Published:Updated:

தீர்ந்தது, திருவைகுண்டம் பிரச்னை?

தீர்ந்தது, திருவைகுண்டம் பிரச்னை?

தீர்ந்தது, திருவைகுண்டம் பிரச்னை?

தீர்ந்தது, திருவைகுண்டம் பிரச்னை?

Published:Updated:

டமையைச் செய்யக்கூட, இனி அரசுகளுக்கு நீதி மன்றங்கள்தான் உத்தரவிட வேண்டும் போல இருக்கிறது!

தூத்துக்குடி மாவட்டம், தாமிரபரணி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது திருவைகுண்டம் அணை. இந்த அணை, 100 ஆண்டுகளுக்கும் மேலாக தூர்வாரப் படாமல் இருப்பதாகக் கூறி மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில், சென்னையில் இருக்கும் தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இதையடுத்து ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ ஜூலை 1-ம் தேதி பசுமைத் தீர்ப்பாயத்தில் ஆஜராகி வழக்காடினார்.

தீர்ந்தது, திருவைகுண்டம் பிரச்னை?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இதன்பிறகு, திருவைகுண்டம் அணையைப் போர்க்கால அடிப்படையில் உடனடியாகத் தூர்வார வேண்டும் என்று தீர்ப்பு வழங்கியது பசுமைத் தீர்ப்பாயம். இதோடு 15 நாட்களுக்கு ஒருமுறை பணிகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.

இதுகுறித்து ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோவிடம் பேசினோம். ‘‘திருவைகுண்டம் அணை, 1870-ம் ஆண்டு பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டது. இதன் மூலம் 25,560 ஏக்கர் நஞ்சை நிலம் பாசன வசதி பெறுகிறது. தூத்துக்குடி மாவட்ட மக்களுக்குக் குடிநீரையும் வழங்கி வருகிறது. ஆனால், 100 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த அணையில் தூர் வாரப்படாமல் வேலிக்காத்தானும், அமலிச் செடியும் வளர்ந்து, மண்ணும் மணலும் குவிந்து நிற்கிறது. வழக்கமாக 8 அடி உயரம் தேங்கி நிற்க வேண்டிய தண்ணீர், இன்று 1 அடி உயரத்துக்கு மட்டுமே தேங்கி நிற்கிறது. இதனால், ஆண்டுதோறும் 20 டி.எம்.சி. தண்ணீர் வீணாகக் கடலில் போய் கலக்கிறது.

இது சம்பந்தமாக நீதிமன்றத்தின் கதவுகளைத் தட்டினோம். ஜூன் 10-ம் தேதியே மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் அனுமதி கிடைத்துவிட்டது. மறுநாளே பணிகளைத் தொடங்கியிருக்க வேண்டும். ஆனால், தொடங்கவில்லை. பிறகு 22-ம் தேதி மாவட்ட ஆட்சியரிடம் கேட்டால், இன்னும் அரசின் உத்தரவு வரவில்லை என்கிறார்.

ஜூலை 1-ம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தவுடன், முறையாக டெண்டர் கூட விடாமல் பூஜைகள் போட்டு பணிகள் தொடங்கிவிட்டதாக தீர்ப்பாயத்தில் தமிழக அரசு தெரிவித்தது. எப்படியோ அணையை முறையாக தூர்வாரிக் கொடுத்தால் சரி. இதற்கு மேலும், தமிழக அரசு முறையாகப் பணிகளைச் செய்யவில்லையென்றால், திரும்பவும் விவசாயிகளோடு நாங்களே களத்தில் இறங்குவோம்’’ என்று எச்சரிக்கை கொடுத்தார்!

த.ஜெயகுமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism