Published:Updated:

நீங்கள் கேட்டவை: மர வேலைக்கு மட்டுமல்ல, மருந்துக்கும் உதவும் மகோகனி!

நீங்கள் கேட்டவை: மர வேலைக்கு மட்டுமல்ல, மருந்துக்கும் உதவும் மகோகனி!

நீங்கள் கேட்டவை: மர வேலைக்கு மட்டுமல்ல, மருந்துக்கும் உதவும் மகோகனி!

நீங்கள் கேட்டவை: மர வேலைக்கு மட்டுமல்ல, மருந்துக்கும் உதவும் மகோகனி!

Published:Updated:

‘‘குறைந்த செலவில் பாலிதீன் ஷீட் மூலம் சாண எரிவாயு தயாரிக்க விரும்புகிறோம். இதன்

நீங்கள் கேட்டவை: மர வேலைக்கு மட்டுமல்ல, மருந்துக்கும் உதவும் மகோகனி!

விவரத்தைச் சொல்லுங்கள்?’’

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

க.சாந்தகுமாரி, ஈரோடு.

பாலிதீன் ஷீட் மூலம் இயற்கை எரிவாயு கலன் அமைத்து வரும், சேலத்தைச் சேர்ந்த அர்ஜுன் மோகன் பதில் சொல்கிறார்.

‘‘விவசாயிகள் மத்தியில் முன்பு சாண எரிவாயுத் தயாரிப்புக்கு நல்ல வரவேற்பு இருந்தது. ஆனால், சாண எரிவாயுக்கலன் அமைக்க, 90 ஆயிரம் ரூபாய் வரை செலவாவதோடு, அதைப் பராமரிப்பதும் சிரமமாக உள்ளது. இதுபோன்ற சில காரணங்களால் சாண எரிவாயு உபயோகம் படிப்படியாகக் குறைந்து வருகிறது. ஆனால், இந்தச் சிரமங்களைத் தவிர்க்கும் விதத்தில்தான் பாலிதீன் ஷீட் மூலம் சாண எரிவாயுக்கலன் தயாரிக்கப்படுகிறது. இரண்டு மாடுகள் இருந்தால், ஒரு கன மீட்டர் அளவுக்குத்  தினமும் எரிவாயு உற்பத்தி செய்யலாம். நான்கு பேர் கொண்ட குடும்பத்துக்கு சமையல் செய்ய, இந்த அளவு எரிவாயு போதும்.

நீங்கள் கேட்டவை: மர வேலைக்கு மட்டுமல்ல, மருந்துக்கும் உதவும் மகோகனி!

பாலிதீன் ஷீட் மூலம் கலன் அமைக்க, 8,000 ரூபாய்தான் செலவாகும். செங்கல், சிமென்ட்... எதுவும்

நீங்கள் கேட்டவை: மர வேலைக்கு மட்டுமல்ல, மருந்துக்கும் உதவும் மகோகனி!

தேவை இல்லை. நான்கரை அடி சதுரத்தில் 4 அடி ஆழத்துக்குக் குழி எடுத்துக் கொள்ள வேண்டும். அதில், பாலிதீன் ஷீட்டைப் போட்டு கலன் அமைத்து விடலாம். இதில், சாணத்தைக் கரைத்து ஊற்றினால்... சில நாட்களில் மீத்தேன் வாயு உற்பத்தியாகி விடும். பாலிதீன் ஷீட் பலூன் போல உப்பி விடும். அதில் இருந்து அடுப்புக்கு, இணைப்புக் கொடுத்து எரிக்கலாம். ‘ஸ்லர்ரி’ (slurry) என்று சொல்லப்படும், கழிவு வெளியேறுவதற்கும் இக்கலனில் அமைப்பு உள்ளது. இந்தக் கழிவு அருமையான இயற்கை உரம். காய்கறிக் கழிவுகள், கோழி இறைச்சிக் கழிவுகள், மனிதக் கழிவுகள், பசும்புல், மல்பெரி உட்பட மட்கக்கூடிய எல்லா பொருட்களையும் பயன்படுத்தி எரிவாயு உற்பத்தி செய்யலாம். ஆனால், சிட்ரிக் அமிலம் உள்ள எலுமிச்சை, ஆரஞ்சு பழத் தோல் மற்றும் எலும்புகளை மட்டும் பயன்படுத்தக் கூடாது. பாலிதீன்ஷீட் எரிவாயுக் கலன் 7 ஆண்டுகள் வரை உழைக்கும் திறன் வாய்ந்தது. சேலம், கோயம்புத்தூர், ஈரோடு... போன்ற நகரங்களில் இந்த பாலிதீன் ஷீட் எரிவாயுக் கலன் கிடைக்கிறது.’’

‘‘இயற்கை முறையில் விபூதி தயாரிப்பது பற்றி சொல்லுங்கள்?’’

தே.சின்னசாமி, வல்லம்.

நீங்கள் கேட்டவை: மர வேலைக்கு மட்டுமல்ல, மருந்துக்கும் உதவும் மகோகனி!

மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூரில் உள்ள கோ-விஞ்ஞான் கேந்திராவைச் சேர்ந்த சுனில் மான்சின்ஹா பதில் சொல்கிறார்.

‘‘பால் கொடுக்கும் மாடுகள் மட்டுமல்ல, பால் வற்றிய மாடுகள், இனி பயன்படாது என்று கைவிடப்பட்ட மாடுகளின் கழிவுப் பொருட்கள் மூலம் விபூதி, பற்பொடி, அர்க்.... போன்றவற்றைத் தயாரிக்க முடியும். இயற்கை விபூதி தயாரிக்க நாட்டுப்பசு மாட்டின் சாணம்தான் சிறந்தது. 20 கிலோ சாணத்தை கல், மண் இல்லாமல் சுத்தப்படுத்தி, சின்னச் சின்ன வடை போல தட்டி, ஒரு வாரம் வெயிலில் காய வைக்க வேண்டும். காய்ந்த வறட்டியை துணியில் மூட்டையாகக் கட்டி, பூச்சிகள் தாக்காத அளவுக்கு உயரமான இடத்தில் கட்டித் தொங்கவிட வேண்டும். மூன்று மாதங்களுக்குப் பிறகு, விபூதி தயாரிக்கத் தொடங்கலாம்.

முதலில் 10 அடிக்கு 10 அடி அளவில் செங்கற்களைப் பரப்பி, அதன்மீது நெல் கருக்காவைப் (பதர்) பரப்ப வேண்டும். பிறகு, காயவைத்த வறட்டியைத் தண்ணீரில் நனைத்து, செங்கற்கள் மீது பரப்பி, மீண்டும் கருக்காவைப் பரப்ப வேண்டும். இப்படி, கருக்கா, வறட்டி என்று மாற்றி மாற்றி, பரப்பி கோபுரம் போல, பத்து அடுக்கு உருவாக்க வேண்டும். அதன் உச்சியில் திருநீற்றுப் பச்சிலைச் செடியை வைத்து, சிறிய சூடத்தை எரித்து, மூட்டம் போட வேண்டும். தீ எரியாமல், புகையுமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். மூன்று நாட்கள் வரை, இப்படியே புகைந்து கொண்டிருக்கும். நன்கு வெந்த நிலையில் கெட்டியான விபூதியாகக் கிடைக்கும். இதை நன்கு இடித்துத் தூளாக்கி, இரவு நேரத்தில் மூன்று நாட்கள் பரப்பி வைத்து, நன்கு சலித்துப் பயன்படுத்தலாம்.

நீங்கள் கேட்டவை: மர வேலைக்கு மட்டுமல்ல, மருந்துக்கும் உதவும் மகோகனி!

20 கிலோ சாணத்தில் இருந்து, 2 கிலோ விபூதி கிடைக்கும். ஒரு கிலோ விபூதி குறைந்தபட்சம் 200 ரூபாய்க்கு விற்பனையாகிறது. தமிழ்நாட்டில் கோசாலை நடத்துபவர்கள், விபூதி, பற்பொடி... போன்றவற்றைத் தயாரித்து பசுக்கள் மூலம் நல்ல லாபம் எடுத்து வருகிறார்கள்.’’

‘‘மகோகனி விதைகள் மருத்துவக் குணம் கொண்டவை என்று கேள்விப்பட்டோம். இது உண்மையா?’’

க.சுந்தரம், பல்லடம்.

நீங்கள் கேட்டவை: மர வேலைக்கு மட்டுமல்ல, மருந்துக்கும் உதவும் மகோகனி!

கோயம்புத்தூரில் உள்ள வன மரபியல் மற்றும் மரப்பெருக்கு நிறுவனத்தின் விதைத் தொழிற் நுட்பவியல் துறை, விஞ்ஞானி முனைவர்.ம.வே.துரை பதில் சொல்கிறார்.

‘‘சமீபகாலத்தில் அறிவியல் அறிஞர்கள் நூற்றுக்கும் மேற்பட்ட தாவரங்களுக்கு நீரிழிவு நோயினைக் கட்டுப்படுத்தும் தன்மை உள்ளதைக் கண்டறிந்துள்ளனர். அந்தத் தாவரங்களின் வரிசையில் மகோகனியும் ஒன்றாகும். உலக சுகாதார அமைப்பு (WHO), பாரம்பர்ய மருத்துவத்தின் மூலம் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துவதற்கு மகோகனியைப் பரிந்துரை செய்திருக்கிறது. இதிலிருந்தே அம்மரத்தின் பயனை நாம் அறிந்துகொள்ளலாம்.

தென்அமெரிக்காவைத் தாயகமாகக் கொண்ட இந்தத் தாவரம் உயரமாக வளரக்கூடிய மரமாகும். இந்தியாவைப் பொறுத்தவரை, நம்மை ஆட்சி செய்த கிழக்கிந்திய கம்பெனியரால் கொல்கத்தாவில் உள்ள தாவரவியல் பூங்காவில் 1795 -ல் இது அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் பின்னர் மகோகனி இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் மரத்துக்காகவும், அலங்கார மரமாகவும் பயிரிடப்பட்டது. தற்போது மிகவும் பழமையான மகோகனி மரங்கள் அதிக அளவில் தென்இந்தியாவில் குறிப்பாக கேரளா, தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவில் காணப்படுகின்றன.

நீங்கள் கேட்டவை: மர வேலைக்கு மட்டுமல்ல, மருந்துக்கும் உதவும் மகோகனி!

சிறந்த மரவேலைகளுக்கு மட்டுமல்ல, மருந்துப் பொருளாகவும் பயன்படுகிறது. நீரிழிவு நோய், மூட்டுவலி, வயிற்றுப்போக்கு, காய்ச்சல், மலேரியா, இருமல் மற்றும் ரத்த அழுத்தம் ஆகிய நோய்களைக் குணப்படுத்த, மலேசிய மக்கள் பல தலைமுறைகளாக இம்மரத்தைப் பயன்படுத்தி வருகின்றனர். இதன் பலன்களை உணர்ந்ததால், ‘சர்வ ரோக நிவாரணி’ (All Cure Medicine) என்று மலேசிய மக்களும், ‘தாவரங்களின் ராணி’ என்று தென் பசிபிக் கடலில் இருக்கும் சாலமன் தீவு மக்களும் அழைக்கின்றனர். மலேசியாவில் மகோகனி விதையிலிருந்து எடுத்த கஷாயத்தைத் தோல் வியாதிகளுக்கும், வெட்டுப் புண்ணைக் குணப்படுத்துவதற்கும் பயன்படுத்துகின்றனர்.  சாலமன் தீவு மக்கள் நீரிழிவு, ரத்த அழுத்தம், ஒவ்வாமை, நாளமில்லாச் சுரப்பிகளின் சீர்கேடு... போன்றவற்றைக் குணப்படுத்த இதன் விதைகளைப் பயன்படுத்தி வருகின்றனர்.

வெள்ளை நிறத்தில் உள்ள காய்ந்த மகோகனி விதைகள் மிகவும் கசப்புத்தன்மை உடையவை. தினமும் ஒன்று அல்லது இரண்டு முழு மகோகனி விதைகளைச் சாப்பிடலாம். இதை உணவு உட்கொள்வதற்கு அரை மணி நேரம் முன்பாக உண்டு வந்தால், நீரிழிவு கட்டுக்குள் வந்துவிடும். மேலும் மகோகனி விதையில், புற்றுநோய், நெஞ்சுவலி, குடல்புண் போன்ற நோய்களையும் குணப்படுத்தும் தன்மை உள்ளது. மகோகனி பழம், வைட்டமின்கள்- A, B1, B6, D மற்றும் E நார்ச்சத்து, ஃபோலிக் அமிலம், புரதம் மற்றும் மாவுச்சத்து போன்ற ஊட்டச் சத்துக்களையும் உடலுக்கு அளிக்கின்றன.

தமிழ்நாட்டில் உள்ள நாட்டுமருந்து கடைகளில் தேன் கொட்டை என்ற பெயரில் இந்த விதைகள் விற்பனை ஆகின்றன. 100 கிராம் ரூ.10 க்கு விற்பனை செய்யப்படுகிறது.’’

தொடர்புக்கு, செல்போன்: 94459-44288.

புறா பாண்டி

படங்கள்: தி.விஜய், ரமேஷ் கந்தசாமி

விவசாயம், கால்நடை, மீன்வளம் மற்றும் சுற்றுச்சூழல் என்று பல துறைகள் பற்றி வாசகர்களின் சந்தேகங்களுக்கான பதில்களை உரிய நிபுணர்களிடம் பெற்றுத் தருவதற்காகவே ‘புறா பாண்டி’ சும்மா ‘பறபற’த்துக் கொண்டிருக்கிறார். உங்கள் கேள்விகளை ‘நீங்கள் கேட்டவை’, பசுமை விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-2. என்ற முகவரிக்கு தபால் மூலமும் pasumai@vikatan.com என்ற முகவரிக்கு இ-மெயில் மூலமும் அனுப்பலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism