Published:Updated:

அக்ரி இன்டெக்ஸ்... மவுசு கூடிய மாடித்தோட்டம்!

அக்ரி இன்டெக்ஸ்... மவுசு கூடிய மாடித்தோட்டம்!

வீன தொழில்நுட்பங்களை விவசாயிகளுக்கு அறிமுகம் செய்யும் வகையில் ஆண்டுதோறும் கோயம்புத்தூர், கொடீசியா அரங்கில் வேளாண் கண்காட்சி நடப்பது வழக்கம். இந்த ஆண்டுக்கான ‘கொடிசியா அக்ரி இன்டெக்ஸ்-2015’ ஜூலை 17-ம் தேதி துவங்கி, 20-ம் தேதி வரை நடைபெற்றது.

அக்ரி இன்டெக்ஸ்... மவுசு கூடிய மாடித்தோட்டம்!

மவுசு கூடிய மாடித்தோட்டம்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

மாடித்தோட்டத்துக்குத் தேவையான மண்கொத்தி முதல் நெல், கரும்பு அறுவடைக்குத் தேவையான இயந்திரங்கள் வரை விதவிதமான கருவிகள் கண்காட்சியில் இடம் பெற்றிருந்தன.

இந்த ஆண்டு கண்காட்சியில் மாடித்தோட்டம் அமைப்பது தொடர்பான அரங்குகளை ஆர்வமுடன் பார்வையிட்டனர் மக்கள். மாடித்தோட்டத்துக்குத் தேவையான காய்கறி விதைகள், பைகள், சிறிய கருவிகள் போன்றவை விற்பனையில் சக்கை போடு போட்டன. வைக்கோலைக் கட்டு கட்டும் இயந்திரம், மக்காச்சோளத் தட்டையைப் பொடியாக்கும் இயந்திரம், கரும்பு வெட்டும் இயந்திரங்கள் ஆகியவை விவசாயிகளை அதிகம் கவர்ந்தன.

அக்ரி இன்டெக்ஸ்... மவுசு கூடிய மாடித்தோட்டம்!

தானியங்கி பவர் டில்லர்!

சில வகையான பவர் டில்லர்களில் உழவு செய்யும்போது அதன் பின்னாலே நடந்து செல்ல வேண்டும். இதனால், பவர் டில்லர் ஓட்டுவதற்கான ஆட்கள் கிடைப்பதில்லை. இந்தப் பிரச்னைக்குத் தீர்வு சொல்லும்விதமாக 150 மீட்டர் தூரம் வரை ரிமோட் மூலம் இயங்க வைக்கக்கூடிய செட்டாப் பாக்ஸை உருவாக்கி இருந்தது, ஒரு நிறுவனம். இது டில்லர் விவசாயிகளை ஆச்சர்யப்பட வைத்தது.

அக்ரி இன்டெக்ஸ்... மவுசு கூடிய மாடித்தோட்டம்!

உள்வாடகைக்குப் போன பல்கலைக்கழக அரங்குகள்!

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்துக்கு அதிகமான அளவில் அரங்குகள் ஒதுக்கப்பட்டிருந்தாலும், அவற்றில் பெரும்பகுதி பெயர் அளவுக்கு மட்டுமே செயல்பட்டது. இவர்களுக்காக ஒதுக்கப்பட்டப் பல அரங்குகளைத் தனியார் நிறுவனங்கள் ஆக்கிரமித்திருந்தன. சம்பந்தப்பட்ட துறைகளின் பேராசிரியர்களைப் பார்ப்பதே அரிதாக இருந்தது.

அக்ரி இன்டெக்ஸ்... மவுசு கூடிய மாடித்தோட்டம்!

பல்கலைக்கழக அரங்கில் பல பிரச்னைகள் இருந்தாலும், ஒருங்கிணைந்த பண்ணையம் மாதிரித் திடல், காய்கறிச் செடி வளர்ப்புத் திடல், நுண்ணீர்ப் பாசன மாதிரி விளக்கத் திடல், காளான் குடில் போன்றவை மிகச் சிறப்பாக அமைக்கப்பட்டிருந்தமை, பாராட்டுக்குரியது.

தேங்காய்நாரில் விவசாயம்!

இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தின் சார்பில் முதன்முறையாக அதிக அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தாலும், அவை மக்கள் மத்தியில் சென்று சேரவே இல்லை. பல்வேறு நர்சரிகள் சார்பில் பூச்செடிகள், கொய்யா, தென்னை, மலைவேம்பு மாதிரியான நாற்றுகள் விற்பனை செய்யப்பட்டன. மண்ணில்லாமல் தேங்காய்நார் கொண்டு செய்யும் விவசாய முறைகளும் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன.

அக்ரி இன்டெக்ஸ்... மவுசு கூடிய மாடித்தோட்டம்!

பயோ குழப்பம்!

இயற்கை விவசாயத்துக்குப் பெருகி வரும் ஆதரவை அடுத்து, ‘பயோ’ என்ற பெயரில் பல்வேறு இடுபொருள் தயாரிப்பு நிறுவனங்கள் கடை விரித்திருந்தன. உண்மையில் பயோ என்ற பெயரில் விற்பனை செய்பவை அனைத்தும் இயற்கை இடுபொருட்கள்தானா என்ற சந்தேகத்தைப் பல விவசாயிகள் எழுப்பிச் சென்றனர். கண்காட்சியில், ‘பசுமை விகடன்’ சார்பில் அமைக்கப்பட்டிருந்த அரங்குக்கு தினமும் திருவிழாக் கூட்டம் போல  விவசாயிகள் வந்து, ஆசிரியர் குழுவினருடன் உரையாடி, பல்வேறு ஆலோசனைகளை வழங்கிச் சென்றது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

அக்ரி இன்டெக்ஸ்... மவுசு கூடிய மாடித்தோட்டம்!

பருத்தி எடுக்கும் கருவி!

பருத்தி விவசாயிகளுக்குப் பெரும் பிரச்னையாக இருப்பது, செடியில் இருந்து பஞ்சை எடுப்பதுதான். அதற்கான கருவியை ‘பருத்தி அபிவிருத்தி மற்றும் ஆராய்ச்சிக் கழகம்’ கண்டுபிடித்திருக்கிறது. பேட்டரி மூலம் இயங்கும் இந்தக் கருவியின் விலை
7 ஆயிரத்து 500 ரூபாய். இதைக் கொண்டு 8 மணி நேரம் வரை வேலை செய்யலாம். ஆட்களைக் கொண்டு பருத்தி எடுக்கும்போது, சருகு வர வாய்ப்புள்ளது. இந்தக் கருவி மூலம் பருத்தியில் பஞ்சு எடுக்கும்போது, சருகின்றித் தூய்மையான பருத்தியை எடுக்க முடியும். இதனால், 20 முதல் 30 சதவிகிதம் வரை விவசாயிகளுக்கு லாபம் அதிகரிக்குமாம். கண்காட்சியில் இடம்பெற்ற இக்கருவியை விவசாயிகள் ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர்.

பசுமைக்குழு

படங்கள்: தி.விஜய், த.ஸ்ரீனிவாசன்