Published:Updated:

22 மாவட்டங்களில் மாதிரி காய்கறி கிராமங்கள்!

22 மாவட்டங்களில் மாதிரி காய்கறி கிராமங்கள்!

22 மாவட்டங்களில் மாதிரி காய்கறி கிராமங்கள்!

22 மாவட்டங்களில் மாதிரி காய்கறி கிராமங்கள்!

Published:Updated:

டந்த ஆகஸ்ட் 26-ம் தேதி நடைபெற்ற சட்டமன்றக் கூட்டத் தொடரில், 2015-16ம் ஆண்டுக்கான

22 மாவட்டங்களில் மாதிரி காய்கறி கிராமங்கள்!

வேளாண்மைத்துறையின் மானியக் கோரிக்கையின், சில அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார் வேளாண்துறை அமைச்சர் வைத்தியலிங்கம். அவற்றில் சில...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

• நெல்வயல்களில் பசுந்தாள் உரப் பயிர்களை ஊடுபயிர்களாக சாகுபடி செய்து மண்வளத்தை மேம்படுத்தவும், கரும்புப் பண்ணைக் கழிவுகளை உயிர் உரமாக மாற்றி மறுசுழற்சி செய்து மீண்டும் பயன்படுத்தவும் ஒருங்கிணைந்த மண்வள மேலாண்மைத் திட்டம்.

• திருப்பூர் மாவட்டத்தில் புதிய மண் ஆய்வுக் கூடம். புதுக்கோட்டை மாவட்டம், குடுமியான்மலை மத்திய கட்டுப்பாட்டு ஆய்வகம் உள்ளிட்ட 30 மண் பரிசோதனை நிலையங்கள் மற்றும் 16 நடமாடும் மண் பரிசோதனை நிலையங்கள் அதி நவீன ஆய்வு உபகரணங்கள் மூலம் வலுப்படுத்தப்படும்.

22 மாவட்டங்களில் மாதிரி காய்கறி கிராமங்கள்!

• தர்மபுரி, புதுக்கோட்டை, சிவகங்கை, கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் 12,500 ஏக்கர் அமில வகை நிலங்களைச் சீர்திருத்துவதற்குத் தேவையான சுண்ணாம்பு அல்லது டோலோமைட் 50 சதவிகிதம் மானியத்தில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
 22 மாவட்டங்களில், 5 கோடி செலவில் மாதிரி காய்கறி கிராமங்கள்.

• கடலூர், தர்மபுரி ஒழுங்கு முறை விற்பனைக் கூடங்களில் குளிர்பதனக் கிடங்குகள் அமைக்கப்படும். திருக்கோவிலூர், கள்ளக்குறிச்சி, உளுந்தூர்பேட்டை, நாமகிரிப்பேட்டை, தர்மபுரி, இலுப்பூர், திருச்செந்துறை மற்றும் செங்குன்றம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் தலா 60 மெட்ரிக் டன் எடைத்திறன் கொண்ட எடை மேடைகள் அமைக்கப்படும்.

22 மாவட்டங்களில் மாதிரி காய்கறி கிராமங்கள்!

• நாமக்கல் மாவட்டத்தில் சிறுதானியம் மற்றும் பயறு வகைகள்; புதுக்கோட்டை மற்றும் தேனி மாவட்டத்தில் தென்னை; விருதுநகர் மாவட்டத்தில் மா; திருப்பூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் மக்காச்சோளம்; புதுக்கோட்டை மாவட்டத்தில் அங்ககச் சிறுதானியங்கள்; நாகப்பட்டினம் மாவட்டத்தில் மக்காச்சோளம் மற்றும் பயறு வகைகள் என எட்டு உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள் உருவாக்கப்படும்.

• கன்னியாகுமரி மாவட்டம், தோவாளையில் நவீன மலர் வணிக வளாகம், ஈரோடு, மதுரை மற்றும் திண்டுக்கல் அக்மார்க் ஆய்வுக் கூடங்கள் அமைக்கப்படும்.

துரை.நாகராஜன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism