Published:Updated:

தமிழக காய்கறிகளுக்கு கேரளாவில் தடையா?

தமிழக காய்கறிகளுக்கு கேரளாவில் தடையா?

‘தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு வரும் காய்கறிகளில் தடை செய்யப்பட்ட பூச்சிக்கொல்லிகளின் படிமங்கள் இல்லை, என்கிற சான்றிதழ் பெற்று வரும் காய்கறி வாகனங்களை மட்டும் அனுமதிக்கலாம்’ என கேரள மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. இந்த விஷயம் தமிழக விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்த, அரசியல்வாதிகளும் அறிக்கைப் போர் ஆரம்பித்துவிட்டனர்.

தமிழக காய்கறிகளுக்கு கேரளாவில் தடையா?

இந்நிலையில் என்ன உண்மை என்பதை அறிவதற்காக கேரளாவுக்குக் காய்கறிகளை அனுப்பி வரும் மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த வியாபாரி சுந்தரமூர்த்தியிடம் பேசினோம். ‘‘உப்பு, மீன், கொஞ்சம் நெல் தவிர மற்ற எல்லாவிதமான அத்தியாவசியப் பொருட்களுக்கும் கேரளக்காரர்கள் தமிழகத்தைத்தான் எதிர்பார்த்தாக வேண்டும். அங்குள்ள சீதோஷ்ண நிலைக்கு ஆண்டில் 4 மாதங்கள் மட்டுமே காய்கறி உற்பத்தி செய்ய முடியும். எனவே, உடனடியாகத் தமிழகக் காய்கறிகளை அவர்களால் தடுத்து நிறுத்த முடியாது. தமிழகக் காய்கறிகள் தடை இல்லாமல் வழக்கம் போல் கேரளாவுக்குச் சென்றுகொண்டுதான் இருக்கின்றன” என்று சொன்னார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

எர்ணாகுளத்தைச் சேர்ந்த விவசாயி பப்பி குட்டன், ‘‘நஞ்சில்லா உணவு குறித்த விழிப்பு உணர்வு கேரள மாநிலத்தில் வேகமெடுத்துள்ளது. மாடித்தோட்டங்கள் அதிகரித்து வருகின்றன. ஒரு கட்டத்தில் கேரளா காய்கறி உற்பத்தியில் தன்னிறைவு அடைந்துவிடும். அதற்கு 10 ஆண்டுகள் பிடிக்கலாம். அதுவரை தமிழகத்தை நம்பித்தான் ஆக வேண்டும்” என்றார்.

தமிழக காய்கறிகளுக்கு கேரளாவில் தடையா?

நம் மாநிலத்தில் விளையும் காய்கறிகளின் விஷத்தன்மை மற்றும் பூச்சிக்கொல்லிகளின் வீரியம் குறித்துக் கோயம்புத்தூரிலிருக்கும் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழத்தின் துணைவேந்தர் டாக்டர். கு.ராமசாமியிடம் கேட்டபோது, ‘‘9 வகைப் பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்த மத்திய அரசு தடை விதித்துள்ளது. அந்த வகைப் பூச்சிக்கொல்லிகள் விற்பனை அங்காடிகள் எதிலும் விற்பனை செய்யப்படவில்லை என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. இதை வைத்துப் பார்க்கும்போது, தமிழ்நாட்டில் விளையும் காய்கறிகளின் தரம் நன்றாகவே உள்ளது. இதற்குத் தரச்சான்று தேவையில்லை. கேரளா அரசின் எச்சரிக்கை ஏற்கக்கூடியதும் அல்ல” என்றார்.

பல்கலைக்கழகத்தின் பயிர் பாதுகாப்பு மைய இயக்குநர் ராமராஜூ, “தமிழக காய்கறிகளை பரிசோதனை செய்ததில் 96 சதவிகித காய்கறிகள் தரமானவை என்ற முடிவு வந்துள்ளது. அதேசமயம் 4 சதவிகிதம் காய்கறிகளில் அங்கீகரிக்கப்பட்ட பூச்சிக்கொல்லிகளின் நச்சுத்தன்மை கூடுதலாக இருந்ததும் கண்டறியப்பட்டது” என்று சொன்னார்.

ஜி.பழனிச்சாமி