Published:Updated:

தண்டோரா

தண்டோரா

‘தண்டோரா’ பகுதியில் இடம்பெறும் நிகழ்ச்சிகளில் கடைசி நேர மாறுதல்கள் ஏற்படலாம். எனவே, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், அமைப்புகள் ஆகியவற்றிடம் நிகழ்ச்சி குறித்த தகவல்களை தொலைபேசி அல்லது செல்போன் வாயிலாக, முன்கூட்டியே உறுதிசெய்த பின், பயண ஏற்பாடுகளைச் செய்யவும். 

- ஆசிரியர்

இலவசப் பயிற்சிகள்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

காளான் உற்பத்தி!

ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிப்பாளையம் மைராடா வேளாண் அறிவியல் நிலையத்தில், ஜூலை 29-ம் தேதி ‘காளான் உற்பத்தித் தொழில்நுட்ப பயிற்சி’ நடைபெற உள்ளது. முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு, தொலைபேசி: 04285-241626.

முயல் வளர்ப்பு!

தண்டோரா

சேலம், கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில், ஜூலை 28-ம் தேதி, ‘முயல் வளர்ப்பு பயிற்சி’ நடைபெற உள்ளது. முன்பதிவு செய்துகொள்ளவும்.

தொடர்புக்கு, தொலைபேசி: 0427-2410408.

தீவன உற்பத்தி!

சேலம் மாவட்டம், பொட்டனேரியில் உள்ள மேச்சேரி ஆடு ஆராய்ச்சி நிலையத்தில், ஆகஸ்ட் 10-ம் தேதி ‘தீவன உற்பத்தியை அதிகப்படுத்த மண்ணின் வளத்தை இயற்கை வழியில் செரிவூட்டுதல்’ பயிற்சி நடைபெற உள்ளது. சேலம் மாவட்ட விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு, தொலைபேசி: 04298-262023.

நாட்டுக்கோழி வளர்ப்பு

தண்டோரா

நாமக்கல், வேளாண் அறிவியல் நிலையத்தில் ஆகஸ்ட் 11-ம் தேதி ‘நாட்டுக்கோழிக் குஞ்சுகளில் இறப்பைக் கட்டுப்படுத்துதல் மற்றும் பராமரிப்பு’, 12-ம் தேதி ‘சோளம், மக்காச்சோளம் மற்றும் சிறுதானிய பயிர்கள் சாகுபடி’, 17-ம் தேதி ‘சின்னவெங்காயம் சாகுபடி முறைகள்’, 18-ம் தேதி ‘செம்மறியாடு மற்றும் வெள்ளாடுகளில் நோய் மேலாண்மை மற்றும் தடுப்பூசி’ போன்ற பயிற்சிகள் நடைபெற உள்ளன. பயிற்சிக்கு வரும் விவசாயிகள், ஆதார் எண்ணைக் கண்டிப்பாக முன்பதிவு செய்யவும்.

தொடர்புக்கு, தொலைபேசி: 04286-266345, 266244, 266650.

கட்டணப் பயிற்சி

கலந்துரையாடல்!

கன்னியாகுமரி மாவட்டம், விவேகானந்த கேந்திரம், இயற்கை அபிவிருத்தித் திட்டத்தில், ஆகஸ்ட் 26 முதல் 28-ம் தேதி வரை ‘உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் கலந்துரையாடல் பயிற்சி’ நடைபெற உள்ளது. இப்பயிற்சியில் விவசாயிகள் தங்களின் உற்பத்திப் பொருட்களை கண்காட்சியில் வைத்துக் கொள்ளலாம். பயிற்சிக் கட்டணம் 100 ரூபாய். தங்குமிடம் இலவசம். முன்பதிவு செய்துகொள்ளவும்.

தொடர்புக்கு, தொலைபேசி: 04652-246296.

அறிவிப்பு

தண்டோரா பகுதியில் இடம்பெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் விவசாயிகள், நிகழ்ச்சிகள் குறித்த நிறைகுறைகளை உடனுக்குடன் தெரிவிக்க 044-66802927 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள். அங்கே கணினிக் குரல் வழிகாட்டும். அதற்கேற்ப 3 நிமிடங்களுக்குள், உங்கள் கருத்தைப் பதிவுசெய்யுங்கள். எதிர்முனையில் உங்களுடன் உரையாட யாரும் இருக்க மாட்டார்கள். எனவே, அந்த 3 நிமிடங்கள் முழுக்க முழுக்க உங்களுக்கே! அவசியமென்றால், நாங்களே உங்களைத் தொடர்புகொண்டு, மேலும் விவரங்களைப் பெற்றுக்கொள்வோம்.

பசுமைக் குழு