Published:Updated:

விவசாயத்தைக் காக்க... விவசாயிகளாக மாறிய இளைஞர்கள்!

விவசாயத்தைக் காக்க... விவசாயிகளாக மாறிய இளைஞர்கள்!

‘‘எத்தனை உயர்ந்த இடத்தில் இருந்தாலும், பசி என்று வந்துவிட்டால்... உணவைத்தானே தேடிச் செல்கிறோம். அந்த உணவை நமக்குக் கொண்டு சேர்ப்பது விவசாயிகள் மட்டும்தான். பல்முனைத் தாக்குதலில் சிக்குண்டு தவிக்கும் விவசாயிகளைக் காப்பது, உணவு உண்ணும் ஒவ்வொருவரின் கடமை. அந்த வகையில் எங்கள் பங்களிப்பாக, விவசாயத்தை அழிவில் இருந்து காக்க களம் இறங்கியுள்ளோம்’’ என்று திடமாகப் பேசுகிறார்கள் ‘மரம் மதுரை’ எனும் அமைப்பினர்.

விவசாயத்தைக் காக்க... விவசாயிகளாக மாறிய இளைஞர்கள்!

மதுரையைப் பசுமைப்படுத்தி, விவசாயத்தை முன்னிலைப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் இந்த அமைப்பின் இளம் விவசாயிகள், இயற்கை உணவுகளின் முக்கியத்துவம் மற்றும் பயன்பாடு குறித்த விழிப்பு உணர்வை ஏற்படுத்தி வருகிறார்கள்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

“2013-ம் ஆண்டு முதல் இந்த அமைப்பைச் செயல்படுத்தி வருகிறோம். மதுரையைப் பசுமையாக்கும் முயற்சியாக, மதுரையைச் சுற்றி இருக்கும் கிராமங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் உதவியோடு மரக்கன்றுகளை நடவு செய்து பராமரித்து வருகிறோம். இந்தாண்டு இயற்கை உணவுகளை மக்களுக்குக் கொண்டு சேர்க்கும் முயற்சியில் இறங்கியுள்ளோம். இதுபோன்ற சத்தான உணவுகளை ஏற்றுக்கொண்டு ஜங்க் ஃபுட்டை தவிர்த்தாலே நோய்கள் பல பறந்து போகும்” என்கிறார், அமைப்பைத் தொடங்கிய பிரசாந்த் குமார்.

மதுரைக்கு அருகிலுள்ள கட்டம்மன்கோட்டை கிராமத்தில் பதினைந்து ஏக்கர் நிலத்தில், இயற்கை முறையில், முருங்கை, தக்காளி, கத்திரிக்காய், பீர்க்கன்காய், வெண்டைக்காய், அரைக்கீரை, பாலக்கீரை, சர்க்கரை வள்ளிக்கிழங்கு போன்றவற்றை விளைவித்து, விற்பனை செய்து வருகின்றனர் இந்த அமைப்பினர்.

இதைப் பற்றி பேசிய கல்லூரி மாணவர் அலெக்ஸ், “எங்க அப்பா அம்மா ரெண்டு பேருமே விவசாயம்தான் செய்றாங்க. ஆனா, விளைச்சல் அதிகமா வரணும்னு ரசாயனம் பயன்படுத்துவாங்க. இதனால சத்தெல்லாம் போகுது. இந்த முறையை மாத்தி, எல்லா விவசாயிகளையும் இயற்கை விவசாயத்துக்குக் கொண்டு வர்றதுதான் எங்க குறிக்கோள்’’ என்கிறார்.

‘‘விடுமுறை கிடைக்கும் போதெல்லாம் இந்தப் பண்ணைக்கு ஓடி வந்துடுவேன். இந்த மண்வாசனை, மனநிம்மதி எங்க போனாலும் கிடைக்காது’’ என்கிறார் தர்மபுரி அரசுப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றும் சோபனா.

அ.பார்வதி

படங்கள்: நா.ராஜ முருகன்