Published:Updated:

தண்டோரா

தண்டோரா

தண்டோரா

தண்டோரா

Published:Updated:

‘தண்டோரா’ பகுதியில் இடம்பெறும் நிகழ்ச்சிகளில் கடைசி நேர மாறுதல்கள் ஏற்படலாம். எனவே, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், அமைப்புகள் ஆகியவற்றிடம் நிகழ்ச்சி குறித்த தகவல்களை தொலைபேசி அல்லது செல்போன் வாயிலாக, முன்கூட்டியே உறுதிசெய்த பின், பயண ஏற்பாடுகளைச் செய்யவும். 

- ஆசிரியர்

இலவசப் பயிற்சிகள்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வெள்ளாடு வளர்ப்பு!

ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிப்பாளையம் மைராடா வேளாண் அறிவியல் நிைலயத்தில், ஜூலை 14-ம் தேதி, ‘தேனீ வளர்ப்பு பயிற்சி’, 21-ம் தேதி ‘இயற்கை வழி விவசாயம்’, 22-ம் தேதி ‘வெள்ளாடு வளர்ப்பு’, 29-ம் தேதி ‘காளான் உற்பத்தித் தொழில்நுட்பம்’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு, தொலைபேசி: 04285-241626.

நாட்டுக்கோழி வளர்ப்பு!

சேலம், கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில், ஜூலை 21-ம் தேதி ‘நாட்டுக்கோழி வளர்ப்பு’, 28-ம் தேதி, ‘முயல் வளர்ப்பு’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு செய்துகொள்ளவும்.

தொடர்புக்கு,தொலைபேசி: 0427-2410408.

கறவை மாடு வளர்ப்பு!

தண்டோரா

திண்டுக்கல், கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில், ஜூலை 20-ம் தேதி, ‘கறவை மாடு வளர்ப்பு’,21-ம் தேதி, ‘செம்மறியாடு வளர்ப்பு’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன.

தொடர்புக்கு,தொலைபேசி: 0451-2460141

இயற்கைக் காய்கறி!

கடலூர் மாவட்டம், பண்ருட்டி சக்கரபாணி செட்டியார் திருமண மண்டபத்தில், ஜூலை 17-ம் தேதி, ‘இயற்கைக் காய்கறிகள் சாகுபடிக் கருத்தரங்கு’ நடைபெற உள்ளது. கடலூர், விழுப்புரம், புதுச்சேரி மாவட்ட விவசாயிகளுக்கு மட்டுமே முன்னுரிமை. முன்பதிவு செய்துகொள்ளவும்.

தொடர்புக்கு, செல்போன்: 78118-97510, 97903-27890.

பாரம்பர்ய விதைத் திருவிழா!

திருச்சி, தில்லைநகர் மக்கள் மன்றத்தில் ஜூலை 11-12 தேதிகளில், ‘பாரம்பர்ய விதை மற்றும் மூலிகைத் திருவிழா நடைபெற உள்ளது. இதில், கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி ஆகியவை நடைபெற உள்ளன. ‘பஞ்சகவ்யா’ நடராஜன், ‘ரீஸ்டோர்’ அனந்து, கால்நடை மருத்துவர் காசிபிச்சை ஆகியோர் கருத்துரை வழங்கவுள்ளனர். அனுமதி இலவசம். முன்பதிவு அவசியம். ஏற்பாடு: பசுமை சிகரம் அறக்கட்டளை.

தொடர்புக்கு, செல்போன்: 94428-16863, 99441-00656.

மக்காச்சோளம்!

தண்டோரா

காஞ்சிபுரம் மாவட்டம், காட்டுப்பாக்கம் வேளாண் அறிவியல் மையத்தில், ஜூலை 15-ம் தேதி, ‘இயற்கை உர உற்பத்தி’ 21-ம் தேதி ‘வீரிய ரக மக்காச்சோள சாகுபடித் தொழில்நுட்பங்கள்’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு செய்துகொள்ளவும்.

தொடர்புக்கு,தொலைபேசி: 044-27452371.

அறிவிப்பு

தண்டோரா பகுதியில் இடம்பெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் விவசாயிகள், நிகழ்ச்சிகள் குறித்த நிறைகுறைகளை உடனுக்குடன் தெரிவிக்க 044-66802927 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள். அங்கே கணினிக் குரல் வழிகாட்டும். அதற்கேற்ப 3 நிமிடங்களுக்குள், உங்கள் கருத்தைப் பதிவுசெய்யுங்கள். எதிர்முனையில் உங்களுடன் உரையாட யாரும் இருக்க மாட்டார்கள். எனவே, அந்த 3 நிமிடங்கள் முழுக்க முழுக்க உங்களுக்கே! அவசியமென்றால், நாங்களே உங்களைத் தொடர்புகொண்டு, மேலும் விவரங்களைப் பெற்றுக்கொள்வோம்.

பசுமைக் குழு

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism