Published:Updated:

‘‘டாடா, அம்பானி வேண்டாம்... விவசாயிகளைக் கூப்பிடுங்கள்!’’

‘‘டாடா, அம்பானி வேண்டாம்... விவசாயிகளைக் கூப்பிடுங்கள்!’’

‘‘டாடா, அம்பானி வேண்டாம்... விவசாயிகளைக் கூப்பிடுங்கள்!’’

‘‘டாடா, அம்பானி வேண்டாம்... விவசாயிகளைக் கூப்பிடுங்கள்!’’

Published:Updated:

திருச்சி மாவட்டம், தாயனூர் கிராமத்தில் அமைந்துள்ள தேசிய வாழை ஆராய்ச்சி நிலையத்தில்... கடந்த  ஆகஸ்ட் 28-ம் தேதி, 22-ம் நிறுவன நாள் விழா மற்றும் கிஸான் மேளா (கண்காட்சி) ஆகியவை நடைபெற்றன. நிகழ்ச்சியில், தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் விவசாயிகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

கண்காட்சியைத் துவக்கி வைத்துப் பேசிய இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தின் பொது இயக்குநர் ஐயப்பன், “சேட்டிலைட் மாதிரியான அறிவியல் தொழில்நுட்பங்களில் முன்னேறிக் கொண்டிருக்கும் நம் நாட்டில், வாழையில் விவசாயிகள் செய்யும் சாதனைகள் வியக்க வைக்கின்றன. டெல்லியில், ‘கலந்துரையாடலுக்கு அம்பானியைக் கூப்பிடுங்கள், டாடாவை கூப்பிடுங்கள்’ என்கின்றனர். நான், ‘விவசாயிகளைக் கூப்பிடுங்கள்’ என்கிறேன்.

‘‘டாடா, அம்பானி வேண்டாம்... விவசாயிகளைக் கூப்பிடுங்கள்!’’

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உலகம் முழுக்க பல நாடுகளில் வாழை சாகுபடி செய்து ஏற்றுமதி செய்யப்படுகிறது. அவர்களுடன் வாழை உற்பத்தியிலும், தரத்திலும் தமிழ்நாட்டில் இருக்கும் தேனி, கோயம்புத்தூர் மாவட்ட விவசாயிகள் போட்டி போடுகின்றனர். பல பயிர்கள் விவசாயிகளை நஷ்டப்படுத்தினாலும்... வாழை, பெரும்பகுதி விவசாயிகளை லட்சாதிபதியாக மாற்றுகிறது. வாழையை சரியான தொழில்நுட்பங்களுடன் சாகுபடி செய்தால், தண்ணீர் பற்றாக்குறை உள்ள இடங்களிலும் சாகுபடி செய்யலாம். குஜராத் மாதிரியான மாநிலங்களில் படித்த இளைஞர்கள் அதிகமான அளவுக்கு விவசாயம் செய்வதற்கு ஆர்வம் காட்டுகின்றனர். தமிழ்நாட்டிலும் இளைஞர்கள் விவசாயத்தில் ஆர்வம் காட்ட வேண்டும்” என்றார்.

சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பேசிய திருச்சி மகளிர் தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் சிறப்பு அலுவலர் முனைவர் ஜவகர்லால், “இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம் வழங்கிய ஒரு சங்கிலித்தொடர் திட்டத்தை, சத்தியமங்கலம் பகுதியில் இருக்கும் விவசாயிகளிடம் செயல்படுத்தினோம்.

இந்தத் திட்டத்தில் 3,500 மல்லிகைப் பூ விவசாயிகளை ஒரு குழுவாக இணைத்தோம். அந்தக்குழுக்கள் மல்லிகைப் பூக்களைப் பறித்து, கோவை மார்க்கெட்டுக்கு அனுப்பி விடுவார்கள். அதை வாங்கும் பெரும் வியாபாரிகள் வீடுகளில் இருக்கும் பெண்கள் மூலம் பூக்களைச் சரமாகக் கட்டி கொச்சின் வழியாக துபாய்க்கு அனுப்புகின்றனர். இதனால், விவசாயிகளுக்குக் கூடுதல் லாபம் கிடைக்கும். இதுபோல வாழை சாகுபடியிலும், விற்பனையிலும் பல யுக்திகளைக் கையாண்டால், விவசாயிகளுக்கு லாபம் அதிகமாகக் கிடைக்கும்” என்றார்.

படங்கள்: தே.தீட்ஷித்

சிறந்த வாழை விவசாயிகளுக்கான விருது!

‘‘டாடா, அம்பானி வேண்டாம்... விவசாயிகளைக் கூப்பிடுங்கள்!’’

கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த சதாகாசரி மற்றும் ஸ்ரீகண்டா, ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த உமாமகேஷ்வரா நாயுடு, பொள்ளாச்சியைச் சேர்ந்த ரத்தினசபாபதி, சத்தியமங்கலத்தைச் சேர்ந்த செல்வம், புதுக்கோட்டை மாவட்டம், கந்தவர்க்கோட்டையைச் சேர்ந்த செல்லமுத்து, தேனி கே.கே.பட்டியைச் சேர்ந்த கண்ணன், கடலூர் மாவட்டம், வழிச்சோதனைப்பாளையத்தைச் சேர்ந்த ராஜா ஆகியோருக்கு ‘சிறந்த வாழை விவசாயிகளுக்கான என விருதுகள்’ வழங்கப்பட்டன.

தேனியைச் சேர்ந்த ப்ரவீன், திருச்சியைச் சேர்ந்த ஜெயந்தி ஆகியோருக்கும் கிராமாலயா தொண்டு நிறுவனம், தேனியைச் சேர்ந்த மருதர் எண்டர்பிரைசஸ் ஆகிய நிறுவனங்களுக்கு ‘சிறந்த வாழை தொழில்நுட்ப வல்லுநர் விருது’ வழங்கப்பட்டது.

`பசுமை விகடன்’ இதழில் வெளியான, ‘வயல்வெளிப் பள்ளி’ தொடரில் வாழைத் தொழில்நுட்பங்களைத் தொகுத்து விவசாயிகளுக்குக் கொண்டு சேர்த்த தலைமை நிருபர் காசி.வேம்பையனுக்கு வாழைத் தொழில்நுட்பங்களைப் பரவச் செய்தமைக்கான விருது வழங்கப்பட்டது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism