட்டத்தில், ‘‘மின் கட்டண உயர்வுக்கு எதிராகப் போராடி சிறை சென்ற விவசாயிகளுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும். அரசுக்கு நிலம் கொடுத்த விவசாயிகளுக்குத் திரும்பவும், இழப்பீடு வழங்க வேண்டும்..’’ என்பது உள்ளிட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

காங்கேயம்: போராட்டத்தில் உயிர்நீத்த விவசாயிகளுக்கு, புரட்சிகர விவசாய முன்னணி சார்பில் வீர வணக்கக் கூட்டம் நடைபெற்றது. இதில் ‘‘தமிழக இயற்கை வளத்தைச் சுரண்டும், பன்னாட்டு முதலாளிகளை விரட்ட வேண்டும், விவசாயிகளின் உரிமைகளை பாதுகாக்க வேண்டும்’’ என்று கோஷங்கள் எழுப்பபட்டன.

விவசாயப் போராளிகளுக்கு வீரவணக்கம்!

தனித்தனியே நடந்த உழவர் தின விழா... ஒற்றுமையாக ஓரிடத்தில் நடைபெறுவது எப்போது?

ஜி.பழனிச்சாமி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism