Published:Updated:

கமிஷன் விவகாரம்... காணாமல் போன கட்டுமானம்!

கமிஷன் விவகாரம்... காணாமல் போன கட்டுமானம்!

கமிஷன் விவகாரம்... காணாமல் போன கட்டுமானம்!

கமிஷன் விவகாரம்... காணாமல் போன கட்டுமானம்!

Published:Updated:

ஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் அருகே உள்ள வேப்பத்தூர் கிராம விவசாயிகளின் நீண்டகாலக் கனவு... ‘அப்பகுதியில் ஒரு படுக்கை அணை கட்ட வேண்டும்’ என்பது. இவர்களது தொடர்முயற்சிகளின் பலனாகக் கடந்த ஆண்டுதான் தமிழக அரசு இதற்கான நிதியை ஒதுக்கியது. இதற்கான கட்டுமான பணிகள் ஒரு மாதத்துக்கு முன்பு தொடங்கப்பட்டன. ஆனாலும், ‘சாமி வரம் கொடுத்தும் பூசாரி கொடுக்காத கதை’யாகிக் கிடக்கிறது, அணைகட்டும் பணி. அரசியல்வாதிகள், அதிகாரிகள், ஒப்பந்ததாரர்களுக்கு இடையே ஏற்பட்ட கமிஷன் பிரச்னையால் ஆரம்ப நிலையிலேயே நிற்கிறது, அணையின் கட்டுமான பணி.

கமிஷன் விவகாரம்... காணாமல் போன கட்டுமானம்!

இதுகுறித்து நம்மிடம் பேசிய வேப்பத்தூர் கல்வெட்டு மாரியம்மன் விவசாயிகள் சங்கத்தின் தலைவர் வரதராஜன், ‘‘எங்க பகுதியில ஓடக்கூடிய காவிரி ஆற்றுல அதிகளவுல மணல் கொள்ளை போனதால, ஆற்றின் தரைப்பகுதி ரொம்ப பள்ளமாயிடுச்சு. இதனால் வாய்க்கால்களுக்கு தண்ணீர் ஏறலை. அதனால், ஆயிரத்து ஐநூறு ஏக்கர் அளவு நிலங்கள்ல தண்ணீர் முழுமையா கிடைக்காம விவசாயம் செய்ய கஷ்டபடுறாங்க. எங்க ஊருக்குப் பக்கத்துல

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கமிஷன் விவகாரம்... காணாமல் போன கட்டுமானம்!

உள்ள திருவிசைநல்லூர்ல காவிரி ஆற்றுல ஒரு படுக்கை அணை கட்டினா, வேப்பத்தூர் தலைப்பு வாய்க்கால்ல தண்ணீர் ஏறிடும். எங்க ஊர் பாசனத்துக்கு ஒரு நிரந்தர தீர்வு கிடைக்கும்னு ரொம்ப வருஷமா கோரிக்கை வெச்சிக்கிட்டு வந்தோம். போன வருஷம் சம்பா சாகுபடி தொடங்குறதுக்கு முன்னயே 7 ஆயிரம் மணல் மூட்டைகளை அடுக்கி வெச்சு, தண்ணீரைத் தேக்கி, எங்க ஊருக்குக் கொண்டு வர திட்டமிட்டோம். ஆனா, வெள்ளத்துல மணல் மூட்டை எல்லாம் பிச்சிக்கிட்டு போயிடுச்சு.

பிரச்னை பெருசான பிறகுதான் இங்கு படுக்கை அணை கட்ட, தமிழக அரசு 2 கோடியே 10 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கியது. டெண்டர் விட்டு, ஒரு மாசத்துக்கு முன்ன ஆரம்பகட்ட வேலைகளைத் தொடங்கினாங்க. ஆனா, நாலஞ்சு நாட்கள்தான் வேலை நடந்துச்சு. அதுக்கு பிறகு அப்படியே கிடப்புல போட்டுட்டாங்க. கட்டுமான பொருட்கள், இயந்திரங்கள், வாகனங்கள் எல்லாத்தையுமே ஒப்பந்தக்காரர் எடுத்துக்கிட்டு போயிட்டாரு. காரணத்தை விசாரிச்சப்பதான்... ஆளுங்கட்சிப் பிரமுகர்கள், அதிகாரிகள், ஒப்பந்தக்காரர் களுக்குள்ளாற கமிஷன் தொடர்பா நடந்த பிரச்னை தான்னு தெரிஞ்சுச்சு. மேட்டூர் அணையைத் திறந்தா, எங்க பகுதிக்கும் தண்ணீர் வந்துடும். ஆனா, அதுக்குள்ள அணை கட்டினாத்தான் எங்களுக்கு தண்ணீர் கிடைக்கும். இந்த வருஷம் அதுக்கு சாத்தியமில்லை” என வேதனைப்பட்டார்.
 
‘அவசரகதியில் கட்டினால் படுக்கை அணை தரமானதாகவும் உறுதிமிக்கதாகவும் இருக்காது’ என கவலை தெரிவித்தும், பணிகள் தொடராமல் இருப்பதைக் கண்டித்தும் இப்பகுதி விவசாயிகள் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.

தமிழக பொதுப்பணித்துறையின் தலைமைப் பொறியாளர் அசோகனிடம் இந்த விவகாரம் குறித்து பேசினோம். “நாங்க டெண்டர் விட்டுவிட்டு, குறைந்த விலையில் கட்டி தருவது யார் என்பதை சென்னையில் உள்ள ‘டெண்டர் அவார்ட் கமிட்டி’க்கு ஒப்புதலுக்காக அனுப்பி இருக்கோம். ஒப்புதல் கிடைச்சதும் வேலையைத் தொடங்குவாங்க” என்றவரிடம்,

கமிஷன் விவகாரம்... காணாமல் போன கட்டுமானம்!

‘‘அனுமதி இல்லாமல், நான்கைந்து நாட்களாக எப்படி பணி நடந்தது?” என்று கேட்டோம்.

‘‘ஆரம்ப கட்ட வேலையை மட்டும் குறைவா டெண்டர் போட்ட ஒப்பந்தக்காரரை வெச்சி செஞ்சோம்” என சமாளித்தபடி இணைப்பைத் துண்டித்துக் கொண்டார்.

இந்தப் பிரச்னையை தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் சுப்பையனின் கவனத்துக்குக் கொண்டு சென்றோம். “பணி ஆணை வழங்குவதில் துறை ரீதியாக பெற வேண்டிய சில அனுமதிகளைப் பெறுவதில் உள்ள நடைமுறை சிக்கல் காரணமாக தாமதமாகிறது. விரைவில் பணி தொடங்க ஆவன செய்கிறேன்” என்றார்.

என்னமோ நடக்குது... மர்மமா இருக்குது!

கு.ராமகிருஷ்ணன்

படங்கள்: க.சதீஸ்குமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism