Published:Updated:

80% மானியத்தில் சோலார்!

80% மானியத்தில் சோலார்!

80% மானியத்தில் சோலார்!

80% மானியத்தில் சோலார்!

Published:Updated:

காஞ்சிபுரம் மாவட்டம், காட்டுப்பாக்கம் வேளாண் அறிவியல் மையத்தில், கடந்த ஜூலை 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில்... வேளாண் உற்பத்தியைப் பெருக்கும் தொழில்நுட்பக் கருத்தரங்கு மற்றும் கண்காட்சி ஆகியன நடைபெற்றன. இந்நிகழ்வில் வேளாண் துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் ஏராளமான விவசாயிகள் கலந்துகொண்டனர்.

80% மானியத்தில் சோலார்!

கண்காட்சிக்குத் தலைமையேற்றுப் பேசிய வேளாண் அறிவியல் மையத்தின் தலைவர் மற்றும் பேராசிரியர் பா.குமரவேல், “சமீபகாலமாக சிறுதானியங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அது தொடர்பான ஆலோசனைகள் மற்றும் தேவையான தொழில்நுட்பப் பயிற்சிகள் ஆகியவற்றைத் தொடர்ந்து அளித்து வருகிறோம். விவசாயிகள் தங்களுக்கு எழும் விவசாய சந்தேகங்கள் தொடர்பாக, எங்கள் நிலையத்தை எப்போது தொடர்புகொண்டாலும் உதவத் தயாராக இருக்கிறோம். அதுமட்டுமல்லாமல், சிறந்த விவசாயிகளுக்குப் பரிசு கொடுத்தும் ஊக்கப்படுத்துகிறோம்” என்றார். 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சிறந்த விவசாயிகளுக்கு விருது வழங்கி, ‘கால்நடை வளர்ப்பில் புதிய தொழில்நுட்பங்கள்’ என்ற புத்தகத்தை வெளியிட்டுப் பேசிய, காஞ்சிபுரம், நாடாளுமன்ற உறுப்பினர் (அ.தி.மு.க) கு.மரகதம் குமரவேல், ‘‘இப்போது கிடைக்கும் உணவு சத்தானதாக இல்லை.

அதற்கு பதிலாக வெறும் மருந்தை மட்டும்தான் சாப்பிட்டுக் கொண்டு இருக்கிறோம். எனவே, விவசாயிகள் தயவு செய்து முடிந்தவரை இயற்கை விவசாயம் செய்யுங்கள். அப்போதுதான் உங்கள் நிலத்தையும் வருங்கால சமுதாயத்தையும் பாதுகாக்க முடியும்” என்றார்.

கண்காட்சியில் நோய்தடுப்பு முறைகள், கால்நடை வளர்ப்பு, கோழி வளர்ப்பு முறைகளும் தீவன முறைகளும், வேளாண்மைத் தொழில்நுட்பங்கள், மலைப் பயிர்கள் வளர்ப்பு, விவசாயத்தில் அரசு நிறுவனத்தின் பங்கு, மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் விற்பனை முறை, காய்கறிகள், மீன் வளர்ப்புத் தொழில்நுட்பங்கள், விவசாய மானியத் திட்டங்கள் உள்ளிட்ட விளக்க அரங்குகள் இடம் பெற்று இருந்தன. நெல் மற்றும் நிலக்கடலை சாகுபடியில் புதிய தொழில்நுட்பங்கள், தோட்டக்கலைத் தொழில்நுட்பங்கள், ஒருங்கிணைந்த பண்ணையத்தின் அவசியம், கால்நடைக்கழிவு வணிக மேலாண்மை, தோட்டக்கலைப்பயிர் பாதுகாப்பு முறைகள் போன்றவை குறித்த பயிற்சிகளும் அளிக்கப்பட்டன.

சோலார் பம்ப் செட்டுக்கு 80% மானியம்!

விழாவில் கலந்து கொண்ட நதிப் பள்ளத்தாக்குத் திட்டத்தின் தலைமைப் பொறியாளர் தமிழ்ச்செல்வன், புதிய மானியத் திட்டத்தைப் பற்றிய சில தகவல்களை நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.

‘‘சூரியஒளி மூலம் இயங்கக்கூடிய மோட்டார் பம்ப் செட் மற்றும் சூரிய ஒளி கூடார உலர்த்தி என இரண்டு மானியத் திட்டங்கள் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. ‘நிலையான சோலார் அமைப்பு’, ‘சூரியனின் நகர்வுக்கு ஏற்றவாறு திரும்பிக்கொள்ளும் சோலார் அமைப்பு’ என இரண்டு வகைகள் இருக்கின்றன. நிலையான சோலார் அமைப்புக்கு சுமார் நான்கு லட்சம் செலவாகும்.

சூரியனின் நகர்வுக்கு ஏற்றவாறு திரும்பிக்கொள்ளும் சோலார் அமைப்புக்கு சுமார் 5 லட்சம் செலவாகும். இந்த இரண்டு அமைப்புகளுக்கும் 80% மானியம் உண்டு. சூரிய ஒளி கூடார உலர்த்தியும் மானிய முறையில் வழங்கப்படுகிறது. சூரிய வெப்பத்தைப் பயன்படுத்தி விளைபொருட்களில் உள்ள ஈரப்பதத்தை நீக்கி, நீண்ட நாட்களுக்குப் பாதுகாப்பாக வைக்க முடியும். இதை அமைக்க மொத்தம் 4 லட்ச ரூபாய் செலவாகும். இது, 50% மானியத்தில் வழங்கப்படுகிறது. இந்த திட்டங்கள் மூலம் பயன் பெற அருகில் உள்ள வேளாண் பொறியியல் துறை அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளலாம்” என்று வழிகாட்டினார்.

 துரை.நாகராஜன்

 படங்கள்: பா.அருண்

85-வது வயதில் பட்டதாரி!

கோயம்புத்தூர், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் 45-வது நிறுவன நாள் விழா மற்றும் தொலைதூரக்கல்விப் பட்டத் தகுதி பெறும் விழா, கடந்த ஜூலை 1-ம் தேதி பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட தமிழக வேளாண்மைத்துறை அமைச்சர் வைத்தியலிங்கம், 5 பெண்கள் உள்பட 155 பேர்களுக்கு பட்ட சான்றிதழ்களையும் வழங்கினார்.

80% மானியத்தில் சோலார்!

துணைவேந்தர் ராமசாமி, அமைச்சர் வேலுமணி, துணை சபாநாயகர் ஜெயராமன், வேளாண்மைத் துறை ஆணையர் ராஜேஷ் லக்கானி வேளாண்மைத் துறை இயக்குநர் ராஜேந்திரன் உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசிய இவ்விழாவில், 25 ஆண்டுகால பணியைப் பூர்த்தி செய்த பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் பலருக்கு நினைவுப் பரிசுகளும் அமைச்சர்களால் வழங்கப்பட்டன.

80% மானியத்தில் சோலார்!

தொலைதூரக் கல்வி மூலம் பண்ணைத்தொழில் நுட்பவியல் (பி.எஃப்.டெக்) பட்டம் பெற்றவர்களில் ஒருவர், சுவாமி சுந்தரானந்தர். இயற்கை விவசாயத்தில் மிகுந்த ஈடுபாடுடைய இவரது வயது 85. ‘‘மனதளவில் இன்னும் நான் இளைஞன்தான். எங்கு சென்றாலும் சைக்கிளில்தான் செல்கிறேன். இந்தப் பட்டம் பெற்றது விசிட்டிங் கார்டில் அச்சடித்து அழகு பார்ப்பதற்கு அல்ல. அதைப் பயன்படுத்தி, இந்தச் சமூகத்துக்கு வழிகாட்ட வேண்டும் என்பதே எனது ஆசை” என்கிறார், சுந்தரானந்தர்.

ஜி.பழனிச்சாமி. படங்கள்: த.ஸ்ரீநிவாசன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism