Published:Updated:

தற்கொலை... கலங்கும் கர்நாடகா... கண்டுகொள்ளாத தமிழகம்!

தற்கொலை... கலங்கும் கர்நாடகா... கண்டுகொள்ளாத தமிழகம்!

தற்கொலை... கலங்கும் கர்நாடகா... கண்டுகொள்ளாத தமிழகம்!

தற்கொலை... கலங்கும் கர்நாடகா... கண்டுகொள்ளாத தமிழகம்!

Published:Updated:

‘பசவராஜ், மகேஷ், போகநந்தீஸ்வரப்பா... கரும்பு விவசாயிகள் வரிசையாக தற்கொலை’

-இத்ததைய செய்திகள் கர்நாடக மாநிலத்தில் கடந்த சில வாரங்களாக பட படக்க, கொதித்தெழுந்த விவசாயிகள், அரசாங்கத்துக்கு எதிராக போர்க்கொடி உயர்த்த, தற்போது பணிந்திருக்கிறது மாநில அரசு... தற்கொலைகளும் தணிந்திருக்கின்றன. 

விவசாயிகளுக்குத் தரவேண்டிய பணத்தைத் தராமல் இருக்க, பல்வேறு காரணங்களைச் சொல்லிக்கொண்டிருந்த ஆலைகள், ‘டன் 3,000 ரூபாய்க்கு விற்ற சர்க்கரை, 2,000 ரூபாய்க்கு இறங்கிவிட்டது. எப்படி பணம் பட்டுவாடா செய்வது’ என்று புதுக்காரணம் கண்டுபிடித்து விட்டார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தற்கொலை... கலங்கும் கர்நாடகா... கண்டுகொள்ளாத தமிழகம்!

நோட்டீஸுக்கு மேல் நோட்டீஸாக விடுகின்றன கடன் கொடுத்த வங்கிகள். வாழைத் தோட்டத்துக்குள் யானைக் கூட்டம் நுழைவதுபோல நுழைகின்றன, கந்து வட்டி படைகள். என்ன செய்வான் விவசாயி? அவனுக்குத் தெரிந்த ஒரே வழி தற்கொலை.

இதையடுத்துதான் விவசாயிகள் ஆக்ரோஷம் அடைந்தனர். கடந்த வாரம் திங்கள்கிழமை மாநிலத்தின் இரண்டாவது தலைநகர் என்றழைக்கப்படும் பெலகவி (பழைய பெயர் பெல்காம்) நகரில் சட்டசபைக் கூட்டம் நடைபெற்றது. விவசாயிகள் சங்கத் தலைவர் கோடியள்ளி சந்திரசேகர் மற்றும் கரும்பு உற்பத்தியாளர் சங்கத் தலைவர் குருபூர் சாந்தகுமார் தலைமையில் பத்தாயிரத்துக்கும் அதிகமான விவசாயிகள், பெலகவி நகர் வழியே செல்லும் பெங்களூரு-புனே தேசிய நெடுஞ்சாலையை மறித்து உட்கார்ந்தனர். எதிர்க்கட்சியினரும் சேர்ந்து கொண்டனர். 35 வயது இளம்விவசாயி சித்தராம லட்சுமண வரசாரே போராட்டக் களத்திலேயே விஷம் குடிக்க... போராட்டம் கலவரமானது.

சட்டசபையில் எதிர்க்கட்சிகள் அனைவரும் ஒன்றாகக் கைகோத்து முதல்வர் சித்தராமையாவை முற்றுகையிட... ‘விவசாயிகளுக்குத் தரவேண்டிய, ரூ.4,000 கோடி நிலுவைத் தொகையில், 926 கோடியை உடனே வழங்கவேண்டும். மீதமுள்ள தொகையை 3 மாதத்துக்குள் செலுத்தாவிட்டால், கரும்பு ஆலைகளில் இருக்கும் சர்க்கரையைப் பறிமுதல் செய்து விற்று, விவசாயிகளுக்குச் சேரவேண்டிய தொகை தரப்படும்’ என்று அரசு அதிரடியாக அறிவிக்க... கர்நாடக கரும்பு விவசாயிகளின் உயிர் பறிபோவது தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

தற்கொலை... கலங்கும் கர்நாடகா... கண்டுகொள்ளாத தமிழகம்!

தமிழ்நாட்டில்?

விவசாயக் கடன் பிரச்னையால் தற்கொலை செய்துகொள்ளும் கரும்பு, பருத்தி விவசாயிகளின் வீடு தேடிச் சென்று, ‘குடும்பப் பிரச்னையால் தற்கொலை’, ‘குடிகார விவசாயி தற்கொலை’ என்று கேவலப்படுத்தும் வேலையை மட்டும் செவ்வனே செய்து கொண்டிருக்கிறது, ஜெயலலிதா தலைமையிலான அரசு!

ம்... இதுதான், தேர்தலின் போது மூச்சுக்கு முந்நூறு தடவை, ‘உங்கள் சகோதரி... உங்கள் சகோதரி’ என்று மக்கள் முன்பாகச் சொல்லும் ஜெயலலிதா ஆட்சி நடத்தும் லட்சணம்! உண்மையில், ஆலை அதிபர்களுக்குத்தான் அவர் சகோதரி என்பதை இப்போதாவது மக்கள் புரிந்துகொண்டால் சரி.

தூரன் நம்பி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism