Published:Updated:

தூர்வாரும் பெயரில் மணல் கொள்ளை! கொதிக்கும் விவசாயிகள்..

தூர்வாரும் பெயரில் மணல் கொள்ளை! கொதிக்கும் விவசாயிகள்..

தூர்வாரும் பெயரில் மணல் கொள்ளை! கொதிக்கும் விவசாயிகள்..

தூர்வாரும் பெயரில் மணல் கொள்ளை! கொதிக்கும் விவசாயிகள்..

Published:Updated:

டந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாக ஸ்ரீவைகுண்டம் அணை தூர்வாரப்படாததைக் கண்டித்து தூத்துக்குடி மாவட்ட ம.தி.மு.க செயலாளர் ஜோயல், தேசியப் பசுமைத் தீர்ப்பாயத்தில் பொது நல வழக்கு தொடர்ந்ததையடுத்து... கடந்த மே மாதம், ‘அணையைத் தூர் வார வேண்டும்’ என பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டது. ஆனால், அரசு இதைக் கண்டுகொள்ளாமல் இருந்த நிலையில், ‘நாங்களே தூர் வாருவோம்’ என வைகோ அறிவித்த பிறகு, அவசரகதியில் தூர் வாரும் பணியில் ஈடுபட்டது, அரசு இயந்திரம்.

தூர்வாரும் பெயரில் மணல் கொள்ளை! கொதிக்கும் விவசாயிகள்..

அப்பணிகள் ஒருபக்கம் இருக்க... ‘தூர் வாருகிறோம் என்ற பெயரில் மணல் கொள்ளை நடக்கிறது’ எனக்குற்றம்சாட்டி, கடையடைப்பு, சாலை மறியல் என போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள், விவசாயிகள்.  போராட்டங்களின் ஒரு பகுதியாக கடந்த ஆகஸ்ட் 31-ம் தேதி புதுக்குடி பாலத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு மற்றும் 221 விவசாயிகள் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இவ்விவகாரம் குறித்து நல்லக்கண்ணுவிடம் பேசினோம், “இந்த அணை மூலம் 25 ஆயிரத்து 560 ஏக்கர் நன்செய் நிலம் பாசன வசதி பெறுகிறது. கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாக அணை தூர் வாரப்படாததால் முப்போகமாக இருந்த விளைச்சல் ஒரு போகமாகக் குறைந்து விட்டது. 8 அடி உயரம் தேங்கி நிற்க வேண்டிய தண்ணீர், ஒரு அடி உயரம் கூட தேங்காமல் ஆண்டுக்கு 20 டி.எம்.சி அளவு தண்ணீர் வீணாகக் கடலில் கலக்கிறது. தற்போது தூர்வாரும் பணி தொடங்கப்பட்டுள்ளது. ஆனால், அணையின் கடைசிப் பகுதியிலிருந்து முகப்புப் பகுதிக்கு தூர்வாரி வருகிறார்கள். வண்டல் மண் அதிகம் இருக்கும் முகப்பு பகுதியிலிருந்து கடைசிப்பகுதி வரை தூர்வாரினால்தான் பயனாக இருக்கும். கடைசிப்பகுதியில் மணல் அதிகம் இருப்பதால் அதை அள்ளுவதற்காகத்தான் அப்பகுதியிலிருந்து தூர்வாருகிறார்கள். 

தூர்வாரும் பெயரில் மணல் கொள்ளை! கொதிக்கும் விவசாயிகள்..

‘அணைப்பகுதியிலுள்ள 18 மதகுகளிலுள்ள கழிவுகளை மட்டுமே எடுக்க வேண்டும். அப்பகுதியில் தண்ணீரை சுத்திகரிக்கும் மணலை அள்ளக்கூடாது. மணல் அள்ளுவது கேமரா மூலம் கண்காணிக்கப்பட வேண்டும். தூர்வாரும் பணியைக் கண்காணிக்க நேர்மையான குழு அமைக்கப்பட வேண்டும். வண்டல் மண்ணை இப்பகுதி விவசாயிகளுக்கு இலவசமாக வழங்க வேண்டும்’ ஆகியவைதான் எங்கள் கோரிக்கை. பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால்தான் கடையடைப்பு, சாலைமறியலில் ஈடுபட்டோம்” என்றார்.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் ரவிக்குமாரிடம் பேசினோம், ‘‘அணையில் 5.1 கி.மீ தூரத்துக்குத் தூர்வாருவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கு 28 நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. அதாவது, உறைகிணறுகளைச் சுற்றி 500 மீட்டர் தூரத்துக்கு மணல் அள்ள அனுமதியில்லை, காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரைதான் மணல் அள்ள வேண்டும். 6 மணிக்குப் பிறகோ, இரவு நேரங்களிலோ மணல் அள்ளுவது கண்டுபிடிக்கப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.... போன்ற நிபந்தனைகள் உள்ளன. மேலும், மணல் அள்ளும் பணியைக் கண்காணிக்க ஜி.பி.எஸ் கருவி பொருத்தப்பட்டுள்ளது.

தூர்வாரும் பெயரில் மணல் கொள்ளை! கொதிக்கும் விவசாயிகள்..

தூர்வாரும் பணி தொடர்பான அறிக்கை 15 நாட்களுக்கு ஒரு முறை பசுமைத்தீர்ப்பாயத்தில் சமர்ப்பிக்கப்படும். பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை, காவல்துறை என 10 துறைகள் அடங்கிய குழு தூர்வாரும் பணியைக் கண்காணித்து வருகிறது. தூர் அள்ளுவது சம்பந்தமான விவசாயிகளின் கோரிக்கையை அரசின் கவனத்துக்குக் கொண்டு செல்கிறோம்’’என்றார்.

இ.கார்த்திகேயன்

படங்கள்: ஏ.சிதம்பரம்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism